என் மலர்
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 18.1.2026 முதல் 24.1.2026 வரை
18.1.2026 முதல் 24.1.2026 வரை
கும்பம்
விரயங்களை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசிக்கு 12-ம்மிடமான விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் கவனத்தை தொழிலில் மட்டும் செலுத்தினால் தேவையற்ற சங்கடங்களிலிருந்து தப்ப முடியும். புதியதாக சொந்த தொழில் செய்யும் முயற்சியை ஒத்தி வைக்கவும்.
வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். சிலரின் கல்வி சார்ந்த விசயங்களில் ஏற்பட்ட தடை அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளின் விசாரணை தாமதமாகும். வாழ்க்கைத் துணைக்கு தாய் வழி பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். சுபச் செலவிற்காக கடன் பெற நேரலாம். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் ஏற்பட்ட மன சங்கடம் தீரும்.
நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவு ஏற்படும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி நாட்டில் சென்று பிழைக்கும் எண்ணம் தோன்றும். இடமாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என நிம்மதியைத் தேடும் மாற்றங்கள் உண்டு. தை மாத பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






