என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 16 ஆகஸ்ட் 2024
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 15 ஆகஸ்ட் 2024
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் செய்த புதுமுயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 14 ஆகஸ்ட் 2024
நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதியை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாள். அலுவலகப்பணிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படலாம். எந்த செயலையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 13 ஆகஸ்ட் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்காது. உடல்நலனில் கவனம் தேவை.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்ட் 2024
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியம் இன்று துரிதமாக நடைபெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 11 ஆகஸ்ட் 2024
பாராட்டும், புகழும் கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படலாம். நண்பர்களிடம் நாசூக்காக பேசி நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 10 ஆகஸ்ட் 2024
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 9 ஆகஸ்ட் 2024
எதிர்கால முன்னேற்றம் பற்றி சிந்திக்கும் நாள். குடும்பத்தினர்களுடன் குதூகலப் பயணம் உண்டு. திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்ட் 2024
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். புனித பயணங்கள் செல்லும் முயற்சி கைகூடும். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். எதிர்பாராத தனவரவு உண்டு. உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024
ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழகிய சிலருக்காக கணிசமான தொகையை செலவிட நேரிடலாம். இடமாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் உருவாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 5 ஆகஸ்ட் 2024
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டு. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.






