என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். பழகிய சிலருக்காக கணிசமான பணத்தைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். லாபம் கருதித் தொழிலில் பங்குதார்களை சேர்த்துக் கொள்வீர்கள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    இடம், பூமி வாங்கும் முயற்சியில் இனிய பலன் கிடைக்கும் நாள். புதிய கூட்டாளிகளால் பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கையைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் நாள். வாங்கல்கொடுக்கல்களை ஒழுங்கு செய்துகொள்ள முன்வருவீர்கள். உறவினர் வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன் 30.5.22

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் உதவி கிடைக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் பெறுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன் 28.5.22

    அலைச்சல் கூடும் நாள். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. உறவினர்கள் பணம் கேட்டு தொல்லை தரலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வரவு திருப்தி தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன் 27.5.22

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். பொருளாதார பற்றாக்குறை அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகி மன நிம்மதி ஏற்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகி மன நிம்மதி ஏற்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசிப்பலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். அருகில் உள்ளவர்களின் அனுசரிப்புக்குறையும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. தொழில் பங்குதார்கள் தொல்லை தருவர்.

    மிதுனம்

    ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023

    12.4.2022 முதல் 30.10.2023 வரை

    பதினொன்றில் ராகு/ ஐந்தாமிட கேது

    தன்னம்பிக்கை நிறைந்த மிதுன ராசியினரே ராகு/கேதுக்கள் 11, 5ம் இடத்திலும் குருபகவான் 10,11ம் இடத்திலும் சனி பகவான் 8.9 ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள்.

    லாப ராகுவின் பலன்கள்: பொதுவாக 11ம் இடத்தில் நிற்கும் அனைத்து கிரகங்களும் நன்மையை மட்டுமே செய்யும் என்பது ஜோதிட விதி. அதுவும் கோட்சாரத்தில் அசுப கிரகங்கள் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சுப பலன்கள் இரட்டிப்பாகும். ஏனெனில் 11ம் இடம் என்பது உப ஜெய ஸ்தானம். 11ம் இடம் என்பது லாபஸ்தானம். எனவே திடீர் தனலாபத்தில் மிதப்பீர்கள். அந்தப் பணம் தொழில் மூலமாக கிடைக்குமா? பூர்வீகச் சொத்திலிருந்து கிடைக்கும் பங்கு பணமா அல்லது அதிர்ஷ்ட பணமா அல்லது பிள்ளை இல்லாச் சொத்தா? என்பது ஜனன கால ரீதியான தசா புக்தியைப் பொறுத்தது.

    இதுவரை பொருளாதாரத்தில் மிகத் தாழ்வான நிலையில் இருந்தவர்கள் கூட சரளமான பணப்புழக்கம் இருக்கும். ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்க ராகு முடிவு செய்துவிட்டால் அதனை யாராலும் அணை போட்டு நிறுத்த முடியாது. அனைத்து கிரகப் பெயர்ச்சிகளும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மிதுன ராசியினரின் காட்டில் அடை மழை தான். சனி பகவான் மகரத்தை விட்டு நகரும் போது அஷ்டமச் சனியின் பாதிப்பு முழுமையாக குறைந்து பாக்கிய பலன்கள் துளிர் விடும். குருபகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறப்போகிறார். இவ்வாறு மிதுனராசியினருக்கு ராகுவால் நடக்கும் சுப பலன்கள் ஏராளம். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பலன்கள் சாதாரணம். ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திர பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.

    12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை மிதுனத்திற்கு மூன்றாம் அதிபதி.சூரியன் ராகு சேர்க்கை கிரகண தோஷ அமைப்பு என்றால் சூரியன் உங்களுக்கு சகாய ஸ்தானாதிபதி என்பதால் சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். கடன் அடைக்க உதவுவார்கள். பலருக்கு இடமாற்றம் செய்ய நேரும். ஒரு சிலருக்கு கைவிட்டுப் போன சொத்து அல்லது வேலை கிடைக்கும். கைமறதியாக வைத்த முக்கிய ஆவணங்கள் கண்ணில் தென்படும். சிலர் உயில் எழுதலாம் அல்லது உயிலில் திருத்தம் செய்யலாம். மனைவி வழிச் சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும்.மனக்குழப்பம் மன சஞ்சலம் அகலும். ஆத்ம ஞானம் பெருகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். முயற்சிப் பலிதம் உண்டாகும். ஒரு சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைக்கு பிறகு செவித்திறன் சரிசெய்யப்படும். சிலருக்கு அரசு உத்தியோகம் அல்லது அரசின் உதவிகள் கிடைக்கும்.

