என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை

    06.4.2025 முதல் 12.4.2025 வரை

    அதிர்ஷ்டகரமான வாரம்.பூர்வ புண்ணியாதிபதி புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை வளர்த்துக் கொண்டால் உழைப்பிற்கேற்ற பலனை அடைய முடியும். உறவுகளிடம் நிலவிய பகை மறையும். ஜென்மச் சனியின் தாக்கம் குறைந்ததால் வளமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கை கூடி வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

    குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு விபரீத ராஜ யோகமாக அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும். சிலர் பூமியை விற்று கடன் அடைக்கலாம்.வழக்குகள் சாதகமாகும்.பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு, மனை, தோட்டம் வாங்கலாம்.பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.தங்கம் வாங்குவீர்கள். 10.4.2025 அன்று இரவு 7.04 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தடைகள் வரலாம். போட்டி பந்தயங்களால் மன உளைச்சல் அதிகமாகும்.சிவன் கோயிலில் உலவாரப் பணிகள் செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×