என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்-31 ஆகஸ்ட் 2025
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்-30 ஆகஸ்ட் 2025
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்-29 ஆகஸ்ட் 2025
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்-28 ஆகஸ்ட் 2025
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவல் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்-27 ஆகஸ்ட் 2025
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 26 ஆகஸ்ட் 2025
பக்கத்தில் உள்ளவர்களின் பாசமழையில் நனையும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களை கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்-25 ஆகஸ்ட் 2025
மனச்சுமை குறையும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்-24 ஆகஸ்ட் 2025
பணவரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். வாகனம் வாங்கும் யோகமுண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்-23 ஆகஸ்ட் 2025
தடைபட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். புதிய உத்தியோகத்திற்கான அழைப்பு வரலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்-22 ஆகஸ்ட் 2025
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 21 ஆகஸ்ட் 2025
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் அடையும் நாள். தனவரவு திருப்தி தரும். தக்க விதத்தில் நண்பர்கள் உதவி செய்வர். உறவினர் வழியிலும் உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 20 ஆகஸ்ட் 2025
விடிகாலையிலேயே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரலாம்.






