என் மலர்tooltip icon

    மகரம்

    தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    உழைப்பால் உயரும் மகர ராசியினருக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டு உச்ச நிலை தரும் ஆண்டாக அமைய நல் வாழ்த்துக்கள்.

    பஞ்சம ஸ்தான குருவின் பலன்கள்:

    மகர ராசிக்கு 3, 12ம் அதிபதியான குருபகவான் மே 1, 2024 முதல் ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்கிறார். 5ம்மிடம் என்பது அதிர்ஷ்டம், பூர்வீகம், குல தெய்வம், குழந்தைகள், காதல், பூர்வ புண்ணியம், ஆழ் மன சிந்தனை பற்றிக் கூறுமிடம்.

    பொதுவாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் நன்மையை அதிகப்படுத்தும் வல்லமை உண்டு. கோட்சாரத்தில் 5ம்மிடத்திற்கு வரும் கிரகம் குறுகிய காலத்தில் அனைத்து நன்மைகளையும் வழங்கி விடும். நல்ல அறிவாற்றல், புத்திக்கூர்மை. கல்வி மேன்மை உண்டாகும்.

    5ம்மிடத்தில் நிற்கும் குருவின் 5ம் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. புத்திர பிராப்தத்தில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும் தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும்.

    புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகள் நடக்கும். சிலருக்கு பணிக்காலம் முடிந்த பிறகும் பதவி நீட்டிப்பு கிடைக்கும். அரசியல் ஈடுபாடும் பிரபலமாகும் யோகமும் உண்டாகும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீர்க்க உகந்த நேரம்.

    மகான்களின் தரிசனம், குலதெய்வம், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் குருவின் 7ம் பார்வை 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்துத்தின் தீர்ப்பு சாதகமாகும்.உடல் உபாதைகள் அகலும். இளைய மனைவியின் மூலம் சொத்து கிடைக்கும். பாலிசி முதிர்வு தொகை, எதிர்பாராத பண வரவு உண்டு.

    ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குருவின் 9ம் பார்வை ராசியில் பதிகிறது. கிரக நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இதுவரை உங்களுக்கு எது கிடைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டு இருந்தீர்களோ அவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். அசாத்திய துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்வீர்கள். செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டு இலகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள்

    சனியின் சஞ்சார பலன்கள்:

    மகர ராசியின் அதிபதி மற்றும் தனாதிபதியான சனி பகவான் ஆண்டு முழுவதும் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். ஏழரைச் சனியின் மூன்றாம் பாகம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சில காரியங்கள் ஆரம்பிக்கும் போது தோல்வி தருவது போல் இருந்தாலும் முடிவில் வெற்றியைக் கொடுக்கும்.

    பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் தனித்தன்மை வெளிப்படும். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியின் 3ம் பார்வை சுக ஸ்தானத்தில் பதிகிறது.

    சொத்து தொடர்பான முயற்சிகள் இழுபறிக்குப் பின் வெற்றி தரும். சொத்து விற்பனையில் பெரும் பணம் கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பான மன உளைச்சல் நீடிக்கும். மாணவர்களுக்கு கல்லூரிப் படிப்பை தொடரலாமா, பணிக்குச் செல்லலாமா என்ற மனக் குழப்பம் நிலவும். அரசு வேலை கிடைக்கும். தேவைக்கு பணப்புழக்கம் இருக்கும்.

    சனியின் 7ம் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிகிறது.அவ்வப்போது கற்பனை பயம் தோன்றி மறையும். ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மிகுதியாகும்.மர்ம நோய் தாக்கம் இருந்தால் சரியாகும். ஆரோக்கியம் சீராகும்.

    சிலர் சுப செலவுகளுக்காக சொத்து அடமானத்தின் பெயரில் கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உருவாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வராது என்று நினைத்த பணம் கூட வந்து சேரும்.

