search icon
என் மலர்tooltip icon

  கடகம் - சோபகிருது வருட பலன்

  கடகம்

  சோபகிருது வருட பலன் 2023

  வளர்ச்சியும், எழுச்சியும் உண்டு.!

  சந்திரனைப் போன்ற அழகும் மதி நுட்பமும் நிறைந்த கடக ராசியினருக்கு இந்த சோப கிருது வருட தமிழ் புத்தாண்டு வளர்ச்சியும் எழுச்சியும் வழங்கிட நல் வாழ்த்துக்கள். திருக்கணித பஞ்சாங்கப்படிஇந்த தமிழ் புத்தாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 22 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானதம்செல்கிறார். ஜனவரி 17 முதல் சனி பகவான் அஷ்ட ஸ்தானத்தில் நின்று அஷ்டம சனியின் ஆதிக்கத்தை வழங்கிக் கொண்டு இருக்கிறார். அக்டோபர் 30, 2023 வரை 10, 4ம்மிடத்தில் ராகுவும், கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். அதன் பிறகு 9, 3ம்மிடம் செல்கிறார்கள். இது அஷ்டமச் சனியின் காலம் என்றாலும் தொழில் ஸ்தான குருவும் ராகு, கேதுவும் தங்கள் ஆதரவால் உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தருவார்கள்.

  மதி நுட்பமான காரியத்தால் அனைவரது நட்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். எதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். கடல் கடந்து சென்று பொருள் ஈட்டும் யோகமும் உள்ளது.திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும்.புதிய தொழில் முயற்சி, தொழில் விரிவாக்கம் போன்றவற்றை சுய ஜாதக ரீதியாக அமைத்துக் கொள்ள வெற்றி உங்களுக்கு துணை நிற்கும்.சுப கடன் வாங்கி பூமி, வீடு,வாகன, வசதியை பெருக்குவீர்கள். ஆரோக்தியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கண்திருஷ்டி, மன நல பாதிப்பு, செய்வினைக் கோளாறு, பய உணர்வு, மாந்தரீக பாதிப்பு அகலும். .அஷ்டமச் சனி முடியும் வரை திருமணத்தை தள்ளிப் போடுவது நல்லது.

  குடும்பம், பொருளாதார நிலை: உங்களின் எண்ணங்கள், முயற்சிகள் உயர்வானதாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். உங்களுடைய தகுதி, திறமைஉயரும் . சமுதாய அங்கீகாரம்ஏற்படும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்களும் ஏற்றங்களும் வீடு தேடி வரும்.திடீர்அதிர்ஷ்டம், தனவரவு வரும். சுப செலவு ஏற்படும். சிலருக்கு அவசரத்திற்கு கையில் பணம் இல்லாவிட்டலும் கேட்ட இடத்தில் பணம் கிடைத்து முக்கிய தேவையை நிறைவு செய்ய முடியும்.வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும்.பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம்போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும்.

  பெண்கள்: கணவன், மனைவி உறவில் இணக்கமும்,அன்பும் இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு,தாய் வழியில் வரவேண்டிய சொத்தை நினைத்து மனதை வருத்தி உடல் ஆரோக்கியத்தை கெடுக்க கூடாது. உடல் நோய்க்கு மருந்துண்டு. மனநோய்க்கு காலம் தான் மருந்து. இரண்டாம் இடத்திற்கு குரு பார்வையுடன்சனி பார்வையும் இருப்பதால் சிறிய மனசஞ்சலம் மற்றும் வாக்குவாதத்திற்கு பிறகே தாய்வழி சொத்து வந்து சேரும். நம்பிக்கையும், தைரியமும் மனிதனுக்கு மிக முக்கியம். நம்பிக்கையும் நிதானமும் இருந்தால் வெற்றி நிச்சயம்.

  புனர்பூசம் 4: அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும் காலம். தொட்ட காரியங்கள் துலங்கும். குல தெய்வ அருள் கிடைக்கும்.சுய முயற்சிகள் பலிதமாகும். தாய், தந்தை பொருள் உதவி செய்து தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.சிறு குழந்தைகளுக்கு பேச்சு வருவதில் கால தாமதம் ஏற்படும். இதற்காக பணம் , நேரத்தைவீண் செய்ய வேண்டாம் தானாக சரியாகிவிடும்.

  என்றோ வாங்கிய பங்குகள் இப்பொழுது நல்ல லாபத்தை பெற்றுத்தரும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. நிலுவையில் உள்ள தொகைகள் கைக்கு வந்து சேரும்.சிலருக்கு சொத்து தொடர்பான வழக்குகள் உருவாகலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு உறுதி. தினமும் சிவ புராணம் படிக்கவும்.

