என் மலர்
மகரம்
வார ராசிபலன் 7.12.2025 முதல் 13.12.2025 வரை
7.12.2025 முதல் 13.12.2025 வரை
மகரம்
மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம். வக்ர நிவர்த்தி பெற்ற ராசி அதிபதி சனி பகவான் சகாய ஸ்தானத்தில் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எண்ணங்கள் ஈடேறும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலர் புதிய தொழில் கிளைகள் திறக்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
படித்து முடித்தவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். விரய ஸ்தானத்தை சனி மற்றும் குரு பார்ப்பதால் சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி பணவரவும் சேமிப்பும் அதிகரிக்கும்.
சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.10.12.2025 அன்று அதிகாலை 2.23 முதல் 12.12.2025 அன்று பகல் 10.20 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகளில் தடை ஏற்படும். நெருங்கியவர்களிடையே மன வருத்தம் ஏற்படலாம். பண விவகாரங்கள் கவலை தரும். பொறுமையோடு இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட மிகுந்த நன்மைகள் உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






