என் மலர்tooltip icon

    கும்பம் - வார பலன்கள்

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிபலன்

    6.5.2024 முதல் 12.5.2024 வரை

    தன பிராப்தம் உண்டாகும் வாரம். 3,10-ம் அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் ராகுவுடன் சஞ்சரிக்கிறார். தாராள தன வரவால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்திப்பீர்கள்.

    ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். பெண் பிள்ளைகளுக்கு காதணி விழா,பூப் புனித நீராட்டு விழா, திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வீடு, வாகனம் போன்ற சுபச் செலவு ஏற்படலாம்.சத்ருக்கள் தொல்லை அகலும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் சொத்துக்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை தவிர்க்கவும். புதிய வேலை பற்றி எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். வேண்டாத பிரச்சினைகளை யோசித்து மனக் குழப்பத்தை அதிகரிக்க கூடாது.

    தற்போது 2-ம் இடத்தில் செவ்வாய், ராகு நிற்பதால் கோட்சார செவ்வாய் , ராகு கேது தோஷத்தால் வரன் அமைவதில் தடைகள் உருவாகலாம். அமாவாசை அன்று வயதானவர்களின் தேவை அறிந்து உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்த வார ராசிபலன்

    29.04.2024 முதல் 05.05.2024 வரை

    புதிய சொத்துகள் சேரும். 2,11ம் அதிபதி குரு 4ம் இடமான சுக ஸ்தானம் செல்கிறார். எண்ணம் போல் வாழ்க்கை அமையும். உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டு. இழந்த இன்பங்களை குருபகவான் மீட்டுத் தரப் போகிறார். தொட்டது துலங்கும். சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை, ஒத்துழைப்பு ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும்.

    இதுவரை சொத்து இல்லாதவர்களுக்கு புதிய சொத்துச் சேர்க்கை உண்டாகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். சொத்துக்களின் மதிப்பு உயரும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் வைத்தியத்தில் குறையும். தன பிராப்தம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய வேகமான செயல்பாடுகளுக்கு துணையாக இருப்பர். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். விவசாயிகளுக்கு அரசு வழி ஆதாயம் உண்டு. மூத்த சகோதர சகோதரிக்கு திருமணம் நடக்கும், வேலை கிடைக்கும். தாயுடன் ஏற்பட்ட ஈகோ பிரச்சினை முடிவிற்கு வரும். வியாபாரிகளின் உழைப்பு அதிக வருமானத்தை பெற்றுத்தரும். திருமண வயதினருக்கு வரன் வரும். மறுமண முயற்சி நிறைவேறும். வெள்ளிக்கிழமை ஸ்ரீ கஜலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்தவார ராசிபலன்

    22.4.2024 முதல் 28.4.2024 வரை

    சகாயமான வாரம். இந்த வாரத்தில் ராசியை விட்டு செவ்வாய் நகர்ந்து தன ஸ்தானம் செல்கிறார். ராகு மற்றும் புதனுடன் இணைகிறார். சுக்ரன் 3ம்மிடம் சென்று குரு சூரியனுடன் இணைகிறார். புதன் வக்ர நிவர்த்தியாகிறார்.நிலையற்ற தன்மை, நெருக்கடிகள், மறைமுக எதிர்ப்புகள் விலகும்.மன சஞ்சலம் அகலும். துன்பங்களும், துயரங்களும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும்.மறைந்து கிடந்த திறமைகள் வெளி உலகத்திற்கு தெரியவரும். வீடு, வாகன தேவைக்கு உங்கள் அலுவலகத்தில் கடன் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலைக்கான உத்தரவு வரும். வாழ்க்கை துணை, நண்பர்கள், தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

