என் மலர்
மகரம்
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023
உறுதியான எண்ணம் நிறைந்த மகர ராசியினரே ராசிக்கு 3ல் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 1, 2ம் இடத்திலும் ராகு பகவான் 4ம் இடத்திலும், கேது பகவான் 10ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்த குரு பகவான் 3ம் இடமான சகாய, சகோதர, தைரிய ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி யாகிறார். மகர ராசிக்கு குரு பகவான் 3,12ம் அதிபதி. 3ம் அதிபதி குரு 3ல் ஆட்சி பலம் பெறுவதால் நீங்கள் உறுதியான கோட்பாடு உடையவர்களாக மாறுவீர்கள். யாருக்காவும் மனதை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். அதே நேரத்தில்மற்றவர்களுடைய உணர்வுகளை மதித்து நடந்து கொள்வீர்கள். உங்கள் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்கவும் தயங்க மாட்டீர்கள். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஒரு மனிதன் வெற்றியை எட்டிப் பிடிக்கத்தேவையான தைரியம், தன்னம்பிக்கையும் மனதில் குடிபுகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.
ஆரோக்கிய குறைபாட்டால் தடைபட்ட இல்லற இன்பம் தித்திக்கும். மாற்றம் ஒன்றே மாறாது என்பது போல் மாற்றக் கூடிய அனைத்தையும் மாற்றும் ஆர்வம் ஏற்படும். சிலர் தொழிலை, தொழில் முறையை மாற்றுவார்கள். வீடு அல்லது வேலையில் இடமாற்றம் உண்டாகும்.செய்ய நினைத்ததை நினைத்தபடியே செயல்படுத்துவீர்கள்.குரு உங்களுக்கு விரயாதிபதி என்பதால் என்பதால் இளைய சகோதர சகோதரிகளிடன் சுப செலவிற்காகபெரும் தொகையை இழக்க நேரும். ஒரு சிலரின் இளைய சகோதரர் வெளிநாடு அல்லது வெளிமாநிலத்திற்கு இடம் பெயறுவார்கள். உடன் பிறந்தவர்களின் நலனில் ஆர்வம் மிகும். நிறைவேறாமல் தடங்கல் ஏற்பட்டு கொண்டிருந்த சில முக்கிய பணிகள் மூன்றாமிடத்து குருவால் நிறைவேற்றப்படும்.
குரு 12ம் அதிபதி என்பதால் ஞாபக மறதிஅதிகரிக்கும். ஆபரணங்களை கழட்டி அங்கே வைத்தேன், இங்கே வைத்தேன் என்று தேடிக் கொண்டே இருப்பீர்கள். முக்கியமான ஆவணங்கள் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள்அல்லது வைத்த இடம் மறந்து போகும் அல்லது ஆவணங்களில்திருத்தம் செய்ய நேரும். ணிழிஜி பிரச்சனைக்காக சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். சிலர் புதிய செல்போன் வாங்குவீர்கள். ஒரு சிலர் செல்போன் ஸீமீtஷ்ஷீக்ஷீளீ ஐ மாற்றுவார்கள்.தற்காப்பு கலை, வீர விளையாட்டு வீரர்கள் ஏற்றம் பெறுவார்கள். பெயர், புகழ் வெளிஉலகத்தில் பரவும்.திடீர் பெயர், புகழலால் ஆழ்மனதில் இனம் புரியாத பயம் கலந்த இன்பம் உங்களை வழி நடத்தும். கண்திருஷ்டி அதிகரிக்கும்.
