வார ராசிபலன் 11.1.2026 முதல் 17.1.2026 வரை

Published on

11.1.2026 முதல் 17.1.2026 வரை

கடகம்

மகிழ்ச்சியான வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் சமசப்தம ஸ்தானத்தில் நின்று ராசியை பார்க்கிறார். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வதோடு, குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும். ஆரோக்கியம், தொழில், கல்வி உத்தியோகம் போன்றவற்றில் நிலவிய தடை, பிரச்சனைகள் சீராகும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், மூத்த சகோதரர் வகையில் ஆதரவும், அன்பும் கிடைக்கும். தந்தை வழி உறவு மேம்படும்.

திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்த தம்பதிகள் அல்லது பிரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற தம்பதிகள் இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். கொடுக்கல், வாங்கல் சீராகும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. ஸ்ரீ காலபைரவரை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com