என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிப்பலன்

    20.3.2023 முதல் 26.3.2023 வரை

    நினைத்த காரியங்கள் கை கூடிவரும் வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாய் 5-ம்மிடம் சென்றதால் புதிய திட்டங்கள் மூலம் தொழிலை மேம்படுத்து வீர்கள். புதிய முயற்சியில் அதிக லாபம் பார்ப்பீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும். அரசாங்க ஊழியர்கள் சிறப்பாக பணி செய்து பலன் பெறுவார்கள். அரசியலில் ஈடுபட்டோருக்கு ராஜ யோகம் தரும் காலமாகும்.

    சிலர் நீண்ட காலமாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்குவீர்கள். சிலர் வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் ஈடுபடுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கி யம் மேம்படும்.கணவன் மனைவி இருவரும் மனமொன்றி நடந்துகொள்வார்கள். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

    முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியம் வெற்றி தரும். ஜென்மச் சனியின் ஆதிக்கம் உள்ளது. மேலும் தனலாப அதிபதி குரு மூன்றாமிடம் செல்வதால் முதலீட்டா ளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். சகோதர உறவு களால் சஞ்சலங்கள் உண்டாகும். மீனாட்சியம்ம னையும் சொக்கநாதரையும் வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×