என் மலர்
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 4.1.2026 முதல் 10.1.2026 வரை
4.1.2026 முதல் 10.1.2026 வரை
கும்பம்
மகிழ்ச்சிகரமான வாரம். ஏழரைச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சனி உங்களின் ராசி அதிபதி என்பதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும். கூலித் தொழிலாளிகளுக்கு தொழில் நெருக்கடி விரைவில் சீராகும். லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் பணக் கஷ்டம்,கடன் பாதிப்பு இருக்காது.
சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும். கடந்த கால கடன்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் சீராகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். 8.1.2026 அன்று மாலை 6.39க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். முன் கோபத்தை குறைப்பது நல்லது. வியாழக்கிழமை குபேர லட்சுமியை மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






