என் மலர்
மிதுனம்
வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை
06.4.2025 முதல் 12.4.2025 வரை
பல புதிய மாற்றங்கள் உண்டாகும் வாரம். ராசி மற்றும் சுக ஸ்தான அதிபதி புதன் வக்ர நிவர்த்தி ஆவதால் எண்ணங்கள், யோசனைகள், சிந்தனைகள் அனைத்தும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.புத்தி தெளிவு ஏற்பட்டு செயல்திறன் அதிகரிக்கும்.மலை போல் வந்த துயர்கள் பனி போல் விலகும்.தொழில் வகையில் அரசு அதிகாரிகளை அனுசரித்து ஆதாயம் பெறுவீர்கள். மன உளைச்சலான பணியிலிருந்து விடுபட்டு புதிய நல்ல பணியில் சேருவீர்கள். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும்.வீடு, வாகன வசதிகள் மேம்படும். அழகு, ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு விரும்பிய வேலையில் சேர உத்தரவு வரும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எதிர்பார்த்த குடியுரிமை கிடைக்கும். வீட்டில் திருமணம் மற்றும் சுப வைபவங்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். தம்பதி களுக்குள் ஒற்றுமை உணர்வு அதிக மாகும். மகா விஷ்ணுவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






