என் மலர்tooltip icon

    மிதுனம்

    2024 மார்கழி மாத ராசிபலன்

    நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் என்று சொல்லும் மிதுன ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 10-ல் ராகு பலம் பெற்றிருக்கிறார். எனவே புதிய முயற்சிகளில் வெற்றி, புனிதப் பயணங்கள், பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.

    நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நேரம் இது. மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். சென்ற மாதத்தைக் காட்டிலும் சிறப்பான பலன் கொடுக்கும் மாதம் இது.

    செவ்வாய்- சுக்ரன் பார்வை

    கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். 6, 11-க்கு அதிபதியான செவ்வாய், சுக்ரனைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் திடீர் முன்னேற்றம் உண்டு. வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். குடும்பச் சூழ்நிலை மனநிறைவைத் தரும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும்.

    நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சுமுகமாக முடிந்து வருத்தத்தைப் போக்கும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். 'வாங்கியதைக் கொடுக்க முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு கொடுக்கல் - வாங்கல் திருப்தி தரும் விதத்தில் அமையும்.

    குரு வக்ரம்

    உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியானவர், குரு பகவான். அவர் வக்ரம் பெறுவதால் குடும்ப ஒற்றுமை குறையலாம். குடும்பச் சுமை அதிகரிக்கும். சுபகாரியங்கள் நடைபெறுவதில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். கட்டிடம் கட்டும் பணி பாதியில் நிற்கலாம். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் சில காரியங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறாமல் போகலாம். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்படாமலிருக்க கவனத்தோடு செயல்படுவது நல்லது.

    கும்ப - சுக்ரன்

    மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். உள்ளத்தில் உற்சாகம் குடிகொள்ளும்.

    நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். 'வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஊதியத் தொகை இப்பொழுது கைக்கு கிடைக்கும்.

    தனுசு - புதன்

    மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் புதன் சப்தம ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து 'புத - ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால், இது ஒரு யோகமான காலமாகும். வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தைப் பொறுத்தவரை இதுவரை கேட்டும் கிடைக்காத சம்பள உயர்வு இப்பொழுது தானாக கிடைக்கும். தலைமை அதிகாரிகள் உங்கள் செயல்பாடுகளைப் பார்த்து ஆச்சரியப்படுவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு நிதி நிறுவனங்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உடன் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். கலைஞர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகம் கிடைக்க முயற்சி தேவைப்படும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும், அதனை தைரியத்தோடு எதிர்கொள்வார்கள். பணவரவு திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 18, 19, 22, 24, ஜனவரி: 4, 5, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    ×