    வாடகைக்கு போகாமலிருந்த சொத்துக்கள் வாடகைக்குப் போகும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். சனியின் 10ம் பார்வை லாப ஸ்தானத்தில் பதிகிறது. கடன்பத்திரம், ஆவணங்கள் தொடர்பான தொல்லைகள் விலகும்.

    அரசியல் பிரமுகர்கள் எடுத்தேன், கவிழ்தேன் என்று புதிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்கி அணிவீர்கள்.

    3ல் ராகு 9ல் கேது:

    ராகு பகவான் 3ம்மிடமான முயற்சி ஸ்தானத்திலும் கேது பகவான் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்கிறார்கள். 3ம்மிட ராகு பகவானால் உங்களின் புகழ், தைரியம், நம்பிக்கை, வீரம், விவேகம் அதிகமாகும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.பாகப் பிரிவினையில் நிலவிய சர்ச்சைகள் முடிவிற்கு வரும். நெடுங்காலமாக முறைப்படுத்த முடியாத பூர்வீக சொத்துக்களுக்கு தீர்வு கிடைக்கும்.

    மிகக் குறிப்பாக பிரிக்க முடியாமல் உள்ள சொத்து, பாதை இல்லாத சொத்து, கோர்ட், கேஸில் உள்ள சொத்துக்களுக்கு தீர்வு கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. உடன் பிறந்தவர்களின் நலனில் ஆர்வம் மிகும்.

    உடன் பிறந்த சகோதர, சகோதரர்களின் திருமணத்தை தந்தை ஸ்தானத்தில் முன் நின்று நடந்துவீர்கள். நிறைவேறாமல் தடங்கல் ஏற்பட்டு கொண்டிருந்த சில முக்கிய பணிகள் நிறைவேறும் இடமாற்றம் மற்றும் நண்பர்கள் உதவியும் கிடைக்கும்.

    பிராயணம் செய்வதில் நாட்டம் ஏற்படும். தன வரவு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். சொத்துப் பிரச்சனைகள் சிறிது சீராகும். உடல் உபாதைகளுக்கு உரிய மருத்துவ ஆலோசனை பெறுதல் நன்மை தரும். வீடு வாகன யோகம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றம், சொந்த வீடு கட்டி குடியேறும் வாய்ப்பும் ஏற்படும்.

    உங்களின் திறமை, உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறும். பட்ட அனைத்து சிரமத்திற்கு தீர்வு கிடைக்கும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம். ஞான மார்கத்தில் மனம் லயிக்கும். தீர்த்த யாத்திரை, கோவில்களுக்கு செல்ல ஆர்வம் ஏற்படும்.பூர்வ புண்ணிய பலத்தால் முறையான சர்ப்ப வழிபாடு செய்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.

    உத்திராடம் 2, 3, 4:

    சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4 மகர ராசியில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் தமிழ் புத்தாண்டில் மன சஞ்சலம், பய உணர்வு அகலும். புதிய தெம்பு, தெளிவு பிறக்கும். இதுவரை உங்கள் மேல் இருந்த தவறான குற்றச்சாட்டு மறையும். நீங்கள் பிறந்த பலனை அடையப் போகிறீர்கள். உங்கள் புகழ், பெருமையை உற்றார், உறவினர் அறியப் போகிறார்கள். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டவர்கள் வாழ்க்கையில் புதுவசந்தம் வீசப்போகிறது. தோற்றத்தில் மிடுக்கு கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும்.

    பிள்ளைகளால் ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும். வீடு மாற்றும் எண்ணம் அதிகரிக்கும். வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நோய்கள் அகலும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகளை பேச்சுவார்த்தையில் சேர்த்து வைக்க உகந்த காலம். இடப்பெயர்ச்சியாக வாய்ப்புள்ளது. அலைச்சல் நிறைந்த பயணங்கள் அதிகரிக்கும்.

    சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமை நிலவும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். திருமணம், குழந்தை பேறு போன்ற மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். நேரம் கிடைக்கும் போது சூரியனார் கோவில் சென்று வரவும்.

