search icon
என் மலர்tooltip icon

  கும்பம் - சோபகிருது வருட பலன்

  கும்பம்

  சோபகிருது வருட பலன் 2023

  பொறுப்புடன் செயல்பட வேண்டும்.!

  கும்பத்தைப்போல் குணத்தில் உயர்ந்த கும்பராசியினரின் கனவுகள் நனவாக தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பிறக்கப்போகும் சோபகிருது வருட தமிழ் புத்தாண்டில் ஆண்டின் தொடக்கத்தில் வருட கிரகமான குருபகவான் திருக்கணிதபஞ்சாங்கப்படி ஏப்ரல் 22 முதல் மூன்றாமிடமான முயற்சி, சகாய ஸ்தானம் நோக்கி செல்கிறார்.

  ஜனவரி 17ல் நடந்த சனிப் பெயர்ச்சியின் படி சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். கும்ப ராசிக்கு ஜென்மச் சனியின் ஆதிக்கம் உள்ளது. தற்போது 3,9ல் சஞ்சரிக்கும் ராகு,கேதுக்கள் அக்டோபர் 30க்குப் பிறகு 2,8ம்மிடம் செல்கிறார்கள். வேலை, தொழில் மாற்றம்இடமாற்றம் கவலையைத்தரும். சுய தொழில் முதலீடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்றாலும் போதிய வருமானம் இருக்காது. கடன் தொல்லையால் மனம் கலங்க நேரும். வரவை விட செலவு பல மடங்காக அதிகரிக்கும். மனம் எதிலும் லயிக்காது.

  புதிய போட்டியாளர்களும் விரோதிகளும் உருவாகுவார்கள். பணவரவில் தடையுண்டாகும். இக்காலத்தில் அனைவரிடமும் எச்சரிக்கையுடன் பழகினால் மட்டுமே சங்கடங்களிலிருந்து தப்ப முடியும். ந்த விசயத்தையும் அவசரப்பட்டுச் செய்யாமல் அனுபவஸ்தரின் ஆலோசனை கேட்டு செய்ய வேண்டிய நேரம்.இல்லத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சு நடைபெறும்.வழக்கு விவகாரங்களில் இழுபறியான சூழல் உண்டாகும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்வு நடத்தி ஆனந்தமடைவீர்கள்.

  குடும்பம், பொருளாதாரம் : ஜென்மச் சனியின் காலம் என்றாலும் உழைப்பவர்களுக்கு சனி பகவான் உறுதுணையாக இருப்பார்என்பதால் கலங்க வேண்டாம். சோதனை காலத்தைசாதனை காலமாக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது.

  நாளைய வருமானத்திற்குரிய தொகை இன்றே செலவாகிவிடும். உறவுகள் உங்களை விட்டு விலகும்.மனிதனின் சட்டைப் பையில் பணம் இல்லை என்றால் முதலில் விலகுவது உறவுகளே .யார் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள் என்று நினைத்தீர்களோ அவர்கள் பாதகத்தை தருவார்கள். அவசரமான சூழ்நிலையிலும் உடனிருந்து உதவும் உறவுகளை குருவும் சனியும் அடையாளம் காண்பிக்கப் போகிறார்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வழக்கு பாதகமாகும். சிலர்பூர்வீகத்தை விட்டு வெகு தூரம் சென்று குடியேறலாம். அலைச்சல் மற்றும் விரையம் மிகுதியாக இருக்கும்.

  பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இழப்புகள் எந்த நேரத்தில் எப்படி வரும் என்று யூகம் செய்ய முடியாது.தூக்கமின்மை மிகுதியாக இருக்கும். கண்கள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். சிலருக்கு கண்ணாடி அணிய நேரும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை இருக்கும்.

  பெண்கள் : குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அடிக்கடி மங்களகரமான விசேசங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும்.பிறந்த வீட்டாரும்,புகுந்த வீட்டாரும் ஒன்றாக கலகலப்பாக பழகுவார்கள். மாமியர், மருமகள் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். ஜென்ம சனியினால் ஏற்படும் மன சஞ்சலத்தைக் குறைக்க தினமும் ஸ்ரீராம ஜெயம் எழுதவும்.

