என் மலர்

  மேஷம் - ஆண்டு பலன் - 2023

  மேஷம்

  ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

  எடுத்த காரியத்தில் முனைப்புடன் செயல்படுத்துவதில் வல்லமை படைத்த மேஷ ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டில் தொட்டது துலங்க நல்வாழ்த்துகள். இந்த ஆண்டில் கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் பனி போல் விலகும். முடங்கி கிடந்த தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி வாய்ப்பை தரும் இனிய ஆண்டாக மாறும்.

  இந்த ஆண்டு குரு மற்றும் சனியின் சஞ்சாரம் உங்களுக்கு மிகச் சாதகமாக உள்ளது. இதனால் இழந்த அனைத்து இன்பங்களும் உங்களைத் தேடி வரப்போகிறது.

  தொட்டது துளிர் விடும். பட்டது பூக்கும். ராகு/கேதுக்களின் நிலைப்பாடு சற்று சுமாராக உள்ளது. தன்னம்பிக்கையுடன் உரிய வழிபாட்டு முறைகளை கடைபிடித்தால் தெய்வத்தின் அருட்கடாட்சம் கிடைக்கும். முன்னேற்றம் முழு வளர்ச்சியுடன் அனைத்து நன்மைகளையும் அடைய முடியும். இனி இந்த ஆண்டிற்கான விரிவான பலன்களைப் பார்க்கலாம்.

  குருவின் சஞ்சார பலன்கள்:

  மேஷ ராசிக்கு 9,12ம் அதிபதியான குரு பகவான் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் ஏப்ரல் 22, 2023 வரை ஆட்சி பலத்துடன் நிற்கிறார்.

  அதன் பிறகு ராசிக்குள் அடியெடுத்து வைத்து ராகுவுடன் இணைந்து சனியின் 3ம் பார்வையைப் பெறுகிறார். பாக்கியாதிபதி குரு ராசிக்குள் நுழைவதால் தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடக்கும்.ஜென்ம ராசியில் நின்று திருமணம், குழந்தை பேறு, பேரன், பேத்தி,வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்களை நடத்தப் போகிறார். தேவையற்ற கற்பனை, பயங்கள் அகலும். மன சஞ்சல மின்றி நிம்மதியாக தூங்குவீர்கள். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். தெய்வ நம்பிக்கை, ஜாதக நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

  ஆன்ம பலம் கூடும். .அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தகப்பனார் வழியில் ஆதரவும், அனுகூலமும் உண்டாகும். சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளிநாடு வெளி மாநிலத்திற்கு இடம் பெயரலாம்.சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகளும் துயரங்களும் விலகும்.

  வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்கள் கூட அறிவும், ஆலோசனை வழங்கிய நிலை மாறும். குருவுடன் ராகு இணைவதால் அனுபவ அறிவு ,தன்னைத்தானே உணரும் சக்தியையும் அதிகரிக்க யோகாசனம் மிக அவசியம்.

  சனியின் சஞ்சார பலன்கள்:

  மேஷத்திற்கு 10, 11ம் அதிபதியான சனி பகவான் ஜனவரி 17, 2023ல் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் நுழைகிறார். ஆண்டு முழுவதும் தொழில் ஸ்தான அதிபதி சனி பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று பல்வேறு விதமான லாபங்களை வழங்கப் போகிறார்.

  இதனால் எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும். புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம் இது. இதுவரை கற்ற அனுபவ தொழில் ஞானம் தற்போது பயன்படும். வியாபாரத்திற்கு முழுக்கு போடலாம் என்ற நினைத்தவர்களுக்கு கூட இந்த வருடம் தொழில் முன்னேற்றம் உண்டு. தொழிலாளர்கள் ஆதரவாக உதவி கரம் நீட்டுவார்கள். சிலர் வேலையில் இருந்து கொண்டு ஓய்வு நேரத்தில் சிறு தொழில் மூலம் வருமானம் ஈட்டலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு, சம்பள உய்ர்வு என்று அனைத்துவிதமான நன்மைகளும் தேடி வரும். அரசு வகை ஆதாயம், அரசு உத்தியோகம் உண்டு. லாபச் சனியால் வருமானம் பெருகினாலும் ராசியில் சஞ்சாரம் செய்யும் குருவால் வரவுக்கு மீறிய சுப செலவும் இருக்கும்.கையில் பணம் தாராளமாக புழங்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி மன நிறைவு, நிம்மதி அதிகரிக்கும்.

  பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டில் வாழ்ப்பவர்களுக்கு வாழ்க்கை வசந்தமாகும். வழக்குகள் சாதகமாகும் அல்லது தள்ளுபடியாகும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். சொத்து மதிப்பு உயரும். கை நழுவிச் சென்ற பூர்வீகச் சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும். குரு உபதேசம், ஜோதிடம், மருத்துவம், யோகா, தியானம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர், வெளி மாநிலத்தில் உள்ள ஆன்மீக சுற்றுலாத் தலங்களுச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.

  ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

  ராசியில் நின்ற ராகு பகவான் அக்டோபர் 30, 2023ல் 12ம் இடம் செல்கிறார். 7ம் இடத்தில் நின்ற கேது பகவான் ஆறாமிடம் செல்கிறார். அக்டோபர் மாதம் வரை ராகு, கேதுக்களால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும்.சிலர் அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து எந்திரம், மந்திரம்,தந்திரம் என அழைந்து மிகுதியான பொருள் விரயத்தை விலை கொடுத்து வாங்குவார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். சேமிப்புகள், முதலீடுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். சிலர் செயற்கை கருத்தரிப்பு மூலம் புத்திர பாக்கியம் அடைவார்கள். கண்கள் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை.

  திருமணம்: கடந்த சில வருடங்களாக கோட்சார ராகு கேதுவினால் தடைபட்ட திருமணம் ஏப்ரல் மாதத்திற்கு மேல் திருமணம் நடைபெறும். பொருத்தமான ஜாதகம் வந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். முதல் திருமணத்தில் தோல்வியை சந்தித்தவர்களுக்கு அடுத்த இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமையும்.

  பெண்கள்: புதிய பெண் தொழில் அதிபர்கள் அதிகம் உருவாகுவார்கள். ஏற்கனவே சுய தொழிலில் இருக்கும் பெண்கள் தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். புதிய தொழில் நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் கடன் வழங்க நிதி நிறுவனங்கள் முன்வரும். பல பெண்கள் உபரி லாபத்தால் நீண்ட கால கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவார்கள்.கணவர், புகுந்த, பிறந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். தீராத நோயால் அவதிப்பட்டவர்களுக்கு நோய் கட்டுப்படும்.

  மாணவர்கள்: ராசிக்குள் குரு வந்து 5,9ம் இடத்தைப் பார்ப்பதால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். படிக்கும் பாடம் நன்கு புரியும். வேற்று மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்கு வெளியூர், வெளிநாடு செல்லலாம். பேச்சுப் போட்டி, பட்டிமன்றங்களிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

  அசுவினி: சுய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். ஒரே இடத்தில் இருக்க முடியாமல் அடிக்கடி இடப் பெயர்ச்சி செய்து கொண்டே இருப்பீர்கள். அண்டை அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும்.

  வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் மிக உயர்ந்த உன்னத நிலையை அடைய முடியும். கடன் வாங்கவும் கூடாது. கடன் கொடுக்கவும் கூடாது. முறையான திட்டமிடுதல் சங்கடங்களைத் தீர்க்கும். வீடு, வாகன யோகம் சித்திக்கும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.

  அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். கல்லூரி உயர் கல்வி மாணவர்கள் பழைய நண்பர்களைப் பார்த்து மகிழ்வீர்கள்.தொழில் ஒப்பந்தங்களை நன்றாக படித்த பின்பு கையெழுத்திடவும்.அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளிக்கும் தைரியம், மனப்பக்குவம் உண்டாகும்.

