என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி கைகூடும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். விலையுயர்ந்த பொருட்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை.
மகரம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம்மாறுவர். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் புதிய வேலைக்கு விண்ணப்பிக்கலாமா என்று சிந்திப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல் நலம் சீராகும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் கூடும் நாள். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. பணவரவு தாமதப்படும். வீட்டிற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். பிரபலமானவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பிரச்சினை ஏற்படலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன் 30.5.22
பக்குவமாக பேசி பாராட்டுகளை பெறும் நாள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோக உயர்வால் குடும்பத்தை விட்டு வேறு ஊரில் பணிபுரிய நேரிடலாம்.
மகரம்
இன்றைய ராசி பலன் 28.5.22
கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் உண்டு.
மகரம்
இன்றைய ராசி பலன் 27.5.22
வெற்றி செய்திகள் வந்து சேரும் நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரன்கள் வாயில் தேடி வரும்.
மகரம்
இன்றைய ராசி பலன்
விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும் நாள். வீடு மாற்றம் நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். எப்படி நடக்குமென்று நினைத்த காரியம் நல்ல விதமாக முடிவடையும். வழக்குகள் சாதகமாக முடியும்.
மகரம்
ராகுகேது பெயர்ச்சி பலன்கள் - 2023
12.4.2022 முதல் 30.10.2023 வரை
நான்கில் ராகு/ பத்தில் கேது
காரியவாதியான மகர ராசியினரே ராசிக்கு 4-ல் ராகுவும், 10-ல் கேதுவும் பயணிக்கிறார்கள். குருபகவான் 3, 4--ம் இடத்திலும், சனி பகவான் ராசி மற்றும் 2-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள்.
நான்காமிட ராகுவின் பொது பலன்கள்:நான்காமிடம் என்பது சுக ஸ்தானம். அசையும், அசை யாச் சொத்துக்கள் பற்றிக் கூறுமிடம். ராசி அதிபதி சனிக்கு ராகு/கேதுக்கள் பகை கிரகங்கள். பொதுவாக ராகு பேராசையை மிகைப்படுத்தும் கிரகம் என்பதால் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும்.
கலை நிகழ்ச்சிகள், சினிமா, நாடகம், அழகு, ஆடம்பரம் போகம் என மனம் லௌகீக இன்பங்களை சுற்றிவரும். தாயின் ஆரோக்கியக் குறை பாட்டில் இருந்த கவலைகள் அகலும். தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும். தாய் வழி உறவி னர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வந்து சேரும்.
பூமி தொடர்பான ரியல் எஸ்டேட் தொழிலில் இருப் பவர்களுக்கு மிக ஏற்றமான நேரம். சொந்த வீடு இல்லா தவர்களுக்கு வீடு அமையும். சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம்.வெகு சிலருக்கு அடமானத்திலிருக்கும் சொத்துக்கள் மீண்டு வரும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புதிய சொத்தாகி விடும். சிலருக்கு சொத்து வாங்க தாயின்ஆதரவு கிடைக்கும். சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள்.
ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.
12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்: கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். சூரியன் மகரத்திற்கு அஷ்டமாதிபதி. ராசி அதிபதி சனிக்கு சூரியன் பகை. சனி, சூரியனுக்கு ராகு/கேது பகை. ஜனன கால தசாபுத்தி சாதகமாக இருந்தாலும் ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுப பலன் ஏற்படும் வாய்ப்பு குறைவு. வெகு சிலருக்கு எட்டாம் பாவக பலன்களான அவமானம், கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும்.
சிறை தண்டனையில் இருப்பவர்களுக்கு நன் நடத்தையால் தண்டனை காலம் குன்றக்கப்படும். ஆயுள் பலம் உண்டு. திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராத தன வரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த கால கட்டத்தில் மகர ராசி பெண் பிள்ளைகளுக்கு திருமண முகூர்த்தம் வைப்பதை தவிர்க்கவும்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்ரன் மகரத்திற்கு 5,10ம் அதிபதி. அதிர்ஷ்டம் தொழில், பதவி ரூபத்தில் வந்து கதவைத் தட்டும் புதிய தொழில் சந்தர்ப்பம் தேடி வரும். மிகப் பெரிய புகழ் கிடைக்கும். பணம் புரளுமா? வங்கி கணக்கில் உபரி பணம் சேமிப்பாக இருக்குமா? என்பது சந்தேகம்.
