2K AMOLED டிஸ்ப்ளே, அசத்தலான கேமராவுடன் சியோமி 13 அல்ட்ரா அறிமுகம்
- சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் நான்கு கேமரா சென்சார்களை கொண்டுள்ளது.
- புதிய சியோமி 13 அல்ட்ரா மாடலில் 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சியோமி 13 அல்ட்ரா மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.73 இன்ச் 2K AMOLED 1-120Hz LTPO C7 டிஸ்ப்ளே, HDR10+, டால்பி விஷன், அதிகபட்சம் 2600 நிட்ஸ் பிரைட்னஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் லிக்விட் கூல் தொழில்நுட்பம் உள்ளது. மேலும் 50MP குவாட் கேமரா சென்சார்கள், லெய்கா ஆப்டிக்ஸ் உள்ளது. இதில் 1-இன்ச் அளவு கொண்ட IMX989 50MP 23mm லெய்கா பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது F/1.9 மற்றும் f/4.0 2-ஸ்டாப் அப்ரெச்சர் ஸ்விட்ச் வசதி கொண்டிருக்கிறது.
இத்துடன் 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா, 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி 13 அல்ட்ரா அம்சங்கள்:
6.73 இன்ச் 3200x1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் AMOLED, HDR10+ டிஸ்ப்ளே
2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU
12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
16 ஜிபி ரேம், 512 ஜிபி, 1 டிபி மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14
50MP பிரைமரி கேமரா, 1 இன்ச் சோனி IMX989 சென்சார்
50MP சோனி IMX858 அல்ட்ரா வைடு லென்ஸ்
50MP சோனி IMX858 டெலிபோட்டோ கேமரா
50MP சோனி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஹைரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
50 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சியோமி 13 அல்ட்ரா (12 ஜிபி + 256 ஜிபி) மாடல் விலை 5,999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 71 ஆயிரத்து 545
சியோமி 13 அல்ட்ரா (16 ஜிபி + 512 ஜிபி) மாடல் விலை 6,499 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 77 ஆயிரத்து 545
சியோமி 13 அல்ட்ரா (16 ஜிபி + 1 டிபி) மாடல் விலை 7,299 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 090
சியோமி 13 அல்ட்ரா மாடல் பிளாக், வைட் மற்றும் ஆலிவ் கிரீன் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. சீன வெளியீட்டை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் அடுத்த சில மாதங்களில் உலகளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என சியோமி உறுதியளித்து இருக்கிறது.