என் மலர்
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை
16.2.2025 முதல் 22.2.2025 வரை
புதிய வாய்ப்புகள் கைகூடும் வாரம். ராசியில் சூரியன், புதன், சனி சேர்க்கை. முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டலும் விரும்பிய மாற்றத்தை தரும். இதுவரை சொந்த தொழில் நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட கூட்டு தொழில் ஆர்வம் உருவாகும்.
அரசு உத்தியோகத்திற்கு நல்ல செய்தி தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கிய நிலை மாறும். புதிய சொத்துகள் வாங்கும் போது முறையான பத்திரப் பதிவுவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். புத்திர பிராப்தம் உண்டாகும். திருமணத் தடை அகலும். போட்டி பந்தயங்கள், கலந்து கொள்பவர்கள் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர் கிடைப்பார்கள் 17.2.2025 அன்று மாலை 6.02 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் உங்களைச் சுற்றி இருப்பவர்களில் உண்மையாக இருப்பவர்கள் யார்? பகடைக்காயாக பயன்படுத்துபவர் யார்? என்ற அனுபவ உண்மை புரியும். உடல் உபாதைகள், நோய் தொந்தரவு மாற்று வைத்தியத்தில் பலன் தரும். குல தெய்வ வழிபாடு நற்பலன் தரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