    15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுக்ரனின் நட்சத்திரமான பரணி மிதுனத்திற்கு 5,12ம் அதிபதி என்பதால் பங்கு வர்த்தகத்தில் எதிர்பாரத லாபம் கிடைக்கும். சிலர் புதிய பங்குகளில் முதலீடு செய்யலாம். பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரலாம். மனம் அமைதியை, தனிமையை விரும்பும். உங்களின் தன் மானத்தை கூறு போடும் விதத்தில் சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். அதே நேரத்தில் எதையும் தாங்கும் மனப்பக்குவத்திற்கு ராகு உங்களை தயார்படுத்தி விடுவார்.

    பிள்ளைகளால் மன நிறைவு, நிம்மதி உண்டாகும். கல்வி, தொழில்,உத்தியோக நிமித்தமாக வாரிசுகள் வெளியூர், அல்லது வெளிநாடு சென்று தங்கலாம். சுப மங்களச் செலவுகள் அதிகரிக்கும். காதலால் மன உளைச்சலை அனுபவித்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடும் மார்க்கம் தென்படும். சிலருக்கு புதிதாக காதல் சிந்தனை உருவாகும்.

    21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்: கோட்சாரத்தில் ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார். 5ம் இடம் என்பது அதிர்ஷ்டத்தைப் பற்றிக் கூறுமிடம். ராகு ஆசையை தூண்டும் கிரகம். கேது சட்டம், நேர்மை, நியாயம் என்று பேசும் கிரகம். ராகுவும் கேதுவும் தங்களின் நட்சத்திரத்தை பரிமாறிக் கொண்டு சஞ்சாரம் செய்யும் காலம் என்பதால் தார்மீக உணர்வோடு உழைத்து முன்னேறியவர்களுக்கு சிறிய பேராசை துளிர் விடும். மன சாட்சிக்கு வேறு வேலை கிடையாது. எதையாவது நினைவு படுத்தி நம்மை வதைக்கும் என குறுக்கு வழியில் சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டு அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக மாற்ற முயற்சிப்பார்கள். சட்டத்தை மதிப்பதா? இல்லை புறக்கணிப்பதா என்ற பல எண்ண அலைகளால் மனக் குழப்பம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தை நம்பி பெரிய முதலீடு, பணத்தை இரட்டிப்பாக்கும் தந்திரவாதிகளை நம்பக் கூடாது.

    5ம்மிட கேதுவின் பலன்கள்: நடக்குமா? நடக்காதா? என உங்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல விசயங்கள் நல்ல முடிவிற்கு வரும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்களின் ஆத்மார்த்த உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய எதிர் பாலின நட்பு கிடைக்கும். ஆலயத் திருப்பணிகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும்.

    கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் ஒடி வந்து நிற்கும். தொழில், வேலை நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் ஒய்வு காலத்தில் சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகுவீர்கள்.

    இதுவரை சொந்த ஊரில் வாழ்ந்தவர்கள் உத்தியோகம், தொழில் நிமித்தமாக இடம்பெயர நேரும். உங்களின் குல தெய்வமே குழந்தையாக பிறக்கும். பூர்வீகம் தொடர்பான சொத்துப் பிரச்சனைகள், இழுத்தடித்த நீதிமன்ற வம்பு, வழக்குகளிலிருந்து சாதகமான தீர்ப்பு வரும். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.

    12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு மிதுனத்திற்கு 7,10ம் அதிபதி. கோட்சார குரு 10ல் ஆட்சி பெறப் போவதால் இதுவரை நிலையான வேலை இல்லாத வாழ்க்கை துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலரின் வாழ்க்கைத் துணைக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். சில தம்பதிகள் தொழில் உத்தியோக நிமித்தமாக பிரிந்து வெவ்வேறு ஊர்களில் வசிக்கலாம். சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக சட்ட உதவியை நாடலாம். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். சிலரின்கூட்டாளிகள் வம்பு வழக்கினால் பிரியலாம். சிலருக்கு நண்பர்கள், தொழில் கூட்டாளிகளால் தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும்.

    18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் காலத்தில் சிலரின் வாழ்க்கைப் பாதையில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு சட்டத்திற்கு எதிரான இரண்டாம் திருமணம் நடக்கும். பல வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லாமல் வாழ்ந்த அண்ணன், தம்பிகள் குடும்பங்கள் இணையும்.

    வியாபாரத்திற்காக குடும்பத்திற்காக, பிள்ளைகளின் படிப்பிற்காக ஏதேனும் கடன் பட்டு இருந்தால் அவற்றை முழுமையாக அடைக்க தேவையான பொருள் வரவு உண்டாகும். சிலருக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பால் கடன் குறையும்.

