டென்னிஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

Update: 2023-05-18 11:55 GMT
  • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

ரோம்:

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியி செர்பிய வீரர் ஜோகோவிச், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் முதல் செட்டை ரூனே வென்றார். இதற்கு பதிலடியாக ஜோகோவிச் இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரூனே வென்றார்.

இறுதியில், ரூனே 6-2, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

முன்னணி வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து இத்தாலியன் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News