என் மலர்
மிதுனம்
2025 தை மாத ராசிபலன்
மிதுனம்
காரியத்தை திட்டமிட்டபடி முடிக்கும் மிதுன ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதன் புதன், தன் வீட்டை தானே பார்ப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இதுவரை தடையாக இருந்த பாகப்பிரிவினைகள் தானாக நடைபெறும். 10-ல் ராகு பலம் பெற்றிருப்பதால், தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
மிதுன - செவ்வாய்
தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் தன ஸ்தானத்தில் வக்ரம் பெறுவதால், உத்தியோகத்தில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும். நண்பர்கள் மூலம் கிடைக்கும் நல்ல தகவல் மனதை உற்சாகப்படுத்தும். ஆரோக்கியப் பாதிப்புகள் அகல, நீங்கள் எடுத்த புது மருத்துவம் கைகொடுக்கும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு, புதிய சந்தர்ப்பங்கள் கைகூடும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகளும் சிறப்பாக நடைபெறும்.
மகர - புதன்
உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்' என்பார்கள். எனவே உங்கள் ராசிநாதன் புதன், 8-ம் இடத்திற்கு வருவது நன்மைதான். வருமானம் திருப்தியாக இருக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். திடீர் திருப்பங்கள் பலவும் வந்துசேரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக்கொடுப்பர். வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் வருவதை முன்னிட்டு, 'புதிய கிளைத்தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
கும்ப - புதன்
தை 23-ந் தேதி கும்ப ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன், பாக்கிய ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிடைக்கும். நல்ல தகவல்கள் வந்த வண்ணமாக இருக்கும். உத்தியோகத்தில் தடைப்பட்டு வந்த பதவி உயர்வு, இந்த காலகட்டத்தில் கிடைக்க வாய்ப்புண்டு. தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்துகொள்வதில், சகோதரர்களுக்குள் இணக்கம் உருவாகும்.
குரு வக்ர நிவர்த்தி
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு, தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு வக்ர நிவர்த்தி பெறுவதால் அதிக நன்மைகள் நடைபெறும். குறிப்பாக விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். கலக்கங்கள் படிப்படியாக மாறும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. இல்லத்தில் நல்ல காரியங்கள் படிப்படியாக நடைபெறும். இடமாற்றம் பற்றிய எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு இழந்த வாய்ப்பை மீண்டும் பெறும் யோகம் உண்டு. மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு சுபச்செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை உயரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 15, 16, 20, 21, பிப்ரவரி: 1, 2, 4, 5, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.






