என் மலர்
கடகம்
2025 சித்திரை மாத ராசிபலன்
பொதுவாழ்வில் ஈடுபட்டு புகழ் குவிக்கும் கடக ராசி நேயர்களே!
விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாத தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே செவ்வாய் நீச்சம் பெற்று சஞ்சரிக்கின்றார். எனவே தைரியமும் தன்னம்பிக்கையும் குறையும். தடைகளை முறியடித்து வெற்றி காண பெரும்முயற்சி எடுக்கும் சூழல் உருவாகும். அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் இருப்பதால் திட்டமிட்டு எதையும் செய்ய இயலாது.
திடீர் மாற்றங்கள் மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. புதிய வழக்குகளும் பிரச்சினைகளும் வந்து சேரும். வீண் பழிகளில் இருந்து விடுபட திசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
குரு - சுக்ர பரிவர்த்தனை
சித்திரை 1-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை குரு-சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியாக விளங்கும் குரு பரிவர்த்தனை யோகம் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். நினைத்தது நடக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பணப்பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகையும் வந்து சேரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்காக எடுத்த முயற்சி கைகூடும். தந்தை வழி உறவில் ஆதாயம் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
கும்ப - ராகு, சிம்ம - கேது
சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனியோடு ராகு சேருவதால் மிக கடுமையான நேரமாக கூட கருதலாம். இந்த சோதனை காலத்தில் எதையும் துணிந்து செய்ய இயலாது. மன போராட்டமும், பணப்பிரச்சினையும் அதிகரிக்கும். கேது பகவான் 2-ல் சஞ்சரிப்பதால் எதிர் காலத்தை பற்றிய பயம் அதிகரிக்கும்.
இல்லத்தில் நடக்க வேண்டிய சுபகாரியம் தள்ளிப்போகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. கூடுதல் முயற்சி செய்தாலும் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காமல் போகலாம். கட்டிய வீட்டால் பிரச்சினை, கொடுத்த கடனால் பிரச்சினை உருவாகும் நேரமிது. இக்காலத்தில் சர்ப்ப கிரகங்களுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
மேஷ- புதன் சஞ்சாரம்
சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து `புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு சகாய விரயஸ்தானாதிபதி புதன் என்பதால் சுப விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். அயல்நாட்டிலிருந்து வரும் அழைப்புகள் மகிழ்ச்சி தரும்.
மிதுன - குரு சஞ்சாரம்
சித்திரை 28-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வருகிறார். இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக அவரது பார்வை பதியும் இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. எனவே இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் வரும். மாற்று மருத்துவத்தின் மூலம் உடல் நலம் சீராகும். மக்கட் செல்வங்களின் திருமணம் பற்றிய தகவல் முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முன்னேற்ற பாதை தென்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கணிசமான லாபம் கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு கைநழுவி சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைக்கும். மாணவ, மாணவியர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலமே ஆதாயம் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஏப்ரல்: 14, 15, 25, 26, மே: 6, 7, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.






