என் மலர்
மகரம்
வார ராசிபலன் 28.12.2025 முதல் 3.1.2026 வரை
28.12.2025 முதல் 3.1.2026 வரை
மகரம்
நீண்ட கால கனவுகள், திட்டங்கள் நிறைவேறும் வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை என்பதால் மனதில் நிம்மதி இருக்கும். இதுவரை அனுபவித்த எண்ணிடலங்கா துயரம் தீரும். விரக்தியாக வாழ்ந்தவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு, தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளுக்கும், திட்டமிடுதலுக்கும் குடும்ப உறவுகள் உதவியாக, ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார்கள்.
திருமணம், குழந்தை பேறு, உத்தியோகம், தொழில் என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் மன நிறைவாக நடந்து முடியும். அடிமைத்தனத்துடன் நாடோடிபோல் வாழ்ந்தவர்களுக்கு நிரந்தமான தொழில், அதிர்ஷ்டம், முன்னேற்றம், புகழ் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அடிப்படை தேவைக்கு தடு மாறியவர்களுக்கு கூட தாராளமான பணப் புழக்கம் உண்டாகும்.
கலை ஆர்வம், அரசுப் பணி, அரசியல் வெற்றி தரும். இழந்த வேலை, மீண்டும் கிடைக்கும். தந்தையாலும், தந்தை வழி உறவுகள் மூலமும் முன்னேற்றத்திற்கான உதவிகள் கிடைக்கும். அடமானச் சொத்துக்கள், நகைகளை மீட்க வாய்ப்பு உள்ளது. திருவாதிரை நட்சத்திரம் அன்று விரதம் இருந்து சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