கமிஷன் அடிப்படையிலான தொழில், கன்சல்டிங் நிறுவனங்களுக்கு தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். பணம் சம்பாதிக்காவிட்டால் கூட பரவாயில்லை. பணத்தை இழக்க கூடாது. சில ஆண்கள் மற்றும் பெண்கள் இது போன்ற காலகட்டத்தில் மன ஆறுதலுக்காக குடும்ப விஷயத்தை பிறருடன் பகிரக் கூடாது. பூர்வீக சொத்து தொடர்பான செயல்களை ஒத்தி வைக்கவும். சிலர் தொழில் உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். புத்திர பிராப்தம் உண்டாகும்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 10ல் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிக்கும் காலம். எந்த செயலாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும். வேகத்தை விட விவேகம் முக்கியம். இந்த காலகட்டத்தில் சில படிப்பினைகளை ராகு/கேதுக்கள் வழங்குவார்கள். வட்டி தொழில், சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ், அடமானக் கடை , பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்கள் பணப் பரிவர்தனைக்கு முறையான ஆதாரம் வைத்து இருக்க வேண்டும். நெருங்கிய ரத்த பந்த உறவுகளுடன் தேவையற்ற கருத்துப் பரிமாற்றத்தை தவிர்க்கவும்.
10மிட கேதுவின் பலன்கள்:10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. சுமாராக இருந்த தொழில் கூட சூப்பர் தொழிலாகும். இழுத்து மூடி விட்டுப் போகும் நிலையில் உள்ள தொழில் கூட முன்னேற்றமடையும். கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும். சுய தொழில் செய்கிறவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிட்டும். தொழில் நீதியாக பிரபலங்களின் ஆதரவு, உதவி கிடைக்கும். தொட்டது துலங்கும்.
வழக்கத்தை விட அதிகமான பணம் சம்பாதிப்பீர்கள். ஆனால் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையால் கடன் அதிகரிக்கும். 10ல் கேது இருப்பதால் இந்த ஒன்றரை வருடமும் கடன் எந்த ரூபத்தில வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம். 4ல் ராகு இருப்பதால் சிலர் கடன் பட்டு சொத்து வாங்கலாம் அல்லது சுப செலவிற்காக கடன் படலாம். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பிறருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும்.
பொதுவாக ஜனன கால ஜாதகத்தில் 10ல் கேது இருப்பவர்கள் பல தொழில் வித்தகராக இருப்பார்கள். மிகுதியான தொழில் ஞானம் உண்டு. ஆனால் தொழில் கடனால் வாழ்நாள் அவஸ்தை உண்டு. கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு மகரத்திற்கு 3,12ம் அதிபதி. சிலர் வெளியூர், வெளிநாடு என வாழ்வாதாரத்திற்கு இடம் பெயரலாம். சில அரசு ஊழியர்கள் பதவி உயர்வு என்ற பெயரில் பிடித்தம் இல்லாத ஊருக்கு சென்று கடமையாற்றும் சூழல் உண்டாகும். ஞாபக சக்தி குறையும்.
வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகாது என்பதால் வழக்குகளை ஒத்திப் போட வேண்டும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் பண மோசடி மிகுதியாக இருக்கும். கோட்சார குரு 3, 4ம் இடங்களில் சஞ்சரிப்பதால் பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும்.
18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 4ல் பயணிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கோட்சார கேது சஞ்சரிக்கும் காலம்.சிறு, சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம். முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகாவுடன் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையும் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும். சிலர் சட்டச் சிக்கல் நிறைந்த சொத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். சிலர் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படலாம். அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சனை ஏற்படலாம்.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் மகரத்திற்கு 4,11-ம் அதிபதி. இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும்.விவசாயிகள் பன்படுத்த முடியாத தங்களின் விளை நிலங்களை குத்தகைக்கு விட்டு வருமானம் பெறலாம். கால்நடை மற்றும் உயிரினம் வளர்பவர்களுக்கு ஆதாயம் மிகும்.விவசாயிகள் கிணறு வெட்டலாம். பம்பு செட் போடலாம். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் தீய நண்பர்களின் சேர்க்கையிலிருந்து விடுபடலாம்.
