என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன் -4 அக்டோபர் 2024

    மனக்குழப்பம் அகலும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். வருமானம் போதுமானதாக இருக்கும். கவுரவப் பதவி தேடிவரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024

    நினைத்த காரியம் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வீட்டைச் சீரமைக்கும் பணி தொடரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2024

    எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024

    வழிபாட்டின் மூலம் வளர்ச்சி ஏற்படும் நாள். எதையும் யோசித்து செய்வது நல்லது. பணியில் குறுக்கீடுகள் ஏற்படும். பண நெருக்கடி அதிகரிக்கும். நண்பர்களால் கையிருப்பு கரையலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் துணிந்து செய்ய இயலாது. தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இடமாற்றம், ஊர் மாற்றம். செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2024

    விரயங்கள் ஏற்படும் நாள். அலைச்சல் சற்று அதிகரிக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2024

    மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 27 செப்டம்பர் 2024

    பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நீண்ட நாட்களாக விலகி இருந்த உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். உத்தியோகத்தில் அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 26 செப்டம்பர் 2024

    செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். விவாகப் பேச்சுகள் முடிவாகும். வீடுமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2024

    வருமானம் திருப்தி தரும் நாள். இருப்பினும் வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2024

    அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயம் தரும். உடல்நலம் சீராகும். பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல் மாறும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2024

    சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நன்மை உண்டு.

    ×