என் மலர்
மகரம்
இந்த வார ராசிப்பலன்
31.7.2023 முதல் 6.8.2023 வரை
அறிவாற்றலும், திறமையும் கூடும் வாரம். ராசிக்கு சூரியன் பார்வை இருப்பதால் உங்களின் முயற்சியும் விருப்பங்களும் நிறைவேறும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களுடைய புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி அனைத்தையும் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் தென்படும். நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் அமையப் போகின்றது. உங்களின் செயலில் வேகமும் மனதில் புத்துணர்ச்சியும் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் சக்தியும் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் சுமூகமான உறவு உண்டாகும்.
இதுவரை நிலவிய மந்த நிலை மாறும். எங்கு சென்றாலும் உங்களுக்கு முதலிடம் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகளை இந்த வாரம் நிறைவு செய்து மகிழ்வீர்கள். ராசிக்கு எட்டில் செவ்வாய் நிற்பதால் கோட்சார ரீதியான செவ்வாய் தோஷத்தால் திருமண வாய்ப்பு தடைபடலாம். மாணவர்கள் பெற்றோர்களின் அறிவுரையை மதிக்க வேண்டும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆடிப் பெருக்கன்று சலவைத் தொழிலாளிகளுக்கு உதவவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






