என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை யுண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டின் மூலம் வளர்ச்சி காண வேண்டிய நாள். ஒருவகையில் சிக்கனமாக இருந்தாலும் மற்றொரு வழியில் செலவுகள் ஏற்படலாம். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். விரயங்கள் மேலோங்கும். குடும்பத்தில் அமைதி குறையும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். உறவினர் பகை உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
போராட்ட நிலை மாறும் நாள். புதிய பாதை புலப்படும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உடல்நலம் சீராகும். சான்றோர்களின் சந்திப்பு உண்டு. மாலை நேரத்தில் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வரவும் செலவும் சமமாகும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளைத் தொடருவீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். தொகை கேட்டஇடத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன்
தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்லும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் உயரும். பயணம் பலன் தரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வெற்றிச் செய்திகள் விடிகாலையிலேயே கிடைக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லபடியாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை கூடும். வரவேண்டிய கடன் பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர்.
மகரம்
இன்றைய ராசி பலன்
மனமாற்றத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல ஓசைமனையில் கேட்கும் வாய்ப்புக் கைகூடிவரும். வியாபார விருத்தி உண்டு. கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு உண்டு. புது முயற்சிக்கு கைகொடுத்து உதவ நண்பர்கள் முன்வருவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் உள்ள மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.






