என் மலர்
மகரம்
வார ராசிபலன் 4.1.2026 முதல் 10.1.2026 வரை
4.1.2026 முதல் 10.1.2026 வரை
மகரம்
நிம்மதியான வாரம். ராசி அதிபதி சனி வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மறைமுக லாபம் கிடைக்கும். உணவுத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், பங்கு வர்த்தகம், மார்க்கெட்டிங் போன்ற பணியில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைக்கக்கூடும். பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும்.
குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். பெண்களுக்கு குடும்பப் பணிச்சுமையால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். பெண்கள் கணவரின் உண்மையான அன்பை உணர்வீர்கள். 6.1.2026 அன்று பகல் 12.17 முதல் 8.1.2026 அன்று மாலை 6.39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தள்ளிப்போகும். பேச்சைக் குறைப்பது நல்லது. வேலைப்பளு மிகுதியாகும். மன அமைதி குறையும். வேலை ஆட்களை அனுசரித்துச் செல்லவும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வது வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