  பரிகாரம்: ஜென்ம நட்சத்திர நாளில் துர்க்கை, காளி மற்றும் ப்ரத்யங்கரா தேவி போன்ற உக்ர தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடவும்.

  பரணி: திட்டமிட்ட காரியங்களை மெல்ல மெல்ல வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வகையில் வீடு கலகலப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

  குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் மேம்படும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரத்து கூடும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் உண்டாகும்.

  பரிகாரம்: கல் உப்பு இட்ட நீரில் குளித்து வர எதிர்மறை எண்ணம் மட்டுப்படும்.

  கிருத்திகை 1: தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் நேரமிது. உங்களின் புகழ்,அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும்.பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள்.வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.

  பரிகாரம்: வெள்ளியிலான ஆபரணத்தை உடலில் அணிய எதிர்மறை சிந்தனை குறைந்து சிந்தித்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.

  புத்தாண்டிற்கு மேஷ ராசியினர் திருவண்ணாமலைசென்று வந்தால் இழந்த அனைத்து இன்பங்களும் மீண்டும் தேடி வரும். அப்படி ஒரு அருட்சக்தி இந்த மலைக்கு உள்ளதால் இந்த மலையை காந்தமலை என்றும் அழைக்கிறார்கள். ரீதியான அனைத்து தோஷங்களும் விலகி சுப பலன் நடக்கும். பெளர்ணமி அன்று மலை வலம் வந்தால் எப்பேர்ப்பட்ட கவலையும் நீங்கும்.

  மேஷம்

  ஆங்கில ஆண்டு பலன் - 2023

  தைரியம் நிறைந்த மேஷ ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் குரு மற்றும் சனியின் சஞ்சாரம் உங்களுக்குச் சாதகமாக உள்ளது. ராகு கேதுவின் சஞ்சாரம் சாதகமற்று இருப்பதால் உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும்.

  உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுத்தால் வருடத்தின் எல்லா நாட்களும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகவே இருக்கும். இந்த ஆண்டிற்கான விரிவான பலன்களை பார்க்கலாம்.

  குருவின் சஞ்சார பலன்:- ஏப்ரல் 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் மிக யோகமான காலம். உங்களின் எண்ணங்கள் , திட்டங்கள் நிறைவேறும்.பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த /எதிர்பாராத பெரும் தொகை கிடைக்கும். தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வீட்டில் சேரும்.

  வீட்டிற்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன வரவு மிகுதியால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.துன்பம் என்றால் என்னவென்றே தெரியாது. பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். துணிச்சல் அதிகரிக்கும். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடை போடுவீர்கள்.

  ஏப்ரல் 13-ல் குரு விரய ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பித்துச் சொல்லும் பலன் அல்ல. 12 -ம் இடம் விரய ஸ்தானம் என்பதால் செலவுகளும் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். வரவிற்கு மீறிய செலவு உண்டாகும். சொத்துக்கள் கை நழுவிப் போகலாம். பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம். வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம் அல்லது முதியோர் இல்லம் செல்லலாம். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். புதிய கடன் பெற்று பழைய கடனை அடைப்பீர்கள்.

  சனியின் சஞ்சார பலன்:- தொழில் ஸ்தான அதிபதி சனி 10-ல் ஆட்சிபலம் பெற்று இருக்கிறார்.தொழிலில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் சாதனை செய்யக் கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வருமான வரி கட்டக் கூடிய அளவிற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும். தன வரவு சிறக்கும்.

  பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். குடும்பம் மகிழ்சியாக இருக்கும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித் தரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள். போட்டி பொறாமைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி போடுவீர்கள்.