    சிலருக்கு மாமியார் மூலம் அதிர்ஷ்ட பணம் அல்லது சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடை அகலும். வசதியான வாழ்க்கைத் துணை கிடைப்பார். புத்திர பிராப்தம் உண்டாகும். அதனால் டென்ஷன், கோபம் உருவாகும்.பங்கு வர்த்தகத்தில் ஆச்சரியப்படும் விதத்தில் பெரும் லாபம் கிடைக்கும். 23.4.2024 அன்று காலை 9.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற வீண் செலவுகளும் விரயங்களும் ஏற்படலாம். சித்ரா பவுர்ணமியன்று சிவ வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்தவார ராசிபலன்

    15.4.2024 முதல் 21.4.2024 வரை

    சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும் வாரம். 4,9-ம் அதிபதி சுக்ரன் உச்சம், களத்திர ஸ்தான அதிபதி சூரியன் உச்சம் என முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் கும்ப ராசிக்கு சாதகமாக உள்ளது. புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள்.இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.அரசாங்க பணிகளில் அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலையே நீடிக்கும்.

    இந்த வாரம் உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒரு எதிர்பாலின நட்பை சந்திப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. 2,8-ல் உள்ள ராகு, கேதுவால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. அதனால் திருமண முயற்சி இழுபறியாகும். தொழிலால் வம்பு, வழக்கு உருவாகலாம் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்படவும். பேச்சில் நிதானம் தேவை.

    20.4.2024 அன்று இரவு 8.50-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வெளியூர் பயணத்தை தவிர்க்கவும். ஆன்மீக வழிபாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டிய நேரம். சூரியன் மேஷத்தை கடக்கும் வரை சிவ வழிபாடு மிக அவசியம்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்தவார ராசிபலன்

    8.4.2024 முதல் 14.4.2024 வரை

    அனுகூலமான வாரம். ஜென்ம ராசியில் சனி. செவ்வாய் சேர்க்கை. 2-ல் ராகு, 8-ல் கேது இருப்ப தால் சில நல்லதும், சில கெட்டதும் சேர்ந்தே நடக்கும். மனம் அமைதியை விரும்பும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை உயரும். வதந்திகளால் ஏற்பட்ட அவமானம், சண்டை, சச்சரவுகள், மன உளைச்சல், தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் அகலும். நேரத்திற்கு சாப்பிட முடியும். கையில் பணம் தங்கும். ஏழரை சனியின் தாக்கத்தால் வேலையை விட்டு விட லாம் என்ற முடிவு எடுத்தவர்களுக்கு வேலையை விட வேண்டிய அவசியம் ஏற்படாது. வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடல் உபாதைகள் அகலும்.விவசாயிகள், ரியல் எஸ்டேட் துறையினர், கட்டுமான துறையினரின் வருமானம் அதிகரிக்கும்.

    விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலங்கள் விற்பனையாகும்.அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். சிலரின் இளைய சகோதரர் வெளிநாடு அல்லது வெளிமாநிலத்திற்கு இடம் பெயறுவார்கள். தொழில் மற்றும் உத்தியோகத்திற்காக அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும். வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். சொந்த தொழில் செய்பவர்கள் கடன் கொடுப்பது மற்றும் வாங்குவதைத் தவிர்க்கவும். மன நிம்மதியை அதிகரிக்க தில்லை காளியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்தவார ராசிபலன்

    1.4.2024 முதல் 7.4.2024 வரை

    வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படும் வாரம். ராசிக்கு 2-ம்மிடமான குடும்ப ஸ்தானத்தில் 4, 9-ம் அதிபதி சுக்ரன் 7-ம் அதிபதி சூரியனுடன் உச்சம்.திட்டமிட்டபடி பாகப் பிரிவினைகள் சுமூகமாகும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடை க்கும். சிலர் வாழ்க்கைத் துணை, நண்பர்களுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    தொழில் தொடர்பான முயற்சியில் தந்தை, மகனுக்கு ஒருமித்த கருத்து நிலவும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான கடன் உதவி தாய், தந்தையிடம் கிடைக்கும்.பிரிந்து வாழ்ந்த தாயும், தந்தையும் சேர்ந்து வாழ்வார்கள்.வீடு, வாகன யோகத்தில் ஏற்பட்ட தடை தாமதம் விலகும். சிலர் வீட்டை நவீனப்படுத்துவார்கள். பழநி முருகனை ஆத்மார்த்தமாக வழிபட சாதகமான பலன்கள் அதிகரிக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்தவார ராசிபலன்