  அவிட்டம் 3, 4 : ஆன்மீக வழிபாட்டின் மூலம் மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும் காலம். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் கொண்டு செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்வதால் ஊடல் கூடலாகும். வீடு, வாகனம் போன்ற சுப செலவுகளுக்கு சகோதரியிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும்.பணியில் தேவையற்ற அலைச்சல்களால் விரயங்கள் ஏற்படலாம். நாளும் சுப பலன்களை அதிகரிக்க தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

  சதயம் : சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும் காலம். புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் கண் திருஷ்டி, போட்டி-பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். கடன் பிரச்சினைகளால் மனவருத்தங்கள் ஏற்படும். சில முக்கிய சம்பவங்கள் பாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் முடிவில் நன்மையாகவே இருக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். உடல் அசதி, அசவுகரியம் மற்றும் பொருள் விரயத்திலிருந்து விடுபட தினமும் துர்க்கையின் துக்க நிவாரண அஷ்டகம் கேட்கவும்.

  பூரட்டாதி 1,2,3 : எதிரிகள் தொல்லை நீங்கி நம்பிக்கையும், பலமும், தைரியமும் அதிகரிக்கும் காலம். பல்வேறு காரணங்களால் அவமானத்துடன் வாழ்ந்த நிலையில் மாற்றம் உண்டாகும்.தொழில், வேலைக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்த நிலை மாறி ஒரே இடத்திலிருந்து பணிபுரியும் நிலை உண்டாகும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் ஒப்பந்தத்தில் கவனம் தேவை.எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும்.உடன் பிறந்த இளைய சகோதரர்களிடம் வீண்விவாதங்களை தவிர்க்கவும். உங்களை வாட்டிய கடன் பிரச்சினை மற்றும் வாழ்க்கைத் துணையின் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். வளர்ப்பு பிராணிகளிடம் கவனத்துடன் செயல்படவும். உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

  பரிகாரம் : கும்பராசியினர் பூலோக கைலாயம் என போற்றப்படும் மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயில் சென்று வர ஜென்மச் சனியின் பாதிப்பு குறையும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  கும்பம்

  சுபகிருது வருட பலன் - 2023

  உறவுகளுக்காகவே வாழும் கும்ப ராசியினர் இந்த தமிழ் புத்தாண்டில் அடுக்கடுக்கான முன்னேற்றங்களைப் பெற நல் வாழ்த்துக்கள்.

  உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும் 9ல் கேதுவும் உள்ளார்கள். குருபகவான் தன ஸ்தானத்திலும், சனி பகவான் 12 மற்றும் ராசியில் சஞ்சரிக்கிறார். தன குருவால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. குடும்ப தேவைகளுக்கு மேல் உபரி வருமானம் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறமையால் உறவுகளை பாசப் பிணைப்பில் கட்டுவீர்கள்.சொல் வலிமை, வாக்குபலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனைக்குஉற்றார் உறவினர்கள் செவி சாய்ப்பார்கள்.

  வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை குருவைச் சாரும். எந்த செயலிலும்விரைந்து செயல்பட்டு தெளிவாக முடிவு எடுப்பீர்கள். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் காலம். தைரியம், தெம்பு , ஞாபக சக்திஅதிகரிக்கும். இது வரை அனுபவித்து வந்த சங்கடங்கள் தீரும். நன்மைகள் அதிக அளவில் நடக்கும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பிரயாணங்கள் செய்ய நேரும். முறையற்றஆவணங்களால் வம்பு , வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் சொத்தை சகோதர, சகோதரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார். சிலருக்கு சொத்து தொடர்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். ஆடை ,ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.சிலர் நடக்காததை நடப்பது போல் கற்பனை செய்வார்கள். சிலருக்கு செவித்திறன் குறைபாடு வரலாம். கும்பராசியினருக்கு குருவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளதால் ஏழரைச் சனி மற்றும் ராகு/கேதுவின் தாக்கம் உங்களை பாதிக்காது.

