என் மலர்
மகரம்
இந்த வார ராசிபலன்
29.04.2024 முதல் 05.05.2024 வரை
கனவுகள் நனவாகும். தனம் வாக்கு குடும்ப அதிபதி சனி ஆட்சி. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு என மகர ராசியினருக்கு முக்கிய கிரகங்கள் சாதகமாக உள்ளது. உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் கண்ட கனவுகள் அனைத்தும் நனவாகும். தொட்டது துலங்கும். விருப்பங்கள், எண்ணங்கள் நிறைவேறும். மேற்கல்வி முயற்சி சாதகமாகும். அரசு வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடங்கள் தீரும். திருமண வயதினருக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும்.
நிம்மதி நிலைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் மறையும். மறைந்து கிடந்த உங்களின் அனைத்து திறமைகளையும் வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். மாமியார் மற்றும் மாமனாரால் பொருள் வரவு உண்டாகும். குடும்ப சுமைகள், பொறுப்புகள் பெண்களுக்கு அதிகரிக்கும். இழந்த அனைத்து இன்பங்களும் மீண்டும் கிடைக்கப் போகிறது. அரை குறையாக நின்ற வீடு கட்டும் பணி துரிதமடையும். தொழில் உத்தியோக நிமித்தமாக இடப்பெயர்ச்சி செய்ய நேரும். கடன் கட்டுக்குள் இருக்கும். நோய் தாக்கம் குறையும். வெள்ளிக்கிழமை ஸ்ரீசந்தான லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