    25.3.2024 முதல் 31.3.2024 வரை

    புண்ணிய பலன்கள் மிகும் வாரம். தன ஸ்தானத்தில் 4,9-ம் அதிபதி சுக்ரன் உச்சம் பெறு வதற்கு பெறு வதால் தாய், தந்தை மற்றும் முன்னோர்க ளின் அன்பும், ஆசீர்வாதமும் கிடைக்கும். வாக்கு சாதுர்யத் தால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். நடக்குமா என்று இருந்த காரியங்களை தன்னம்பிக்கை யோடு நடத்தி காட்டுவீர்கள். 4, 9-ம் அதிபதி சுக்ரன் ஏழாம் அதிபதி சூரியனுடன் தன ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் சிலர் நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் கூட்டுச் சேர்ந்து தொழிலை விரிவுபடுத்துவார்கள். புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத இடங்களில் இருந்து பிள்ளைகளின் திருமணத்திற்கு தேவையான பணம் கிடைக்கும்.

    நிலம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் இப்போது நல்ல முன்னேற்றம் தரும். மாணவர்களுக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. தள்ளிப் போன திருமணம் காரியங்கள் கூடி வரும். ஆரோக்கியம் சீராகும். தந்தையின் வாரிசு வேலைக்கு விண்ணப்பித்த வர்களுக்கு சாதகமான பலன் வரும். 27.3.2024 அன்று காலை 2.56 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் சந்தேக உணர்வு களை குறைத்துக் கொள்ளவும். சில பணி களை திட்டமிட்டு மேற்கொள்வதால் நன்மை உண்டாகும். சந்திராஷ்டம நாளில் கற்பக விநாயகரை வழிபட இன்னல்கள் விலகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்தவார ராசிபலன்

    18.3.2024 முதல் 24.3.2024 வரை

    நிறைவான வாரம். ராசியில் செவ்வாய், சனி, சுக்ரன் சேர்க்கை இருப்பதால் மன நிறைவான சம்பவங்கள் நடக்கும். திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம் லாபம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருந்தாலும், பணியில் தேவையற்ற அலைச்சல்களால் விரயங்கள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்து தொடர்பாக சித்தப்பா, உடன் பிறந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். அஷ்டம அதிபதிபதி புதன் நீசம் பெறுவதால் வழக்குகள் சாதகமாகும் அல்லது விசாரணைத் தள்ளிப்போகும்.

    சுக்ரன் ராசியில் இருப்பதால் காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும். நண்பர்களிடம் நிதானம் வேண்டும். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். 24.3.2024 அன்று மதியம் 2.20-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். முக்கிய பணிகளை தொடங்கும் முன்பு விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்தவார ராசிபலன்

    11.3.2024 முதல் 17.3.2024 வரை

    உற்சாகமான வாரம். ராசியில் சனி,சுக்ரன் மற்றும் செவ்வாய். இந்த கிரக சேர்ககை கும்பத்திற்கு சாதகமான கிரக அமைப்பாகும்.மனக்குழப்பம் நீங்கும். ஆற்றலும் திறமையும் வெளிப்படும். பணப் பிரச்சினை அகலும். தாய், தந்தையுடன் ஏற்பட்ட மனக் கசப்பு அகலும். மனைவி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த வாரம் தீர்வு கிடைக்கும்.இளைய சகோதர, சகோதரிகளுடன் ஏற்பட்ட பிணக்கு மறையும். சில பெண்களின் கணவர் தொழில், நிமித்தமாக குறுகிய காலம் வெளியூர் சென்று வருவார்.

    அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். ஆடம்பர பொருட்க ளின் சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். தொழிலால் ஏற்பட்ட வராக் கடன்கள் வசூலாகும். கண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சுய வைத்தியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது. தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். புதிய முயற்சி யில் வெற்றியும், லாபத்தையும் பெற அவ்வப்போது பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வர கர்ம வினைத் தாக்கம் குறைந்து தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்தவார ராசிபலன்

    4.3.2024 முதல் 10.3.2024 வரை

    மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசியில் சூரியன்,புதன், சனி சேர்க்கை. எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். காரியத் தடைகள் விலகும். சிலர் விலை உயர்ந்த புதிய செல்போன் வாங்குவீர்கள். கவுரவம் பெருமைக்காக வீண் செலவு செய்வீர்கள். பங்கு வர்த்தகத்தில் நிதானிக்க முடியாத ஏற்ற இறக்கம் நிலவும். வாழ்வாதாரத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் எண்ணம் மேலோங்கும். அரசு அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரிப்பதுடன் விரும்பத்தகாத இடமாற்றமும் உண்டாகும்.

    முக்கியமான ஆவணங்களை கவனமாக பாதுகாக்கவும். பெண்களுக்கு புகுந்த வீட்டில் நல்ல பெயர் கிடைக்கும். தாய், தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சீராக இருக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி தேடி வரும். சிலருக்கு பூமி யோகம் உண்டாகும். கடன், எதிரி தொல்லை குறையும். உடன் பிறந்தவர்களால் மனம் மகிழும் சம்பவம் நடக்கும். சிவராத்திரியன்று கரும்புச்சாறு அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்தவார ராசிபலன்

    26.2.2024 முதல் 3.3.2024 வரை

    மனநிறைவும், நிம்மதியும் அதிகரிக்கும் வாரம். ராசியில் சூரியன், புதன், சனி. இது கும்பத்திற்கு சுபத்தை மிகைப்படுத்தும் கிரகச் சேர்க்கை. எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும்.அசாத்திய துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்வீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டு இலகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள்.கூட்டாளிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். சில காரியங்கள் ஆரம்பிக்கும் போது தோல்வி தருவது போல் இருந்தாலும் முடிவில் வெற்றியைக் கொடுக்கும். தொட்டது துலங்கும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும். பணம் எனும் தனம் சமூக அங்கீகாரத்தை பெற்றுத் தரும். ராஜ மரியாதை கிடைக்கும்.

    கூட்டாளிகள் பக்குவமாக நடந்து லாபத்தை அதிகரிப்பார்கள். வெளியூர், வெளிநாட்டு வேலை அல்லது குடியுரிமை பெற்று செட்டிலாவது போன்ற பலன்களை எதிர்பார்க்கலாம். கடன்காரர்களின் கெடுபிடி குறையும். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. 28.2.2024 அன்று காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குல தெய்வத்தை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம் - Kumbam

    இந்தவார ராசிபலன்

    19.2.2024 முதல் 25.2.2024 வரை

    மனக்கவலைகள் குறையும் வாரம். ராசிக்கு சூரியன் புதன், சனி சம்பந்தம். புத ஆதித்ய யோகம் இருப்பதால் உங்கள் முயற்சியில் தளர்ச்சி இல்லாத வளர்ச்சி உண்டாகும். உத்தியோகம், தொழிலில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வந்து மனதை மகிழ்விக்கும். வாழ்வியல் மாற்றம் தரும் நல்ல இடப் பெயர்ச்சி நடக்கும். ஞாபகசக்தி கூடும். உயில் எழுதுதல், உயிலில் மாற்றம் செய்தல், கடனை புதுப்பித்தல் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதாயம், ஆதரவு கிடைக்கும். செவ்வாய் குரு சம்பந்தம் குரு மங்கள யோகம் ஸ்திர சொத்துக்கள் சேரும்.

    நிலம், பூமி, வாங்குவதில் இருந்த தடைகள் அகலும். பூர்வீக சொத்து தொடர்பான முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்குப் பிறகு சாதகமாகும். தாத்தா பாட்டியை சந்தித்து நல்லாசி பெறுவீர்கள். வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். மாசி மகத்தன்று பன்னீர் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×