என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்-12 செப்டம்பர் 2025
மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2025
பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். மாற்று இனத்தவரால் தொழில் வளர்ச்சி கூடும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். வரன்கள் வாயில் தேடி வரலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2025
நன்மைகள் நடைபெறும் நாள். திட்டமிட்ட சில காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். குடும்பத்தார்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள். வியாபார விரோதம் விலகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2025
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்டநாளாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2025
எதிர்ப்புகளைச் சமாளித்து ஏற்றம் காண வேண்டிய நாள். வியாபாரம் தொழில் சம்மந்தமாக முக்கியப்புள்ளிகளைச் சந்திக்க நேரிடும். தேகநலன் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2025
நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகப் பிரச்சனை முடிவிற்கு வரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2025
பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும் நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுக்க நேரிடும். விலைமதிப்புள்ள பொருள்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் இன்று அவதிகளுக்கு உள்ளாவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2025
தட்டுப்பாடுகள் அகல கட்டுப்பாடோடு செயல்பட வேண்டிய நாள். தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். வீண் விரயங்கள் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2025
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பழகிய சிலருக்காக கணிசமான பணத்தை செலவிடும் சூழ்நிலை உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2025
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டுவந்து சேர்ப்பர். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்-01 செப்டம்பர் 2025
இடம், வாங்கும் முயற்சியில் இனிய பலன் கிடைக்கும் நாள். புதிய கூட்டாளிகளால் பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இனிமை தரும் விதம் இடமாற்றம் அமையும்.






