என் மலர்
கடகம்
இந்த வார ராசிப்பலன்
15.8.2022 முதல் 21.8.2022 வரை
சிறப்பான பலன்கள் தேடி வரும் வாரம்.நான்காம் அதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிப்பதால் பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும். ஆண்களுக்கு மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். குழந்தை பேறு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது. தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவார்கள்.
முக்கிய பணிகளை ஒத்திப்போடும் எண்ணத்தைத் தவிர்த்து வியாபாரத்தில் நுணுக்கமாக நடந்து கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். சில அரசியல் பிரமுகர்கள் சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவார்கள். சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் மனரீதியான குழப்பங்கள் வந்து விலகும்.
சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். அன்னையின் அன்பு அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆறுதலாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்மேற்கொள்ளப்படும். சிலரின் மறுமண முயற்சி வெற்றி தரும்.
இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். தினமும் லலிதா சகஸ்ர நாமம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406