என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024

    பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும் நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். கடன்சுமை குறையும். தொழில் வளர்ச்சிக்கு புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். கட்டிடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024

    நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. கடனாகக் கொடுத்த பணம் திரும்பி வரலாம். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024

    நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். கூட்டுத்தொழில் லாபம் தரும். |இடம், பூமி வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவிகரமாக இருப்பர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். போன் வழித்தகவல் பொருள் வரவிற்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024

    முன்னேற்றப் பாதையை நோக்கி செல்ல முக்கியப் புள்ளிகள் வழிகாட்டும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2024

    எதையும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து செய்ய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் பிரச்சனைகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2024

    அலைச்சல் அதிகரிக்கும் நாள். விழிப்புணர்ச்சி தேவை. கடன்சுமை அதிகரிக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம் தான்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2024

    வழிபாட்டால் வளர்ச்சியைக் காணவேண்டிய நாள். கவனக்குறைவால் பொருள் விரயம் ஏற்படலாம். நண்பர்கள் மனம் கோணாது நடந்து கொள்வது நல்லது. வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2024

    நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலை தரும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024

    முயற்சி கைகூடும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். உறவினர்கள் இல்லம் தேடி வரலாம். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறலாமா என்று சிந்திப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024

    உடல்நலனில் கவனம் தேவைப்படும் நாள். உடன்பிறப்புகளை அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024

    எடுத்த முயற்சி எளிதில் நிறைவேறும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகள் விலகுவர். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    ×