என் மலர்tooltip icon

    கடகம்

    2025 ஆடி மாத ராசிபலன்

    கடக ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே தனாதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். எனவே தனவரவிற்கு குறைவிருக்காது. அதே நேரத்தில் அஷ்டமத்துச் சனியும், வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். குருவின் பார்வை சனி மீது பதிவதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருந்தாலும் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். அஷ்டமத்துச் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் திட்டமிட்ட காரியங்களை திட்ட மிட்டபடி செய்து முடிப்பீர்கள்.

    மிதுன - சுக்ரன்

    ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். லாபாதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கத்தான் செய்யும். வீடு மாற்றமும், இடமாற்றமும் வந்துசேரும். மன வலிமை குறையும். எதிர்பாராத செலவுகளால் சில நேரங்களில் தடுமாற்றமும், கைமாற்று வாங்கும் சூழல்களும் உருவாகலாம். அரசு வழிப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், கட்டிய வீட்டைப் பழுது பார்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால், வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் உண்டு.

    கன்னி - செவ்வாய்

    ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 'கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் பொழுது, மிகுந்த நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியானவர் செவ்வாய் என்பதால், பூர்வ புண்ணியத்தின் பலனாக என்னென்ன கிடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் இப்பொழுது கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். இதுவரை தடையாக இருந்த சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். அவர்களுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் யோகமும் உண்டு.

    கடக - புதன்

    ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் வருகிறார். அவர் உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் சகாய ஸ்தானத்திற்கும் அதிபதியாவதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். சகோதர வழியில் கொடுத்து உதவுவீர்கள். உடன்பிறப்புகள், உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். அவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். தொழில் மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். சூரியனோடு புதன் இணைந்து 'புத-ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால், கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். அரசு வழி வேலைக்காக எடுத்த முயற்சியும் வெற்றி பெறும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நெருக்கடி நிலை அகலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு குறையும். கலைஞர்களுக்குப் புதிய பாதை புலப்படும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் ஏற்பட்ட தடை விலகும். பெண்களுக்கு பிரச்சினைகள் அதிகரித்தாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. வருமானம் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 21, 22, 27, 28, ஆகஸ்டு: 12, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    ×