    27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். மிதுனத்திற்கு 6,11ம் அதிபதி. சிலருக்கு யூரினரி இன்பெக்சன், கல்லடைப்பு போன்ற கணையம், சிறுநீரகம் சம்பந்தமான உடல் உபாதைகள் தோன்றும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். சிலருக்கு பல தலைமுறையாக பாதுகாத்த குடும்ப சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்று கடனை அடைத்து விடலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.சிலருக்கு சொத்தின் மீதுள்ள வம்பு வழக்கை சரிசெய்ய சொத்தின் மதிப்பை விட அதிகமாக கடன் உருவாகும்.

    மிதுன ராசிக்கு அனைத்து கிரகப் பெயர்ச்சிகளும் சாதகமாக உள்ளதால் மனக்கவலை மறந்து நிம்மதியாக இருக்கலாம்.

    பரிகாரம்

    சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் ஈஸ்வரனைவில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமைகளில் ஆஞ்ச நேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் அஷ்டமச் சனியின் பாதிப்புகள் குறையும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    புத்திக் கூர்மையான மிதுன ராசியினரே குருபகவான் 10ம் இடத்திலும், ராகு பகவான் 11ம் இடத்திலும், கேது பகவான் 5ம் இடத்திலும் சனி பகவான் 8, 9ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

    மிதுன ராசிக்கு குரு பகவான் 7,10 அதிபதி. இதுவரை உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்த குரு பகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். 10ம் இட குரு கேந்திராதிபத்திய தோஷத்தை தருவரா? 10ம் இட குரு பதவியை பறிப்பாரா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டாகும். உங்களின் 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு 17.1.2023 வரை சனிப் பார்வை இருப்பதால் கேந்திராதிபத்திய தோஷம் செயல்படாது.

    தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்தப் போகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் பல விதமான யோகங்கள் கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு மனிதன் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ முதல்தரமான யோகமாக கூறப்பட்டுள்ளது தர்ம கர்மாதிபதி யோகம். அதாவது குரு மற்றும் சனி சம்பந்தம் தர்மகர்மாதிபதி யோகமாகும். அதாவது உங்களின் 9ம் அதிபதி சனிக்கும் 10ம் அதிபதி குருவிற்கும் கோட்சார ரீதியான சம்பந்தம் ஏற்படுவதால் முன்னோர்களின் பூர்வ புண்ணியம் உங்களைக் காப்பாற்றும் காலம். 10ல்குரு வரும் போது பதவி பறி போகும் என்பது ஜோதிட விதி. அது உண்மை தான். ஆனால் 10 அதிபதி குருவிற்கு சனி பார்வை இருப்பதால் இந்த குருப்பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு பெரும் வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. 10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 10ம் இடத்திற்குச் சனி, குரு சம்பந்தம் இருப்பதால் பதவி பறிபோகாது.

    தொழில் ஸ்தானத்தைப் பார்க்கும் சனி தொழில் ஞானத்தை உங்களுக்கு வழங்குவார், வியாபாரத்தை எப்படி நடத்துவது, எப்படி. தக்க வைத்து கொள்ள வேண்டும். கிடைத்த பதவியை எப்படி பொக்கிஷம் போல் காக்க வேண்டும் என்பதை அனுபவ ரீதியாக புரிய வைப்பார். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் வாங்கிய கடன் தொகையையும் வட்டியுடன் திருப்பி செலுத்து காலம். கடன்காரன் எவனாது போன் பண்ணி திட்டுவானோ என்று போனை எடுக்க பயந்தவர்கள் எல்லாம் கெத்தாக போனை எடுத்து பேசுவீர்கள். காசோலை தொடர்பான வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். கடன் சுமையை குறைக்க அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். இந்த காலகட்டத்தி இழந்த வேலை மீண்டும் கிடைக்கும்.

    5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 2ம்மிடமானதன ஸ்தானத்தில் பதிகிறது. இதனால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் வலிமை பெறுகிறது. தனவரவு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். பொருளாதார நிலையில் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். உங்களின் தொழில், குடும்ப சொத்து, வராகடன் வசூல் என பல்வேறு வழிகளில் பணம் வந்து குவியும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு.

    அதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும். தங்களின் பேச்சாற்றலால் உங்களின் காரியங்களை சாதிக்க முடியும்.

