என் மலர்

  கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

  கும்பம்

  குருப்பெயர்ச்சி பலன்கள் - 2022

  இரக்க குணம் மிகுந்த கும்ப ராசியினரே ராசிக்கு 2ல் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 12, 1 ம் இடத்திலும், ராகு பகவான் 3ம் இடத்திலும், கேது பகவான் 10ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதுவரை ராசியில் சஞ்சரித்த குருபகவான் 2ம்மிடமான தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கும்ப ராசிக்கு குரு தன லாபாதிபதி. தனாதிபதி குரு தன ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் கும்ப ராசியினருக்கு இந்த குருப் பெயர்ச்சியால் ஏற்றமிகு பலன்கள் ஏற்படப்போகிறது. தன ஸ்தானத்திற்கு ராசி அதிபதி சனியின் 3ம் பார்வையும் 17.1.2023 வரை இருப்பதால் சுப பலன் இரட்டிப்பாகும்.

  2மிடம் என்பது தனம் வாக்கு குடும்ப ஸ்தானம். வாக்கு ஸ்தானம், குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. ஜென்ம குருவால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் வேதனைகளும், துயரங்களும் விலகும். பேச்சில் தைரியம், தன் நம்பிக்கை உண்டாகும். அமைதியாக பேசுபவர்கள் கூட அதிகார தோரணையான பேச்சில் அனைவரையும் கட்டிப் போடுவார்கள். சிலர் பேசியே பிறரை வதைப்பார்கள். சிலர் பேச்சுத் திறமையால் வருமானத்தை அதிகரிக்கப்பார்கள். ஒருவர் சம்பாத்தியத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகளின் வருமானத்தால் நிமிர்ந்து நிற்கும். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும்.

  குடும்பத்திற்கு நிலையான நிரந்தரமான வருமானத் திற்கான வழி தென்படும். இதுவரை வீட்டு வேலையில் காலத்தை கழித்த பெண்கள் கைத் தொழில் கற்று வருமானம் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவார்கள். கடன் சுமை குறையத் துவங்கும்.வீடு முழுவதும் பண வாசனை நிரம்பும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். பணத்தைப் பார்த்தசில போலியான உறவுகள் உண்மையானவர்கள் போல் நடிப்பார்கள்.

  சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும்.குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும்.சொல் வலிமை, வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனை கேட்க ஒரு கூட்டம் உருவாகும். ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள். சிலருக்கு பேரன் பேத்தி பிறப்பார்கள்.

  5ம் பார்வை பலன்கள்: குருவின் 5ம் பார்வை 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் பதிகிறது. குருவின் 5ம் பார்வை ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய6ம் இடத்திற்கு இருப்பதால் உடல் ஆரோக்யம் சீராகும். எந்த முறை வைத்தியம் செய்து நோய் நிவாரணம் பெறலாம் என்று திணறியவர்களுக்கு நோயின் தன்மை புலப்படும். நோயின் தன்மைக்கு தகுந்த வைத்தியம் கிடைக்கும். ஆச்சரியப்பபடத்தகுந்த வகையில் நோயிலிருந்து விடுதலை பெறுவீர்கள். வலது காதில்சிறு குறைபாடு தோன்றும். செய்வினை, கண் திருஷ்டி அகலும். கடன் தொல்லைகள் முற்றிலும் அகலும். வராக்கடன்கள் வசூலாகும். கொடுக்க வேண்டியபணத்தை திரும்ப கொடுத்து விடுவீர்கள். பணம் எல்லாநேரத்திலும் எல்லோருக்கும்வந்து விடாது. கடன் இல்லா வாழ்க்கை பெரும் பாக்கியம். குருவருளால் உங்களுக்கு சாத்தியமாகும் . கடனை வளரவிடாமல் பார்த்து கொள்ளவது வளமான எதிர்காலத்தை கொடுக்கும்.

  பொருளாதார உயர்வு எற்படும். பொருளாதார வரவைதிட்டமிட்டு செயல்படுத்த குருபகவான் பக்கபலமாக இருப்பார். அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் சுமூகமான நல் இணக்கம் ஏற்படும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை ஏற்படும். எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் செயல்கள் உங்களுக்கு சாதகமாகும்.3ல்ராகு நிற்பதால் சகோதரர்களிடம் அவ்வப்போதுகருத்து வேறுபாடு தோன்றி மறையும்.சகோதரர்களுக்குகாக அதிக செலவு செய்ய நேரும். எதற்கும்கலங்காமல் மன உறுதியுடன் செயலாற்றுவீர்கள். இது வரை வாடகை வீட்டில் குடியிருந்த சிலர் கடன் பெற்று சொந்த வீடு கட்டி குடிபுகும்ஆர்வம் உண்டாகும். உங்கள் எண்ணம் போல் வீடு, வாகன யோகம் அமையும். சிலர் வீடு, வாகனங்களை விற்று கடன் அடைக்கலாம்.

