search icon
என் மலர்tooltip icon

  மகரம் - சோபகிருது வருட பலன்

  மகரம்

  சோபகிருது வருட பலன் 2023

  உதவிகள்தேடி வரும்!

  தொழில் தந்திரம் நிறைந்த மகர ராசியினருக்கு இந்த சோப கிருது வருட தமிழ் புத்தாண்டு எதிர்பார்ப்புகளை ஈடேற்றும் சுப வருடமாக அமைய நல் வாழ்த்துக்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி ஆண்டின் துவக்கத்தில் ஏப்ரல் 22 முதல் குருபகவான் 4ம்மிடமான சுகஸ்தானம் செல்கிறார். ஜனவரி 17லிருந்து சனி பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது ஏழரைச் சனியின் மூன்றாம் பாகம்.

  தற்போது 4,10மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு கேதுக்கள் அக்டோபர் 30 முதல் 3,9ம்மிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார்கள். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். சுற்றத்தார் மதிக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். கஷ்டங்கள் விலகும். கவலைகள் மறக்கும். உடன் பிறந்தவர்கள், உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் நிறைந்த வருடமாக இருக்கும். எந்த விசயத்தையும் உங்கள் வாதத் திறமையால் வெற்றி காண்பீர்கள்.இடமாற்றம், வீடு மாற்றம், வேலை மாற்றம் நடக்கும்.மந்தமாக இருந்த தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பாராது அதிக நேரம் உழைக்க நேரும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும்.வங்கி கடன் மூலம் புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். வாடகைக்கு போகாமலிருந்த சொத்துக்கள் வாடகைக்குப் போகும். என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். தாய் வழிச் சொத்தில் இருந்த வில்லங்கம் சீராகும்.

  விவசாயிகளுக்கு அரசின் ஆதரவு கிடைக்கும்.ஆரோக்கிய குறைபாடு சீராகும்.நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். சிலருக்கு புதிதாக எதிர்பாலின நட்பு கிடைக்கும்.

  குடும்பம், பொருளாதாரம் : குடும்பத்தில் ஒற்றுமை நிம்மதி ஏற்படும். புது வேலையில் நிறைவான ஊதியமும் மனத் திருப்தியும் ஏற்படும்.

  பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் நிலவும். சுய சம்பாத்தியம் பெருகும். காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது.பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். மதிப்பும், மரியாதையும் காப்பாற்றப்படும். கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும்மன வேதனையால் முதியோர் இல்லம் சென்ற சில வயது முதிர்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். சிலருக்கு கூட்டுக் குடும்பத்தில் அல்லது கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படலாம். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்திற்காக வேலையை விட்டு தாயகம் திரும்புவார்கள். சுபவிரயம், சுப மங்கலச் செலவு உண்டாகும்.

  பெண்கள் : புதிய தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவீர்கள். வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் உங்கள் திறமைகள் மிளிரும். குழந்தைகள் மற்றும் கணவரின் உண்மையான அன்பை உணருவீர்கள். தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மனசாட்சிக்கு விரோதமான செயலில் ஈடுபடு வதை தவிர்க்கவும்.

  உத்திராடம் 2,3,4 : அனைத்து விதமான சங்க டங்களும் விலகும் காலம்.புதிய முயற்சியில் வெற்றியும், லாபத்தையும் பெற முடியும்.அரசு வகை ஆதாயம் உண்டு. சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும்.அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனை முடிவுக்கு வரும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும்.

  நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள்.மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். வாட்டி வதைத்த கடன் பிரச்சனை ஓரளவு குறையும்.புதிய கடன் வாங்கி பழைய கடன் அடைப்பீர்கள். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறியவர்களுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறையும். தினமும் அனுமன் மூல மந்திரம் படிக்கவும்.

  திருவோணம் : எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும்.வேதனைகளை விரட்டி சாதனைகளாக மாற்றும் சிந்தனைகள் உதயமாகும். சிலருக்கு உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். புதிய கூட்டுத் தொழில் முயற்சியை தவிர்க்கவும். அரசியல் தொடர்புடையவர்களுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் மற்றவர்கள் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். சுப செய்தி., சுப வாய்ப்புகள் தேடி வரும்.எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். தேவையற்ற கற்பனை, பயங்கள் உருவாகி மறையும். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். நீண்ட நாட்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவார்கள். தினமும் ஸ்ரீ ராம நாமப் பாராயணம் செய்யவும்.