    7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை ராசிக்கு 4ம் இடமான சுக ஸ்தானத்திற்கு உள்ளது. தாய் வழி உறவினர்களிடம் சொத்து, கொடுக்கல் வாங்கல் தொடர்பான தொடர்பான சங்கடங்கள் மறையும். வீடு, வாகன யோகம் ஏற்படுவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டாலும் முயற்சிகள் வெற்றி தரும். கடன் பெற்றாவது சொந்த வீடு வாகன யோகத்தை அடைவீர்கள். முறையான ஆவணங்கள் உள்ள சட்டரீதியான சொத்து, வாஸ்து குற்றம் இல்லாத மனை உங்களுக்கு கிடைக்கும். நல்ல பொருளாதார விருத்தியை, மன நிம்மதியைக் தரக்கூடிய பூமியின் அதிர்வலை சிறப்பாக உள்ள வீடு, மனை அமையும். ஏற்கனவே சொந்த வீட்டில்குடியிருப்பவர்களுக்கு வீட்டை புதுப்பிப்பார்கள். அடமானத்திலிருக்கும் நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும். வீடு, வாகனம், மனை தொடர்பான சுபவிரையம் ஏற்படும் காலம்.

    9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு உள்ளதால் எதிரிகளை வெல்லக் கூடிய ஆற்றல் உண்டாகும்.

    கண் திருஷ்டி தோஷம், செய்வினைக் கோளாறு அகலும். உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும். சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரும்பிய உத்தியோகம் கிடைக்கும்.என்ன நோய் என்றே தெரியாமல் குழப்பத்தில் இருந்தவர்களுக்கு நோயின் தன்மை புரியும். அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருந்த நோய் கூட அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் குணமடையும். மிதுன ராசியை சேர்ந்த மருத்துவர்களின் புகழ் கொடி கட்டி பறக்கும். அவர்கள் தொட்டாலே நோய் குணமாகும். கைராசி மருத்துவர் என்ற பெயர் கிடைக்கும். பலர் 6ம்மிடம் என்றால் பொருள் கடன் என்று நினைக்கிறார்கள். பிறவிக்கடன், பொருள் கடன் சேர்ந்தது தான் 6ம் பாவகம். குருவின் 9ம் பார்வைக்கு பாக்கிய பலன்களை அதிகரிக்கும்சக்தி உள்ளது. குருவின் 9ம் பார்வை 6ம் இடத்திற்கு இந்த கால கட்டத்தில் முன்னோர்களுக்கு முறையான பித்ருக்கள் பூஜை செய்து வழிபட பிறவிக்கடன் மற்றும் பொருள் கடன் தீரும்.

    குருவின் வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை

    குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலம் குல தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். ஒரு சில குடும்பங்களில் குல தெய்வ கோவிலில் யாருக்கு முதல் மரியாதை என்ற கருத்து வேறுபாடு ஏற்படும். ஒரு சிலருக்கு பூர்வீகத்தை விட்டு இடம் பெயற நேரும். பூர்வீகம் தொடர்பான அனைத்து செயல்களிலும் தடை தாமத்தை தருவார். மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கிறோம். தீர்க்கமான முடிவு செய்யும் திறன் குறையும். மன உளைச்சல் காரணமாக யாரைப் பார்த்தாலும் கோபம், டென்சன் மிகுதியாகும்.

    பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகளும் தலை தூக்கும். முன்னோர் வழி சொத்துக்களை முறைப்படுத்துவதில் கருத்து வேறுபாடு மிகும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு பங்கு குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    புதிய முதலீடு செய்ய ஏற்ற காலம் அல்ல. மிகப் பெரிய தொழிலில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்தபலன் பொருந்தும். முதலீட்டை காப்பதில் கவனம் தேவை. 5ம் இடத்திற்குசனி பார்வை இருப்பதால்குழந்தை பாக்கியம் ஏற்பட கால தாமதம் ஏற்படும் என்பதால் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடுபவர்கள் சுயஜாதகத்தில் உங்களின் நேரம், காலம் அறிந்து செயல்படுதல் நலம். ஒரு சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதி வந்து மன சஞ்சலத்தை அதிகரிக்க செய்யும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

    பெண்கள்: சுய தொழில் செய்யும் பெண்களுக்கு செல்வமும் புகழும் பெருகிவரும் யோகமான காலம்.பிள்ளைகளால் கிடைக்கும் பெருமையும் கணவரின் அன்பான ஆதவும் உங்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் தொடரும். விருந்துகளும் மனமகழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.இன்ப சுற்றுலா செல்வது வீட்டை அழகுபடுத்துவது போன்ற மன மகிழும் நிகழ்வுகளால் மனதும் உடலும் புத்துணர்வு பெறும்.

    பரிகாரம்:வீட்டில் ஆஞ்சநேயர் படத்திற்கு துளசி சாற்றி வழிபடவும். புதன்கிழமை காலை 9&-10 மணி வரையான குரு ஓரையில் பிரம்மாவின் முன் உங்கள் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×