என் மலர்
மேஷம்
2026 புத்தாண்டு ராசிபலன்
மேஷ ராசி நேயர்களே!
உற்சாகமான மேஷ ராசியினருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பிறக்கப் போகும் 2026ம் ஆண்டு மேஷ ராசியினருக்கு லாபத்தை ஏற்படுத்தி தரக்கூடிய ஆண்டாக அமையப் போகிறது. இந்த ஆண்டின் கிரக நிலவரங்கள் மேஷ ராசிக்கு மிக சாதகமாக இருப்பதால் உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாழ்க்கையை நடத்துவதில் நிலவிய சங்கடங்கள் அகலும். உங்களின் முயற்சிகள் வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும். சில சில சங்கடங்கள் வந்தாலும் அவற்றை உங்கள் திறமையால் சரி செய்து முன்னேற்றம் அடைவீர்கள்.
குருவின் சஞ்சார பலன்கள்
2026 ஆம் ஆண்டு துவக்கத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கப் போகிறார். 2026 ஜூன் மாதம் 2ம் தேதி முதல் 4ம்மிடமான சுகஸ்தானத்திற்கு செல்கிறார்.
இது உங்களுக்கு இழந்ததை மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். தடைபட்ட பாக்கியங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் முயற்சிக்கு உகந்த அற்புதமான நேரம். முன்னோர்களின் நல்லாசியால் பூர்வ புண்ணிய பலத்தால் சொத்துத் தகராறுகள் அகலும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என அவரவர் வயதிற்கேற்ற சுப பலன்கள் உண்டு. பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்கும்.
சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு தேடி வரும். பொருளாதாரத்தில் நிலவிய சிக்கல், சிரமங்கள் விலகி பொருள் வரவு அதிகரிக்கும். வராக்கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும். அடமானப் பொருட்களை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். சொத்துக்கள் சேர்க்கை அதிகமாகும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும்.சொத்துக்களின் மதிப்பு உயரும். ஆரோக்கியத்தில் நிலவிய பாதிப்புகள் அகலும். திருமணம், குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். பெண்களுக்கு தாய் வழியில் சொத்துக்கள், பணம், நகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சனியின் சஞ்சார பலன்கள்
2026ம் ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் நின்று விரயச் சனியாக பலன் தருவார்.
இது மேஷ ராசிக்கு ஏழரைச் சனியின் காலமாகும்.தடைகள் தகரும் வாரம். பொதுவாக ராசி மற்றும் லக்னத்திற்கு அசுப கிரகங்களான சனி, ராகு, கேது, செவ்வாய் சம்பந்தம் இல்லாமல் இருப்பது நல்லது. கடந்த காலங்களில் ராசியை சனி பார்த்ததால் ஏற்பட்ட சங்கடங்கள் அதிகம். தற்போது ஏழரைச் சனி துவங்கினாலும் சனியின் பார்வை ராசியில். பதிந்த காலத்தில் ஏற்பட்ட துன்பத்துடன் ஒப்பிட்டால் எதுவும் நடக்காதது போல் இருக்கும். எனவே மனதை அலட்டாமல் நேர்மையுடன், நியாயத்துடன் செய்யக் கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். தடைகள் தகரும்.
இதுவரை இருந்த வந்த சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். நல்ல வரன்கள் தேடி வரும். வாழும் கலையை உணர்ந்த உங்களை எந்த வினையும் பாதிக்காது. அனைத்து செயலிலும் நிதானம் மற்றும் பொறுமை மிக முக்கியம்.நேர் மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.மாணவர்கள் அதிக கவனத்துடன் படிக்க வேண்டிய காலமாகும். பள்ளி கல்லூரி படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.
ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்
2026ம் ஆண்டின் துவக்கத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது பகவானும் லாப ஸ்தானத்தில் ராகு பகவானும் சஞ்சரிப்பார்கள்.
5.12.2026 முதல் சுகஸ்தானத்தில் கேது பகவானும் தொழில் ஸ்தானத்தில் ராகு பகவானும் சஞ்சரிப்பார்கள்.
ஒரு ஜாதகத்தில் பணபர ஸ்தானம் என்பது 2, 5, 8,11ம் மிடங்களாகும். தற்போது கோச்சாரத்தில் 11ம் இடத்தில்நிற்கும் ராகு பகவான் ஆண்டு முழுவதும் உங்களுக்கு தேவையான பொருளாதாரத்தை வழங்க காத்திருக்கிறார். பாதியில் அரைகுறையாக நின்ற அனைத்துப் பணிகளும் துரிதமாகும். அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.திட்டமிட்டபடி பாகப் பிரிவினைகள் சுமூகமாகும்.
