என் மலர்tooltip icon

    கும்பம் - Kumbam

    2026 மாசி மாத ராசிபலன்

    அன்பிற்கு அடிபணியும் கும்ப ராசியினரே!

    தன் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். ஜென்ம ராகுவின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் பெரும் பாதிப்பு ஏற்படாது. விரும்பிய பதவி உயர்வு தேடி வரும். பணிச் சுமை கூடும்.புதிய வேலையாட்கள் அமைவார்கள். நிரந்தர வேலை கிடைக்கும். காணாமல் போன கை மறதியாக வைத்த ஆவணங்கள் கிடைக்கும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறுபாடுக்கு காரணமாக அமையும் என்பதால் கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை.சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். ஏழரைச் சனி யாருக்கும் திருமணத் தடையை தராது. அதனால் பெரும்பான்மையாக திருமணம் நடந்து இருக்கும்.

    தற்போது ராசியில் ராகுவும் சம சப்தம ஸ்தானத்திற்கு கேதுவும் நிற்பது கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துகிறது. சுய ஜாதக .ரீதியாக ராகு/கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்த பிறகு திருமணம் நடத்த வேண்டும். ஆனாலும் ராகுவை குரு பார்ப்பதால் விருப்ப விவாகங்கள் அதிகம் நடக்கும்.சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பீர்கள்.

    பொருளாதார பற்றாகுறை அகலும். தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். தடை, தாமதம், இன்னல்களை நீக்கி அற்புதமான பலன்களை அள்ளித்தரும்.விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்கும்.புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும்.உங்களின் முயற்சிக்கு மனைவியும், பிள்ளைகளும் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்விற்கான அறிகுறி தென்படும்.புகழ், அந்தஸ்து கவுரவம் நம்பிக்கை,நாணயம் உயரும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் நிலவிய சர்ச்சைகள் விலகும்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்வீர்கள். குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.கடன் சுமை குறையும்.

    பொருளாதாரம்

    அனுபவ ஆற்றல் அதிகமாகும். பேச்சை மூல தடமாக கொண்டவர்கள், பேங்கிங் ஆடிட்டிங் டீச்சிங் புரோகிதம்,ஜோதிடம் மந்திர உபதேசம் ஆகியவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். செலவு குறையும். சேமிப்பு கூடும்.வருமானம் பலவித வழிகளில் வந்து கொண்டே இருக்கும்.வெளிநாட்டு பணம் தாராளமாக புழங்கும். சேமிப்பு அதிகரிக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மற்றும் அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை லாபம் சொத்துச் சேர்க்கை,பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். புதிய நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற சுப பலன்கள் நடக்கும்.வாகன வசதியை மேம்படுத்துவீர்கள். மறுமணம் நடைபெறும்.

    முதலீட்டாளர்கள்

    இந்த மாசி மாதம் மங்கலத்தையும் புது மாற்றத்தை யும் வழங்கவுள்ளது. வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும்.மந்தமான தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள்.

    ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம் உயரும். தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும். தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும்.

    உத்தியோகஸ்தர்கள்:

    உங்களின் முயற்சிகள் உடனே பலிதமாகும்.மனதில் தைரியம் குடிபுகும்.இடமாற்றம் ,தொழில் மாற்றம், வேலை மாற்றம், வெளிநாடு வாய்ப்பு என்று நீங்கள் எதிர்பார்த்து காத்து இருந்த மாற்றம் உங்களை தேடி வரும். அரசு உத்தியோகத்திற்கு பணி நியமன ஆணை கிடைக்கும். சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும்.வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். சிலர் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். இதுவரை அரசுவழி ஆதாயம், உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும்.

    அரசியல்வாதிகள்

    அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். அரசின் ஒப்பந்தம் கிடைக்கும். கட்சி மேலிடத்தின் ஆதரவு அதிகமாகும். தொகுதி மக்களின் தேவையை நிறைவேற்றுவதை லட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும். செல்வாக்கை பயன்படுத்தி குறுக்கு வழியில் உங்களை எண்ணங்களை, லட்சியங்களை அடையக்கூடாது.பொதுக் கூட்டத்தில் நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுக்கக் கூடாது. உங்கள் மேல் தொடரப்பட்ட வழக்குகளுக்காக அபராதம் கட்ட நேரும்.பினாமி பெயரில் வாங்கக் கூடிய சொத்துக்கள் பிற்காலத்தில் பயன்படாது என்பதால் சிந்தித்து செயல்பட வேண்டும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும்.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.தம்பதிகளிடம் சுமூக உறவு நிலவும்.

    சூரிய கிரகணம்

    மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. கும்ப ராசியினருக்கு ராசியில் சூரியகிரகணம் நடக்கிறது. இன்றைய நாளில் செயற்கை முறை கருத்தரிப்பு, தூர தேசப் பிரயாணங்களை ஒத்தி வைக்க வேண்டும். கடுமையான பித்ரு தோஷம் உள்ளவர்கள் பித்ரு தர்ப்பணங்கள் செய்யலாம்.தந்தை, தந்தை வழி முன்னோர்களை வழிபடுவதால் வாழ்க்கை ஒளிமயமாகும்.

    சிலர் மன வெறுப்பில் பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவில் சென்று குடியேற திட்டமிடுவார்கள்.பூர்வீகச் சொத்தை அடைவதில் தடை தாமதம் ஏற்படும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் எழும்.வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் பஞ்சாயத்துக்கள் வரலாம். ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும்.

    சந்திர கிரகணம்

    மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், திருமணம், திருமண ஒப்பந்தம், விவாகரத்து வழக்குகளை விசாரித்தல், வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள்.

    இவைகளை சில நாட்களுக்கு தவிர்க்கவும்.மறைமுக எதிரிகளால் தொல்லைகள் வரலாம்.வாழ்க்கை துணை, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களை பகைக்க கூடாது.சிற்றின்பம், நண்பர்கள் சுற்றம் சூலத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வது அன்றைய நாட்களுக்கு தகாத செயலாகும். சிலருக்கு தொழிலில் சகோதரருடன் பிரிவினை ஏற்படும். சிலருக்கு இளைய சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். பாகப்பிரிவினை நடக்கலாம். நலிந்தவர்களின் வாழ்வாதாரம் உயரத் தேவையான உதவிகளை செய்வது நல்லது.

    பரிகாரம்

    மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். தடைகள் விலகி காரியசித்தி உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×