  பூசம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் மற்றும் தைரியம் உண்டாகும் காலம். நீண்ட காலமாக முடங்கி கிடந்த அனைத்து காரியங்களும் வெற்றியைத் தரும்.

  நோய் தாக்கம் குறையும், கடன் நீங்கும்.எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள். ஞாபகசக்தி அதிகரிக்கும்.பாகப் பிரிவினை மற்றும் சொத்து தொடர்பான கோர்ட், கேஸ் பிரச்சனையில் சாதகமான தீர்ப்பு வரும் உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பொன், பொருள் ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். மன சஞ்சலத்தால் வேறு மதத்திற்கு மாறியவர்கள் மீண்டும் சொந்த மதத்திற்கு மாறுவார்கள். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். அஷ்டமச் சனியின் தாகத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் பெரும் பாதிப்புஏற்படாது' தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். தினமும் திருக்கோளாறு பதிகம் படிக்கவும்.

  ஆயில்யம் : விபரீத ராஜ யோகத்தால் சிற்றின்பம், பேரின்பமாக மாறி,உற்சாகப்படுத்தும் காலம். பல்வேறு வழிகளிலும் செல்வமும் அதிர்ஷ்டமும் உங்களை திணறடிக்கும். எவ்வளவு தாழ்வான நிலையில் இருப்பவரும் மிகக் குறுகிய காலத்தில் லாபக் கடலில் நீந்துவீர்கள் . பெரும் வாழ்வியல் மாற்றம் நிகழப் போவதில் எந்த சந்தேகமும் இல்லை.அந்நிய மதத்தவர் அல்லது அந்நிய மொழியினரால் ஆதாயம் ஏற்படும்.இளைய மனைவியின் பூர்வீகச் சொத்து உங்கள் பெயருக்கு வரும்.சொத்து வாங்கும், விற்கும் முயற்சியில் பலிதமாகும். மூத்த சகோதரம், சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும். தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை கடைபிடிப்பது அவசியம். அலைச்சல் மிகுந்த பயணம் உண்டாகும். விவசாயிகளுக்கு அரசு வகை ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கு வட்டியில்லா கடன் கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு தேடி வரும்.தினமும் சுந்தரகாண்டம் படிக்கவும்.

  பரிகாரம் : அஷ்டமச் சனியின் பாதிப்பு விலகி சுப பலன் அதிகரிக்க தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் உள்ள அருள்மிகு சனீஸ்வரரை வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கடகம்

  சுபகிருது வருட பலன் - 2023

  கற்பனையுணர்வு மிகுந்தகடக ராசியினருக்கு தமிழ் புத்தாண்டு நிறைந்த பொருளாதாரத்தை வழங்க நல் வாழ்த்துக்கள்.

  இந்த புத்தாண்டில் ராகு பகவான்10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். கேது பகவான் 4ம் இடமான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 7, 8ம் இடங்களில் சஞ்சரிக்கிறார். இந்த சுப கிருது ஆண்டு முழுவதும் பாக்கியாதிபதி குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் ஒளிமயமான எதிர்காலம் அமையப்போகிறது. கண்டகச் சனியின் பாதிப்புகள் குறையும்.

  கடந்த 5 மாதங்களாக அஷ்டம குருவால் ஏற்பட்ட இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். பத்தில் சஞ்சரிக்கும் ராகு நிலையான தொழிலால் உங்களைவளம் செய்யப் போகிறார். குருபகவான் ராசியை பார்ப்பதால் தடை பட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும். மனக் குழப்பம் நீங்கி தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள் மொத்தத்தில் ஆரவாரம் நிறைந்த புத்தாண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  குடும்பம்: ராசி, 5 மற்றும் 9ம்மிடம் குருவின் பார்வையால் புனிதமடைவதால் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் அன்பில் ஆனந்தம் அடைவீர்கள். பிரிந்த குடும்ப உறவுகளின் வருகை ஆறுதலையும் நிம்மதியையும் தரும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும். ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.விவகாரத்து வழக்கு சாதகமாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

  ஆரோக்கியம்: 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் கேது நிற்பதால்சிலருக்கு யூரினரி இன்பெக்சன், கல்லடைப்பு போன்ற கணையம், சிறுநீரகம் சம்பந்தமான உடல் உபாதைகள் தோன்றும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். தொழில் அலைச்சலால் நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாது.ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் உடல் உபாதைகள் எளிதில் கட்டுப்படும்.

  திருமணம்:பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும்.சிலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும். 2023ல் அஷ்டமச் சனி ஆரம்பமாகப் போவதால் 2022க்குள் திருமணத்தை நடத்தி முடிப்பது நல்லது.