  26-2-2022 முதல் 6-4-2022 வரை இந்த காலகட்டத்தில் செவ்வாய் சனியுடன் இணைகிறார். ஏற்றுமதி, இறக்குமதி தொடர் பான தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் அதி கரிக்கும். உங்களின் ராசி அதிபதி செவ்வாயும் சனியும் பகை கிரகங்கள் என்பதால் சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வும் நேரும். உடலில் இடது கண், பாதங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் வேண்டும். பயணங்கள் அதிகரிக்கும். வம்பு, வழக்கு அவமானங்கள், ஆரோக்கிய குறைபாடு, எதிர்மறை சிந்தனை கள், எல்லாவற்றிலும் சாதகமற்ற சூழ்நிலை, விபத்துகள் என மன உளைச்சலே மிஞ்சும்.

  சிலருக்கு உடல் நலம் பாதிப்பால் மருத்துவமனைக்கு சென்று சில நாட்கள் தங்கி சிகிச்சை செய்ய நேரலாம். குடும்பத்தில் நிம்மதி குறையும். முறையான திட்டமின்மையால் உங்களின் செயல்பாடுகள் உங்களை பதம் பார்க்கும். வெகு நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் உங்களுக்கு மன உளைச்சல் தரும். ஒரு சிலருக்கு இன்சூரன்ஸ், பாலிசி முதிர்வு தொகை, உயில் சொத்து கிடைக்கும்.தந்தையின் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

  ராகு/கேது சஞ்சார பலன்:- ஏப்ரல் 12 வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். இக்கால கட்டத்தில் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் மாற்றிப் பேசி மன குழப்பத்துடன் வாழ்வார்கள். பணத்தாசை அதிகரிக்கும். வேற்று மொழி பேசுபவரால் குடும்பத்தில் நிம்மதி போகும். நேர்வழி, குறுக்குவழி என பல வழிகளில் பணம் பையை நிரப்பும். சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்தில் காலதாமதம் ஏற்படும்.

  நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனக்குறைவால் பிரச்சனைகளை தானே தேடிக் கொள்வார்கள். சிலரின் வாரிசுகள் குடும்பத்தை விட்டு பிரிவார்கள். திருமண வாழ்க்கையில் நெருடல், மன வேதனை, களத்திரத்துடன் பிரச்சனை இருக்கும். தவறான வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பது அல்லது வாழ்நாள் முழுவதும் மன வேதனை தரும் மறு விவாகம் ஏற்படும். எனவே மேஷ ராசியினர் பேச்சில் சிந்தனையில் கவனத்துடன் இருக்க வேண்டும். 8-ல் உள்ள கேதுவால் தனியாக அமைதியாக இருப்பதை மனம் விரும்பும். பொய்யான வதந்திகளால் பெயர் கெடும். அடிவயிறு தொடர்பான உடல் உபாதைகள் தோன்றலாம்.

  12-4-2022-ல் ராகு ராசிக்கும் கேது 7-ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் உருவாகும். 7-ம் இடத்திற்கு சனி பார்வையும் இருப்பதால் திருமண வாய்ப்புகள் தள்ளிப்போகும். கணவன், மனைவிக்கு சிறு கருத்து வேறுபாடு வந்து மறையும். பல நேரங்களில் சம்பந்திகள் சண்டையாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

  ஜனன ஜாதகரீதியான தசாபுத்தி சாதகமற்றவர்களுக்கு விவாகரத்து வரை செல்லும். பல கூட்டுக் குடும்பம் பிரியும். சில பிள்ளைகள் தவறான திருமணத்தால் குடும்பத்தை விட்டு பிரிவார்கள் . உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறுபாடுக்கு காரணமாக அமையும். தொழில் கூட்டாளிகள் இடையே முறையான ஒப்பந்தம் போட்டு தொழில் நடத்த வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும்.

