என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 26 டிசம்பர் 2024

    பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகும் நாள். புதிய முயற்சி வெற்றி தரும். பொருளதார முன்னேற்றம் உண்டு. அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 25 டிசம்பர் 2024

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளமிடும் நாள். அன்பு நண்பர்களின ஆதரவு பெருகும். தொழில் சம்மந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 24 டிசம்பர் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகள் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 23 டிசம்பர் 2024

    அதிக விரயங்களால் அமைதி குறையும் நாள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 22 டிசம்பர் 2024

    எதிரிகளின் பலமறிந்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்புகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். ஆசைப்பட்ட பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும். 

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024

    குழப்பங்கள் அகலும் நாள். குடும்பப் பிரச்சனைகள் தீரும். நண்பர்கள் நல்ல தகவலைக்கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். 

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களை நம்பி செயல்பட வேண்டாம். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் ஏற்படலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024

    நடக்காது என்று நினைத்த காரியம் கூட நடைபெறும் நாள். வியாபாரம் போட்டிகளை சமாளிப்பீர்கள். மதிய நேரத்திற்குப் பிறகு எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். திடீர் முன்னேற்றம் உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாகும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024

    ஆரோக்கியத் தொல்லை அகலும் நாள். அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். எதிரிகளை அனுசரித்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024

    நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். வரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வீர்கள். எதிரிகள் விலகுவர். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024

    தனவரவில் இருந்த தடை அகலும் நாள். நீண்ட நாட்களாக நிறைவேறாத காரியம் இன்று நிறைவேறும். அலைபேசி வழித்தகவல் ஆனந்தமளிக்கும். உத்யோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    ×