தொழில் சார்ந்த வெற்றிகள் தேடி வரும். பிறவிக் கடன் மற்றும், பொருள் கடனிலிருந்து விடுபடுவீர்கள்.பெயர், புகழ், அந்தஸ்து,கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும்.
பூர்வீகத்தில் புதிய அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு.சில பிள்ளைகள் கல்விக்காக விடுதிக்கு செல்வார்கள். பெண்களுக்கு தந்தையின் பூர்வீக வீடு, பங்களா கிடைக்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். திருமண முயற்சி கைகூடும். மறுமணத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பணிச் சுமையால் மன சஞ்சலம் உண்டாகும். பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு அகலும்.
அசுவினி
மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அறிவாற்றல் மெருகேறும். வெகு விரைவில் வளமான எதிர்காலம் ஏற்படும்.
உணர்வுப் பூர்வமாக செயல்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
உங்களுக்கு எதிராக செயல் படுபவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. குடும்பத்தில் நிலவிய சிறு சிறு குழப்பங்கள் மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கடிகள் விலகும். சமூக அந்தஸ்து உயரும்.
தடைகள் தகர்ந்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வரும்.பிள்ளைகளால் பெருமை சேரும்.பணவரவு அதிகரிக்கும் பொற்காலம் என்றால் அது மிகையாது. அடமான நகைகள் மீண்டு வரும். தேவையான உதவிகள் விரும்பிய இடத்திலிருந்து கிடைக்கும். வயதானவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் சுப காரியங்களை முன்னின்று நடத்தும் கடமையும். தொழில், உத்தியோகம் அனுகூலம் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் திருமண வாய்ப்புகள் கூடிவரும்.நோய்த் தாக்கம் குறையும். வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும்.
விநாயகர் வழிபாட்டால் இன்பங்களை அதிகரிக்க முடியும். பசுவிற்கு அகத்திக்கீரை தானம் வழங்க நன்மைகள் அதிகரிக்கும்.
பரணி
நம்பிக்கை அதிகரிக்கும் வருடம்.
உங்கள் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமையும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் உங்களை வழி நடத்த போகிறது.
வீட்டில் சுப காரியப் பேச்சு வார்த்தைகள் நடக்கும். ஆடம்பரச் செலவை குறைத்து எதிர் நீச்சல் போட்டால் வெற்றி நடை போட முடியும். குடும்பத்தில் ஒற்றுமையும், அன்யோன்யமும் உண்டாகும். திடீர் எதிர்பாராத பணவரவால் தேவைகள் அனைத்தும் நிறைவு பெறும். தொழில் சீராக நடந்தாலும் லாபம் நிற்காது. அதிக முதலீடுகள் கொண்ட தொழில் நடத்துபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும்.
இதுவரை கடனை திரும்பத் தராத உறவுகள் கடனை செலுத்துவார்கள். பூமி,வீடு, வாகனம் வாங்கும் சிந்தனைகள் மேலோங்கும். தாய்வழிச் சொத்திற்காக தாய் மாமாவுடன் கருத்து வேறுபாடு, பகைமை உருவாகும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது. அமைதியாக இருப்பது அவசியம்.
அமைதியால் அனைத்து பிரச்சனைகளும் அடிப்பட்டு போகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். மாணவர்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பயிற்சியை கடைபிடிப்பது நல்லது. கருமாரியம்மனை வழிபட்டால் மன நிம்மதி கூடும்.
கிருத்திகை 1
இழுபறிகள் குறையும்.தொழிலில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். வர்த்தகம் லாபத்துடன் நடக்கும். அதிர்ஷ்டசாலியாக திகழ்வீர்கள்.
பூர்வீகச் சொத்து தொடர்பான இழுபறிகள் நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பாகப் பிரிவினை பங்கு சொத்தாகவோ, பணமாகவோ முழுமையாக வந்து சேரும். சிலர் பூர்வீகப் பங்குப் பிரிவினை பணத்தில் பழைய கடன்களை அடைத்து விட்டு புதிய வீடு, வாகனம் வாங்கலாம். சிலருக்கு மனைவி வழி சொத்தில் மாமனாருடன் நிலவிய கருத்து வேறுபாடு மாறும்.தடைபட்ட வெளிநாட்டு பயணம், வேலை வாய்ப்பு கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும்.
பெண்களுக்கு உயர்ரக ஆடம்பர ஆடை, பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரரால் சகாயங்கள் உண்டாகும். கணவன் அல்லது மனைவிக்கு உத்தியோக ரீதியான மாற்றங்கள் உண்டாகும். நம்பிய வேலையாட்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும்.
தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை கடைபிடிப்பது அவசியம். விரலுக்கேற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அகலக்கால் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். சிதம்பரம் நடராஜரை வழிபட மேன்மையான பலன்கள் நடக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






