என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    இந்தவார ராசிபலன்

    18.9.2023 முதல் 24.9.2023 வரை

    சீரிய எண்ணங்கள் மேலோங்கும் வாரம். ராசியை ராசி அதிபதி சனியை 5,8ம் அதிபதி புதன் பார்ப்பதால் ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனு கூலமான பலன்கள் கிடைக்கும். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பம் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் கொண்டு செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்வ தால் ஊடல் கூடலாகும். சில சட்ட ஆலோசனை பெறுவதற்கு இந்த வாரம் வக்கீலை சந்திப்பீர்கள். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். வீடு, வாகனம் போன்ற சுப செலவுகளுக்கு சகோதரியிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் கண் திருஷ்டி, போட்டி-பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். மன அமைதியையும், ஆனந்தத்தையும் அதிகரிக்க கற்பக விநாயகரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×