5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 7ம்இடத்திற்கு பதிவதால் ஏழாமிடம் புனிதமடையும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார். தம்பதியினர்தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோவெவ்வேறு ஊர்களில் பிரிந்துவாழ்ந்து கொண்டிருந்தால்இப்பொழுதுஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . விவகாரத்து ஆன தம்பதிகள் கூட மறுபடியும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். மனக்கசப்பு மாறும். கூட்டுத் தொழில் சிறப்படையும். தொழில் கூட்டாளிகளிடம்இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு ஏற்படும். புதியதொழில் கூட்டாளிகள் கிடைப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம், உதவிகிடைக்கும். நண்பர்களுடன்விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
7ம் பார்வை பலன்கள்:குருவின் 7ம் பார்வை 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. கவுரவப்பதவிகள் தேடி வரும்.பதவி இழந்த பலருக்கு மீண்டும் பதவி கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்கருக்கு கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். பல வயதான மகர ராசியினருக்கு தாத்தா பாட்டியாகும் யோகம் கிட்டும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து உற்றார் உறவினர்களை சந்தித்து மகிழ்வார்கள். ஆன்மீக நாட்டம் மிகுதியாகும்.சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் முன்னோர்கள் நடத்தி வந்த பரம்பரை பூஜை புண்ணிய காரியங்களைதொடர்வீர்கள்.
9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு பதிகிறது.இதனால் பெரும்வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. வாழ்வில் வெற்றி பெற்று வாழ்வை வளம் பெறச் செய்யும் சூட்சமத்தை கற்பீர்கள். தொட்டது துலங்கும். தொழிலின் அனைத்து யுக்திகளையும் கடைபிடித்து ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி சூடுபடிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு தொழிலைவிரிவுபடுத்தும் வாய்ப்பு கிட்டும். மருத்துவம், உணவு சார்ந்ததொழில்.ஆடை அணிகலன்கள் , அழகுப்பொருட்கள் போன்ற துறையில் உள்ளவர்களுக்கு தொழில் வளர்ச்சி பெறுவர்.
கலைத் துறையினர் அதிக நற்பலன் அடைவர். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் நிலவி வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால்மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல்இருந்தவர்களுக்குவேலையில் சேர உத்தரவு வந்து விடும். குருப் பார்வை பட்ட இடம் பெருகும் என்பதால் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் மிகக் குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும்.உங்களின் அனைத்து தேவைகளையும்பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவு செய்யப் போகிறீர்கள். ஆயுள் ஆரோக்யம் அதிகரிக்கும்.
வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த சட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கோர்ட், கேஸ், வக்கீல் என்று அழைந்து விரக்தி அடைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாகும். நிதி நிறுவனங்கள் வீட்டிற்கு தேடி வந்து கடன் கொடுப்பார்கள். அரசுவழி ஆதாயம் உண்டாகும். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். அடமான நகைகள், சொத்துக்கள் மீட்கப்படும். பாலிசி முதிர்வு தொகை, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். மூத்த சசோதர வழி ஆதாயம் ஏற்படும். முன்னோர்கள் சொத்தைபிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள்மறைந்துசொத்துக்கள் உங்களுக்கு சாதமாக பிரிக்கப்படும்.
குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் கேது உள்ளது. சனி பார்வையும் 10ம் இடத்திற்கு உள்ளதால் தொழில் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். 4ல் ராகு உள்ளதால் வேலையாட்கள் பிரச்சனை உருவாகும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும்எண்ணம் உருவாகும். பெண்கள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. வீண் பழி உருவாகும். மறைமுக எதிரி தாக்கம் உருவாகும். உங்களின் இயல்பானபணிகளை வெற்றிகரமாக செயல்படுத்த இயலாது.
பெண்கள்:மனதில் மகிழ்ச்சியானஎண்ணங்கள் தோன்றும். முயற்சிகள் விரைவில் பலிதமாகும். தன வரவு திருப்தி தரும். பொருளாதார வளர்ச்சிசீராக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.புதிய அணிகலன்கள் ,அழகு,ஆடம்பரப் பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள். மூத்தசகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுமறைந்து தடைபட்ட பாகப்பிரிவினைசொத்து, பணம் வரும்.
பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சிவ வழிபாடு செய்வது நல்லது. வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜைநடக்க உதவுதல், ஆதரவற்ற பிணங்களின் தகனத்திற்கு உதவுதல் ஆகிய மூன்றும்அசுவமேத யாகம் செய்த தற்குச் சமம்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