  6, 8 ம்மிடத்திற்கான குரு பார்வைபிரச்சனையை மூடி மறைக்கும். வட்டிக்கு வட்டி கட்டி சமாளிக்க முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்குகடன் தொகை தள்ளுபடியாகும் . விவசாயிகள் கடன் பிரச்சனையிலிருந்தும் மீண்டு வருவார்கள். 6ம் இடம் குருவின் கட்டுப்பாட்டில் இருப்பதால்கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் போட்டி போடும்.குரு பார்வை இல்லாத போது கடனே கழுத்தை நெரிக்கும் என்பதால் தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

  7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 8ம்மிடமான ஆயுள் ஸ்தானத்தில் பதிவதால் ஆயுள் பலம் ஏற்படும். நீண்ட நாள் வைத்தியம் செய்யக் கூடிய பரம்பரை வியாதியின் தாக்கம் வெகுவாக குறையும்.நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தால் இப்பொழுது ஆரோக்கியம் ஏற்படும். கடுமையான உயிருக்கு ஆபத்தான நோயில் போராடுபவர்களுக்கு சிறிய நிவாரணம் ஏற்படும். சிலருக்கு கண், பல், முகம் தொடர்பான அறுவை சிகிச்சை செய்ய நேரும். வழக்கு வெற்றிகள்தள்ளிப்போகும். அல்லது இடைக்கால நிவாரணம் கிடைக்கும். யோகா மெடிடேசன், பிராணயாமம் கை கொடுக்கும்.இயற்கை வைத்தியம் நல்ல பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

  சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனையாக உருவாகும். முன்னோர்களின் மரபு வழி நோய் தாக்கம் உருவாகலாம். புதிய கடன் உருவாக வாய்ப்புகள் அதிகம்.மன வேதனை மற்றும் அவமானப்படுத்திய வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். உங்களுக்குசாதகமான தீர்ப்பு கிடைக்கும்.கணவனுக்கோ , மனைவிக்கோதிடீர் அதிர்ஷ்டம், பெரும் பணம்போன்றவை லாட்டரி, பங்குச் சந்தை, உயில் மூலம்கிடைக்கலாம்.

  9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பதிவதால். அபாரமான வளர்ச்சி ஏற்படும். அரசு, அரசியல், நிர்வாகம் சார்ந்த செயல்கள் சாதகமாகும். அரசு சார்பாக செய்யும் செயல்களுக்கு வாய்ப்பு தேடி வரும்.தொழிலில் புதிய கிளைகளை துவக்கி நல்ல லாபங்கள் பார்க்கலாம். மறைமுக எதிரிகளால் தொழில் முடக்கம் இடையூறுகள் ஏற்படும். சம்பளத்திற்கு சென்றவர்கள் கூட புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

  சின்னத்திரை, பெரிய திரை கலைஞர்களுக்குபுதிய வாய்ப்புகூடி வரும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் உள்ளவர்களுக்கு தனி முத்திரை பதிக்க ஏற்ற நேரமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உயர் அதிகாரிகளால் வேலையில் இருந்து வந்தபிரச்சனைகள் தீரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்குவெளிநாட்டு வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மத்திய அரசு வேலை கூட கிடைக்கும்.

  குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் குலப் பெருமையை காப்பாற்ற போராட நேரும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்தபிரச்சனைகள் இழுபறியாக இருக்கும். தந்தை வழி உறவினர்களிடம் சிறு சிறு மனத்தாங்கல் இருக்கும். உரிமைக்காவும், நியாத்திற்காகவும் போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.ஆலயத் திருப்பணி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பொதுக் காரியங்களுக்காக அதிக நேரம் செலவு செய்வீர்கள். சமூக அந்தஸ்து மிகச் சிறப்பாக இருக்கும். நன்மதிப்பும் பாராட்டும் கிடைக்கும்.

  தந்தையின் ஆரோக்யம் சீராகும். நிம்மதியான உறக்கம் இருக்காது. பேச்சில் தெளிவின்மை இருக்கும். குடும்பவாழ்வில் ஆர்வம் இருக்காது. குடும்பத்தில் சுகமும் துக்கமும் மாறி மாறி இருந்து கொண்டே இருக்கும்.கடுமையான வாக்கு பிரயோகம், கூசாமல் பொய் பேசுதல் ஆகியவைகளால் குடும்பத்தில்தேவையில்லாத பிரிவினையை உண்டாகும். சிலருக்கு உண்மையே பேச முடியாமல் சூழ்நிலை ஏற்படும்.பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தேவையில்லாதகெட்ட பெயர் ஏற்படும்.பொருளாதாரத்தில் கடுமையானஏற்ற இறக்கம் இருக்கும். எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற இனம் புரியாத மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.

  திருமணம்: இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பெயர்ச்சி யாவதால் திருமணத் தடை அகலும். ராசி அதிபதி சனியின் பார்வையும் தன ஸ்தானத்தில் பதிவதால் கும்ப ராசி இளைஞர்கள், இளைஞிகளுக்கு திருமணம் நடைபெறும்.

  பெண்கள்: குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும். புதியஅணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.வீட்டில் அமைதி நிலவும், உல்லாச பயணம் செல்லக்கூடிய நேரம். சுற்றுலா சென்று ஆனந்தம்அடைவீர்கள்.கணவன் மனைவி கருத்துஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து செல்வதால்இல்லறம் நல்லறமாகும்.

  பரிகாரம்: குளத்து மீன்களுக்கு அரிசிப் பொரி இட பொருள் வரவு அதிகரிக்கும். உடல் ஊனமுற்றோருக்கு தயிர் சாதம் தண்ணீருடன் வழங்க குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×