ராகு/கேது, குருவின் சஞ்சாரம் மற்றும் சற்று சுமாராக இருந்தாலும் ராசி அதிபதி சனியின் ஆதிக்கம் வலுவாக இருப்பதால் உங்களை யாரும் அசைக்க முடியாது என்பதால் நிம்மதியாக இருக்கலாம்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மகரம்
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023
உறுதியான எண்ணம் நிறைந்த மகர ராசியினரே ராசிக்கு 3ல் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 1, 2ம் இடத்திலும் ராகு பகவான் 4ம் இடத்திலும், கேது பகவான் 10ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்த குரு பகவான் 3ம் இடமான சகாய, சகோதர, தைரிய ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி யாகிறார். மகர ராசிக்கு குரு பகவான் 3,12ம் அதிபதி. 3ம் அதிபதி குரு 3ல் ஆட்சி பலம் பெறுவதால் நீங்கள் உறுதியான கோட்பாடு உடையவர்களாக மாறுவீர்கள். யாருக்காவும் மனதை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். அதே நேரத்தில்மற்றவர்களுடைய உணர்வுகளை மதித்து நடந்து கொள்வீர்கள். உங்கள் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்கவும் தயங்க மாட்டீர்கள். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஒரு மனிதன் வெற்றியை எட்டிப் பிடிக்கத்தேவையான தைரியம், தன்னம்பிக்கையும் மனதில் குடிபுகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.
ஆரோக்கிய குறைபாட்டால் தடைபட்ட இல்லற இன்பம் தித்திக்கும். மாற்றம் ஒன்றே மாறாது என்பது போல் மாற்றக் கூடிய அனைத்தையும் மாற்றும் ஆர்வம் ஏற்படும். சிலர் தொழிலை, தொழில் முறையை மாற்றுவார்கள். வீடு அல்லது வேலையில் இடமாற்றம் உண்டாகும்.செய்ய நினைத்ததை நினைத்தபடியே செயல்படுத்துவீர்கள்.குரு உங்களுக்கு விரயாதிபதி என்பதால் என்பதால் இளைய சகோதர சகோதரிகளிடன் சுப செலவிற்காகபெரும் தொகையை இழக்க நேரும். ஒரு சிலரின் இளைய சகோதரர் வெளிநாடு அல்லது வெளிமாநிலத்திற்கு இடம் பெயறுவார்கள். உடன் பிறந்தவர்களின் நலனில் ஆர்வம் மிகும். நிறைவேறாமல் தடங்கல் ஏற்பட்டு கொண்டிருந்த சில முக்கிய பணிகள் மூன்றாமிடத்து குருவால் நிறைவேற்றப்படும்.
குரு 12ம் அதிபதி என்பதால் ஞாபக மறதிஅதிகரிக்கும். ஆபரணங்களை கழட்டி அங்கே வைத்தேன், இங்கே வைத்தேன் என்று தேடிக் கொண்டே இருப்பீர்கள். முக்கியமான ஆவணங்கள் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள்அல்லது வைத்த இடம் மறந்து போகும் அல்லது ஆவணங்களில்திருத்தம் செய்ய நேரும். ணிழிஜி பிரச்சனைக்காக சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். சிலர் புதிய செல்போன் வாங்குவீர்கள். ஒரு சிலர் செல்போன் ஸீமீtஷ்ஷீக்ஷீளீ ஐ மாற்றுவார்கள்.தற்காப்பு கலை, வீர விளையாட்டு வீரர்கள் ஏற்றம் பெறுவார்கள். பெயர், புகழ் வெளிஉலகத்தில் பரவும்.திடீர் பெயர், புகழலால் ஆழ்மனதில் இனம் புரியாத பயம் கலந்த இன்பம் உங்களை வழி நடத்தும். கண்திருஷ்டி அதிகரிக்கும்.
