என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 28.12.2025 முதல் 3.1.2026 வரை

    28.12.2025 முதல் 3.1.2026 வரை

    கும்பம்

    வைராக்கியத்தாலும், விடா முயற்சியாலும் வெற்றி வாய்ப்பு உண்டாகும் வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி குருவின் பார்வை உள்ளது. ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். சகல சவுபாக்கியங்களையும் எல்லாவிதமான வளர்ச்சியையும் பெறக்கூடிய நிலை உள்ளது.

    நினைப்பது நடக்கும். கூட்டுத் தொழில், பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. சிலருக்கு வாடகை வருமானத்தை அதிகரிக்கும் சொத்துக்கள் சேரலாம். தடைபட்ட வாடகை வருமானங்கள், சம்பள பாக்கிகள் கிடைக்கும். திருமணம், கல்வி, தொழில், உத்தியோகம், பிள்ளைப் பேறு போன்ற சுப செலவிற்காக உடன் பிறந்தவர்களுக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    பூர்வீக நிலப் பிரச்சினை தீரும். பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சினைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். ராசியில் ராகு ஏழில் கேது உள்ளதால் திருமண முயற்சியில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாக செயல் பட்டால் அதிக நன்மைய டையலாம். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதம் இருந்து நடராஜருக்கு தயிர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×