  திருமணம்:- சூரிய, சந்திர, செவ்வாய் தசை நடப்பவர்களைத் தவிர பிறருக்கு கோட்சார ராகு /கேதுவால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. கோட்சார குருவின் 9ம் பார்வை ராசிக்கு ஏழாம் இடமான துலாத்திற்குப் கிடைப்பதால் தோஷ நிவர்த்தி பெற்று ஏப்ரல் 2022-க்குள் திருமணம் முடியும்.

  பெண்கள்:பிறந்த வீட்டில் இருந்து வர வேண்டிய சீதனங்கள் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். பணிபுரியும் இடத்தில் பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.மன சஞ்சலத்தால் வீட்டு விஷயத்தை பிற ஆண்களிடம் பேசி வம்பை விலை கொடுத்து வாங்கக் கூடாது. பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.

  விவசாயிகள்:-ஏப்ரல் 13--க்குப் பிறகு புதிய மாற்றங்கள் உண்டாகும்.விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். உபரியான விளைச்சல் ஏற்படும். விளை பொருட் களுக்கு சந்தையில் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலில் உள்ளவர்கள் ஏற்றம் பெறுவர். வாழ்க்கை தரம் உயரும். விளை நிலம் தொடர்பான வழக்குகள் இருந்தால் தள்ளுபடியாகும்.

  உத்தியோகஸ்தர்கள்:- வேலையின்றி இருந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு சம்பள உயர்வு என்று அனைத்து வித நன்மைகளும் தேடிவரும். அரசு உத்தியோகத்திற்கு முயற்சித்தவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். இது வரை நிரந்தர வேலை இல்லாத வர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்பவர்களுக்கு கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும்.

  முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்:- தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். இதுவரையில் யோசிக் காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவீர்கள்.உற்பத்தி தொழிலில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் ஏப்ரலுக்கு மேல் சிலர் குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்ய ஆர்வம் மிகும். கூட்டுத் தொழில் புரிபவர்கள் தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய பங்கு தாரர்களைத் தவிர்ப்பது நலம்.

  அரசியல்வாதிகள்:- 7-ம் இடத்திற்கு சனிப் பார்வை இருப்பதால் ஏப்ரல் 2022-க்கு மேல் சிலர் கட்சி மாறலாம். கட்சி கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம். ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சாதகமற்று இருப்பதால் கூட்டாளிகளால் வீண் பழி அல்லது வம்பு, வழக்கு உருவாகலாம். வாக்கில் நிதானம் தேவை. கட்சிப் பணிக்காக அதிக உழைப்பையும், பொருளையும் விரயம் செய்யும் நேரம். பெயர், புகழை தங்க வைக்க கடுமையாக பாடுபட நேரும். சந்தர்ப்பவாதியாக செயல்படாமல் மக்களுக்காக உழைத்தால் நன்மைகள் மிகும்.

  மாணவர்கள்:- மாணவ மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுடன் ஆசிரியர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். பள்ளி, கல்லூரி கலை நிகழ்சிகளில் கலந்து பரிசுகளும், பதக்கங்களும் பெறுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதுத்தெம்பையும், புத்துணர்வையும் கொடுக்கும்.

  அஸ்வினி:- வரவுக்கு மேல் செலவு ஏற்பட்டாலும் ஏதேனும் ஒருவகையில் செலவைச் சரி செய்ய தேவையான பணம் வந்து சேரும். கிருஷ்ணரை வழிபட மன நிறைவு ஏற்படும்.

  பரணி:- நண்பர்களால் சில அசவுகரியங்கள் ஏற்பட்டாலும் ஆதாயமும் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெள்ளிக்கிழமை ராகு வேளையில் பைரவரை வழிபட சிறப்பான யோகம் தானாகவே அமையும்.

  கிருத்திகை 1-ம் பாதம்:- நீண்டகாலமாக தொல்லை கொடுத்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வர சிறப்பான யோகங்கள் தானாகவே அமையும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  மேஷம்

  2022 ஆண்டு பலன் : தைரியம் நிறைந்த மேஷ ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  காலெண்டர் இயர் : 2022

  ×