என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 21.12.2025 முதல் 27.12.2025 வரை

    21.12.2025 முதல் 27.12.2025 வரை

    கும்பம்

    விரும்பிய மாற்றம் தேடி வரும் வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு தன, லாப அதிபதி குருவின் பார்வை உள்ளது. இது கும்ப ராசியினருக்கு மிக மிக யோகமான காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம்,சொத்து மதிப்பு உயர்தல், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு என்று எல்லாவிதமான நன்மைகளையும் அடைவீர்கள்.

    உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். ஆசிரியர் பணி மற்றும் பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு மேன்மை உண்டாகும். பல வழிகளில் வருமானம் வந்து மனதை மகிழ்விக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். வேலை இன்மையால் அவதிப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும்.

    ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும். சிலருக்கு வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். தொழில், பணி அல்லது குடும்ப சூழல் காரணமாக தம்பதிகள் சிறிது காலம் பிரிந்து வாழலாம். பூர்வீகச் சொத்தில் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவிற்கு வரும். தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். காலபைரவர் வழிபாட்டால் நன்மைகளை அடைய முடியும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×