  அவிட்டம்1 ,2 : எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை யும், தைரியமும் மேலோங்கும் காலம்.குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள். புதிய நட்பு வட்டாரம் உரு வாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.வியாபாரம் பெருகும்.புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கண்கள் தொடர்பான பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். தினமும் அனுமன் சாலீசா படிக்கவும்.

  பரிகாரம் : மகர ராசியினர் தமிழ் புத்தாண்டிற்கு நாமக்கல் மாவட்டம் நாமக்கல்லில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் சென்று நரசிம்மரையும், தாயாரையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு வர ஏழரைச் சனியின் கெடுபலன்கள் குறையத்துவங்கும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  மகரம்

  சுபகிருது வருட பலன் - 2023

  நீதிமான்களான மகர ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் தடைக்கற்கள் படிக்கற்கலாக அமைய நல்வாழ்த்துக்கள்.

  ராசிக்கு 4ல் ராகுவும், 10ல் கேதுவும் பயணிக்கிறார்கள். குருபகவான் 3,இடத்திலும், சனி பகவான் ராசி மற்றும் 2ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள். 3ம்மிட குருபகவான் உங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தருவார். தொழில், உத்தியோகத்தில் இடப் பெயர்ச்சியைத் தருவார். பாகப்பிரிவினை தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடக்கும். முக்கியமான ஆவணங்களை கை மறதியாக வைத்துவிட்டு தேடுவீர்கள். சிலரின் வெளிநாட்டு வேலை முயற்சி பலிதமாகும்.

  ராகு 4ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சொத்துக்கள் தொடர்பான செயல்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தாயின் ஆரோக்கியத்திற்கு வைத்தியம் செய்ய வேண்டிய நேரம். 10ம்மிட கேதுவால் தொழில் ரீதியான பய உணர்வு, மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.கடுமையாக உழைக்க நேரும். உழைப்பிற்கான ஊதியம் கிடைக்க காலதாமதமாகும். ராசி அதிபதி சனிராசியில் ஆட்சி பலம் பெற்று நிற்பதால் உழைப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு.உங்கள் இயல்பான பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

  குடும்பம்:குடும்ப ஸ்தானாதிபதி சனிஆட்சி பலம் பெறுவதால் உங்களின் பேச்சுக்கள் குடும்ப நபர்களை வசீகரிக்கும். மனைவி மற்றும் பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும்.அது வாழ்க்கைத் துணையாகவோ குழந்தையாகவோ இருக்கலாம். பாக்கிய, லாபஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தாய்வழி சொத்து தொடர்பான விசயத்தில் தாயின் ஆதரவு சகோதர, சகோதரிகளுக்கே கிடைக்கும்.ஆனால் மூத்த சகோதரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும்.இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் இந்த புத்தாண்டில் கிடைக்கப் பெறுவீர்கள்.

  ஆரோக்கியம்:சுக ஸ்தானத்தில் உள்ள நான்காமிட ராகுவால் உடலில் அசதி, கை, கால் வலி அதிகமாக இருக்கும்.உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும்.ஆயுள் தீர்க்கம். சிறு, சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம்.முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகாவுடன் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையும் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும்.

  திருமணம்:ஜென்மச் சனியால் சிலருக்குதிருமணத் தடை நீடிக்கும் அல்லது திருமண முயற்சியில் நேரம், காலம், பணம் போன்ற விரயங்கள் இருக்கும். சனிபகவானின் கடும் பகைவரான ராகு தசை நடப்பவர்களுக்கு ஜென்மச் சனி முடியும் வரை திருமண வாய்ப்பு குறைவு. 7ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் சிலருக்கு ஜென்மச் சனியால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும். ராகு தசை நடப்பவர்களுக்கு ஜனவரி 2023, சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடை பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

  பெண்கள்:பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் இருப்பீர்கள். குடும்ப உறவுகளுடன் சுப நிகழ்ச்சிகள், ஆடம்பர விருந்து உபச்சாரங்களில் கலந்து மகிழ்வீர்கள். தான, தர்மம் செய்வதில் விருப்பம் அதிகரிக்கும்.

