என் மலர்
கடகம்
வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை
20.7.2025 முதல் 26.7.2025 வரை
சுபிட்சமான வாரம். ராசியில் தனாதிபதி சூரியன் சஞ்சரிக்க போகும் அற்புதமான வாரம். ஆன்ம பலம் பெருகி மன சஞ்சலம், பய உணர்வு அகலும். பிரிந்து சென்ற குடும்ப உறவுகள் திரும்ப வருவார்கள். குடும்பத்தில் தடைபட்ட அனைத்து சுப நிகழ்வுகளும் பூர்த்தியாகும். தொழிலில் ஏற்றம் அதிகரிக்கும்.
ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் அகலும். வைத்திய செலவு குறையும். ஆன்மிக சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். வருமானம் உயரும். பெண்கள் புதிய நகைச் சீட்டு துவங்கலாம். வேலையாட்களால் ஏற்பட்ட தொந்தரவு நீங்கும். சிலர் வீட்டை பழுது நீக்கம் செய்யலாம். சிலர் கூட்டாளிகளுடன் இணைந்து புதிய தொழில் கிளைகள் ஆரம்பிக்கலாம்.
சந்தான பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு குலதெய்வ அனுகூலத்தால் குழந்தை பிறக்கும். பிறமொழி பேசுபவர்களின் உதவிகள் கிடைக்கும். இழந்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். ஆடி வெள்ளிக்கிழமை கூழ் தானம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