  குடும்பம்:குடும்ப ஸ்தானாதிபதி குரு குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால்சிலர் தீய நண்பர்களின் சேர்க்கையிலிருந்து விடுபடலாம்.குடும்ப தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் பெருகும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். சிலரின் வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். சம்பந்திகள் சண்டை முடிவுக்கு வரும். விருந்து உபசாரம் மற்றும் சுப நிகழ்வுகளால் வீடு கலகலப்பாக மாறும். தவறான புரிதலால் விலகிச் சென்ற உறவுகள் உண்மை நிலை புரிந்து மீண்டும் உறவாடுவார்கள்.மகன், மகளின் திருமணம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

  ஆரோக்கியம்: ஏழரைச் சனியின் காலம் என்பதால் கை, கால், மூட்டு வலி இருக்கும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு வைத்தியம் நல்ல பலன் தரும். குருவின் பார்வை 6, 8ம் இடத்தில் பதிவதால் மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும்குடிபுகும். ஆரோக்கியம் சிறப்படையும். ஆயுள் பலம் உண்டு. மருத்துவச் செலவு குறையும்.

  திருமணம்:2022ல் திருமணம் எந்த தடையும் இன்றி எளிமையாக நடந்து முடியும். வரன் பற்றிய மிகைப்படுத்தலான எதிர்பார்ப்பு இன்றி திருமண முயற்சி செய்வது நல்லது. நேரம், காலம் சாதகமாக இருக்கும் பொழுது சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் 2023ல் சனி கும்பத்திற்கு பெயர்ச்சியாகும் போது ஜென்மச் சனியால் திருமணத் தடை உருவாகலாம். அதிக கவனத்துடன் வரனைதேர்வு செய்ய வேண்டும். தவறானசுய விருப்ப விவாகம் தோல்வியை ஏற்படுத்தலாம்.

  பெண்கள்:திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையும் அன்னியோன்யமாக இருப்பீர்கள்.மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . வீடு ,வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.தாய் வழி உறவினர்களின்அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்தசகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வந்து சேரும்.

  மாணவர்கள்:பள்ளி, கல்லுரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ,மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். 9ம் இடத்தில் நிற்கும் கேது உங்களுக்குபுத்தி கூர்மை , தெய்வ அனுகிரகம், ஞானம்போன்றவற்றை வாரி வழங்க போகிறார். ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அரசுத் துறை சார்ந்த கல்வி வாய்ப்பும் கிடைக்கும்.

  உத்தியோகஸ்தர்கள்:தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும்.அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையேநல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். அரசு அதிகாரிகள்இடமாற்றம் செய்யப்படுவீர்கள்.

  முதலீட்டாளர்கள்:ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு இது பொற்காலம்.நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும். புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள்.

  அரசியல்வாதிகள்:பல அரசியல் பிரமுகர்களுக்கு வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையை தரும். முக்கிய கட்சியில்இணையும் வாய்ப்பு கிட்டலாம்.பெரிய பதவிகள்கிடைக்க கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது.

  கலைஞர்கள்:தடைகள் விலகும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். உங்கள் கனவுகளை நிறைவேற்றும் புதுப்பட வாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் வந்து குவியும்.

  விவசாயிகள்:விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான நேரம். பழைய விவசாய கடன் அல்லது வட்டி தள்ளுபடியாகும்.விளை நிலங்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும்.விவசாயிகள் புதிய தொழில் முறையில் போதிய அனுபவம் இல்லாத தொழில் முறையைபற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்தவும்.

  ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 3ல் ராகுவும் 9ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு வாழ்வாதாரத்திற்கு இடம் பெயரலாம். ஞாபக சக்தி குறையும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகாது என்பதால் வழக்குகளை ஒத்திப் போட வேண்டும். சிலர் சட்டச் சிக்கல் நிறைந்த சொத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். சிலர் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படலாம். அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சனை ஏற்படலாம். உயர் கல்வி முயற்சி சிறு தடைக்குப் பின் சீராகும்.

  குரு: 29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தை வழி உறவினர்களால் முன்னோர்களின் சொத்தை பிரிப்பதில் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  பரிகாரம்:வியாழக்கிழமை சித்தர்கள் வழிபாடு செய்து வர முத்தாய்பான மாற்றங்கள் தேடி வரும்.

  ஐஸ்வரியம் கிடைக்கும்

  தன குருவால் சிலரின் பேச்சுத் திறமை வருமானத்தை அதிகரிக்கும். பற்றாக்குறை வருமானம் பிள்ளைகளின் பங்களிப்பால் உபரி வருமானமாகும். வீட்டில் மகாலஷ்மி வாசம் செய்வாள். குடும்பத்திற்கு நிலையான நிரந்தமான வருமானம் கிடைக்கும். இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும்.தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். அடமானத்தில் இருந்தநகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள். கடன் தொல்லை குறையும். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×