    திருவோணம்:

    சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த திருவோணம் நட்சத்திரம் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டு எல்லையற்ற மகிழ்சியைத் தரும். எதிர்மறை பிரச்சனைகள் விலகும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். செயல்களில் வெற்றி மிளிரும். குடும்பத்தில் நிலவிய எதிர்மறை விமர்சனங்கள் மாறும். பெற்றோர்களின் அனுசரணை கிடைக்கும். உபரி தொழில் லாபத்தை தொழிலில் மறுமுதலீடு செய்வீர்கள். கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும்.

    வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு தந்தையின் அரசுப்பணி கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும்.

    திரைக்கலைஞர்களுக்கு பிற மொழிப் படங்களில் வாய்ப்பு கிடைக்கும். வாடகை வருமானம் தரும் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். திருமண முயற்றி நிறைவேறும். வீண் செலவுகள், விரயங்கள் அதிகரிக்கும் உடன் பிறந்தவர்களுடன் பாகப்பிரிவினை ஏற்பட வாய்ப்புள்ளது.

    பழைய கடன்களை செலுத்தி புதிய வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர்கள். மறுதிருமண முயற்சி வெற்றி தரும்.உயர்கல்வி தொடர்பான முயற்சியில் வெற்றி உண்டு. பவுர்ணமியன்று லஷ்மி நரசிம்மரை வழிபடவும்.

    அவிட்டம் 1, 2:

    செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி பெறும் தமிழ் புத்தாண்டாக அமையும்.

    தடைபட்ட அனைத்துப் பணிகளும் துரிதமாக முடியும்.நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை குறையும். எதிர்பார்த்த தன லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகம், வெளிநாட்டு பணம், பிள்ளைகள் வருமானம் என உங்கள் வாழ்க்கை நிலை உயரப்போகிறது.

    சிலர் புதிய தொழில் துவங்கலாம். வேலையில் நிலவிய பிரச்சனைகள் குறையத்துவங்கும்.வாழ்க்கைத் துணை அல்லது தாய் மூலம் அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர்கள் கிடைப்பார்கள்.

    குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் சுமூகமான நிலை நீடிக்கும். சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக கைவிட்டுப் போன சொத்துக்கள் கிடைக்கும்.அரசியலில் சிலருக்கு நல்ல பொறுப்புகள் தேடி வரும். உடலில் எதிர்ப்பு சக்தி கூடும். பல் சீராமைப்பு செயற்கை பல் செட் போன்ற வைத்தியம் செய்வீர்கள்.வேலையாட்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். எதிரிகள் தொல்லை குறையும். பெயர் சொல்ல வாரிசு உருவாகும். தொடர்ந்து முருகனை வழிபட உங்கள் வாழ்க்கை சீராகும்.

    திருமணம்:

    திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். திருமணத் தடை அகன்று தகுதியான வரன் அமையும் திருமணத்திற்கான நாளை எண்ண வேண்டிய நேரம் வந்து விட்டது. நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். மறு விவாக முயற்சி வெற்றி தரும்.

    பெண்கள்:

    புதிய வாழ்க்கைப் பாதையை நோக்கி முன்னேறுவீர்கள். பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். ஒவ்வொரு விசயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். வசதியும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். தம்பதிகள் மனம் விட்டு பேசுவதால் நன்மைகள் உண்டாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும்.

    பரிகாரம்:

    ஏழரைச் சனியின் தாக்கம் குரு பலனால் சீராகும். எனினும் இந்த குரோதி வருட புத்தாண்டு செழுமையுற நீங்கள் சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததால் இக்கோவில் மயிலாப்பூர் என கூறப்படுகிறது. அருள்மிகு கபாலீசுவரர் சமேத கற்பகாம்பாளை வழிபட சுப பலன் மிகுதியாகும்.

    ×