5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 7ம்இடத்திற்கு பதிவதால் ஏழாமிடம் புனிதமடையும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார். தம்பதியினர்தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோவெவ்வேறு ஊர்களில் பிரிந்துவாழ்ந்து கொண்டிருந்தால்இப்பொழுதுஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . விவகாரத்து ஆன தம்பதிகள் கூட மறுபடியும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். மனக்கசப்பு மாறும். கூட்டுத் தொழில் சிறப்படையும். தொழில் கூட்டாளிகளிடம்இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு ஏற்படும். புதியதொழில் கூட்டாளிகள் கிடைப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம், உதவிகிடைக்கும். நண்பர்களுடன்விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
7ம் பார்வை பலன்கள்:குருவின் 7ம் பார்வை 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. கவுரவப்பதவிகள் தேடி வரும்.பதவி இழந்த பலருக்கு மீண்டும் பதவி கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்கருக்கு கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். பல வயதான மகர ராசியினருக்கு தாத்தா பாட்டியாகும் யோகம் கிட்டும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து உற்றார் உறவினர்களை சந்தித்து மகிழ்வார்கள். ஆன்மீக நாட்டம் மிகுதியாகும்.சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் முன்னோர்கள் நடத்தி வந்த பரம்பரை பூஜை புண்ணிய காரியங்களைதொடர்வீர்கள்.
9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு பதிகிறது.இதனால் பெரும்வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. வாழ்வில் வெற்றி பெற்று வாழ்வை வளம் பெறச் செய்யும் சூட்சமத்தை கற்பீர்கள். தொட்டது துலங்கும். தொழிலின் அனைத்து யுக்திகளையும் கடைபிடித்து ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி சூடுபடிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு தொழிலைவிரிவுபடுத்தும் வாய்ப்பு கிட்டும். மருத்துவம், உணவு சார்ந்ததொழில்.ஆடை அணிகலன்கள் , அழகுப்பொருட்கள் போன்ற துறையில் உள்ளவர்களுக்கு தொழில் வளர்ச்சி பெறுவர்.
கலைத் துறையினர் அதிக நற்பலன் அடைவர். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் நிலவி வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால்மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல்இருந்தவர்களுக்குவேலையில் சேர உத்தரவு வந்து விடும். குருப் பார்வை பட்ட இடம் பெருகும் என்பதால் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் மிகக் குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும்.உங்களின் அனைத்து தேவைகளையும்பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவு செய்யப் போகிறீர்கள். ஆயுள் ஆரோக்யம் அதிகரிக்கும்.
வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த சட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கோர்ட், கேஸ், வக்கீல் என்று அழைந்து விரக்தி அடைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாகும். நிதி நிறுவனங்கள் வீட்டிற்கு தேடி வந்து கடன் கொடுப்பார்கள். அரசுவழி ஆதாயம் உண்டாகும். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். அடமான நகைகள், சொத்துக்கள் மீட்கப்படும். பாலிசி முதிர்வு தொகை, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். மூத்த சசோதர வழி ஆதாயம் ஏற்படும். முன்னோர்கள் சொத்தைபிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள்மறைந்துசொத்துக்கள் உங்களுக்கு சாதமாக பிரிக்கப்படும்.
குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் கேது உள்ளது. சனி பார்வையும் 10ம் இடத்திற்கு உள்ளதால் தொழில் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். 4ல் ராகு உள்ளதால் வேலையாட்கள் பிரச்சனை உருவாகும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும்எண்ணம் உருவாகும். பெண்கள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. வீண் பழி உருவாகும். மறைமுக எதிரி தாக்கம் உருவாகும். உங்களின் இயல்பானபணிகளை வெற்றிகரமாக செயல்படுத்த இயலாது.
பெண்கள்:மனதில் மகிழ்ச்சியானஎண்ணங்கள் தோன்றும். முயற்சிகள் விரைவில் பலிதமாகும். தன வரவு திருப்தி தரும். பொருளாதார வளர்ச்சிசீராக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.புதிய அணிகலன்கள் ,அழகு,ஆடம்பரப் பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள். மூத்தசகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுமறைந்து தடைபட்ட பாகப்பிரிவினைசொத்து, பணம் வரும்.
பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சிவ வழிபாடு செய்வது நல்லது. வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜைநடக்க உதவுதல், ஆதரவற்ற பிணங்களின் தகனத்திற்கு உதவுதல் ஆகிய மூன்றும்அசுவமேத யாகம் செய்த தற்குச் சமம்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