  பெண்கள்:இந்த ராகு கேது பெயர்ச்சி மகிழ்ச்சியை மிகைப்படுத்தி தரும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். உற்றார் உறவினர்களுடன் நிலவிய மன பேதங்கள் மறையும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். தாய் வழிச் சொத்து கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். வீட்டுக் கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். இந்த ஆண்டு அனைத்து வகையிலும் திருப்புமுனையாக அமையும்.

  மாணவர்கள்:மாணவ - மாணவிகளின் கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.கல்வியில் சாதனை படைக்கக்கூடிய நல்ல காலம். உயர் கல்விக்கான வாய்ப்பு மிகச் சுலபமாக கிடைக்கும். வெளியூரில் அல்லது வெளிநாட்டில் விடுதியில் சென்று தங்கி படிக்கும் வாய்ப்பு உருவாகும்.4ல் கேது இருப்பதால் பரிட்சைக்கு செல்லும் முன்பு விநாயகரை வழிபடவும்.

  உத்தியோகஸ்தர்கள்:உத்தி யோகத்தில் இருப் பவர்களுக்கு பொறு ப்புகள் அதிகமாக வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும்.வருமானம் அதிகரிக்கும். உங்களது கடமைக்களை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். சக ஊழியர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும்.

  முதலீட்டாளர்கள்:சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். 10ல் ராகு இருப்பதால் நியாயம், தர்மத்திற்கு கட்டுப்பட்டு தொழில் நடத்தியவர்கள் கூட அதை காற்றில் பறக்க விட்டு குறுக்கு வழியில் தொழிலை வளர்க்க விரும்புவார்கள்.சுய தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு மிகச் சிறப்பான நல்ல நேரம். உற்பத்தி, கொள்முதல் அதிகரித்துக் கொண்டே இருக்கும் தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும். 17.1.2023ல் அஷ்டமச் சனி ஆரம்பமாகுவதால் தொழில் தொடர்பான அனைத்து விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

  அரசியல்வாதிகள்:சனியின் சஞ்சாரம் சற்று சுமாராக இருப்பதால் அரசியல் வாதிகளுக்கு பொது மக்களுக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வாக்குறுதி கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அநாவசியமான விமர்சனங்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

  கலைஞர்கள்:கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான தொழில் வளர்ச்சி ஏற்படும். உங்களது திறமையை வெளி உலகத்திற்கு காட்ட புதிய, புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். படப்பிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்காக கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டும்.இசைக் கலைஞர்கள், சினிமா பத்ரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் வசனகர்த்தாக்கள் ஆகியோர்க்ளுக்கு விருது கிடைக்கும்.

  விவசாயிகள்:செவ்வாயின் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு அபரிமிதமான நற்பலன்களை வழங்குவார். எதையும் தைரியமாக எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளுக்குஅதிக விளைச்சல் மற்றும் கால்நடைகள் வளர்ப்பில் வருமானம் அதிகரிக்கும். விளை நிலங்கள் தொடர்பான பங்காளி சண்டை பேச்சுவார்த்தை மூலமாக சரியாகும்.

  ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 10ல் நிற்கும் ராகுவாலும் 4ல் நிற்கும் கேதுவாலும் சில சங்கடங்கள் உருவாகலாம். ஜாதகரின் பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்கு ராகு உறுதுணையாக இருந்தால் கூடதொழில் மூலம் பெயருக்கு ஒரு கலங்கமும் ஏற்படலாம்.

  உங்கள் அறியாமை மற்றும் அவசர புத்தியால் சட்டச் சிக்கல் மற்றும் வாஸ்து குற்றம் நிறைந்த வீடு, மனைகளை வாங்க நேரலாம்.குறைந்த மதிப்புள்ள சொத்தை அதிக விலை கொடுத்து வாங்கலாம். அதிக மதிப்பு உள்ள சொத்தை குறைந்த விலைக்கு விற்கலாம்.சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகலாம். மின்சாதனங்கள், வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும்.

  குரு: 29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் கணவன், மனைவி உறவில் விரிசல் ஏற்படலாம். அல்லது தொழில் உத்தியோகம் தொடர்பாக தம்பதிகள் பிரிந்து வாழலாம். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிடிப்பு குறையும்.நம்பியவர்களே துரோகம் செய்யலாம். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். எந்த ஒரு நிலையிலும் அவசரம் வேண்டாம்.

  பரிகாரம்:வியாழக்கிழமை காலை 11--12சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்க நன்மை உண்டாகும்.

  கடன் சுமை தீரும்

  5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடன் பிரச்சனையிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய சிக்கல்கள் தீரும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். எதிர் பாராத தனவரவினால் பொருளாதார மாற்றமும் ஏற்றமும் மன மகிழ்வை தரும். வங்கியில் உபரித் தொகை சேமிப்புத் தொகை உயரும். கரைந்த சேமிப்புகள் வளரும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×