  மாணவர்கள்:பிள்ளைகள் அதிக நேரம் ஒதுக்கி படித்தால் பள்ளி இறுதி தேர்வில் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் நிச்சயம் உண்டு. 4ம்மிட ராகுவால் சில மாணவர்கள் பள்ளியை மாற்றுவார்கள்.

  உத்தியோகஸ்தர்கள்:4ம் இட ராகுஅர்தாஷ்டமச் சனி காலத்தில் ஏற்படும் கெடுதலுக்கு இணையான அசுப பலன்களை வழங்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அடுத்தவர் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சில அரசு ஊழியர்கள் பதவி உயர்வு என்ற பெயரில் பிடிக்காதஊருக்கு சென்று கடமையாற்றும் சூழல் உண்டாகும்.

  முதலீட்டாளர்கள்:பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 10மிட கேது பரம பதம் போன்று தீடீரென ஏற்றத்தையும் எதிர்பாராத இறக்கத்தையும் தர வாய்ப்பு உள்ளது. யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. பெரிய தொழில் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மிகப் பெரிய புகழ் கிடைக்கும். கையில் பணம் புரளுமா? வங்கி கணக்கில் உபரி பணம் சேமிப்பாக இருக்குமா? என்பது சந்தேகம்.

  அரசியல்வாதிகள்:அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். வீண் அவமானம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. அரசியல் வாதிகளுக்கு மறைமுக எதிர்ப்பு ஏற்படும். கட்சி தொடர்பான வழக்குகளில் சிக்கினால் உங்களின் எதிர்காலமேகேள்விக்குறியாகும்.

  கலைஞர்கள்:கலைத்துறையினருக்கு பெயரை நிலை நிறுத்தும் வகையிலான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்டசெயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

  விவசாயிகள்:உங்கள் விளை நிலத்திற்கு போதிய நீர் ஆதாரம் கிடைக்கும். தரமான பொருட்கள் விளையும். விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.விவசாயத்திற்கு தேவையான தளவாடப் பொருட்கள் வாங்க கடன் உதவி கிடைக்கும்.

  கவனமாக செயல்பட வேண்டிய காலம்

  ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 4 ல் ராகுவும் 10ல் கேதுவும் இருக்கிறார்கள்.எந்த செயலாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும். வேகத்தை விட விவேகம் முக்கியம். இந்த காலகட்டத்தில் சில படிப்பினைகளை ராகு/கேதுக்கள் வழங்குவார்கள். சிலர் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கலாம்.

  குரு:29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசியில் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான் வக்ரம் அடையும் காலத்தில் ஜென்மச் சனி என்பதால் பண மோசடி மிகுதியாக இருக்கும். கோட்சார குரு 3ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். சிலருக்கு எதிர் பாலினத்தினரால் வம்பு, மனச் சங்கடம் உருவாகும். சில ஆண்கள் மற்றும் பெண்கள் இது போன்ற காலகட்டத்தில் மன ஆறுதலுக்காக குடும்ப விஷயத்தை பிறருடன் பகிரக் கூடாது. பூர்வீக சொத்து தொடர்பான செயல்களை ஒத்தி வைக்கவும். சிலர் தொழில் உத்தியோக நிமித்தமாகபூர்வீகத்தை விட்டு வெளியேறலாம்.

  பரிகாரம்:வியாழக்கிழமை மாலை 5--8 மணிக்குள் லஷ்மி குபேர பூஜை செய்து வர கடன் தொல்லை குறைந்து பொருளாதார மேம்பாடு உண்டாகும்.

  சொந்த வீடு கட்டும் யோகம்

  லாப ஸ்தானத்திற்கு குருப் பார்வை பதிவதால் வட்டிக்கு வட்டி கட்டி மீளமுடியாத கடன் பிரச்சனையிலிருந்து மீள முடியும்.நிலுவையில் உள்ள வராக்கடன்கள் வசூலாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையும். சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம் .வெகு சிலருக்கு அடமானத்திவிருக்கும் சொத்துக்கள் மீண்டு வரும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புதிய சொத்தாகி விடும். சிலருக்கு சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும். சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள். குரு உங்களுக்கு விரயாதிபதியாகி 3ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் வரவிற்கு இணையான செலவும் இருக்கும். விரயத்தை சுப செலவாக மாற்றுவதில் உங்களின் புத்திசாலித்தனம் உள்ளது.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×