புதிய கேஜெட்டுகள்

சியோமி 13 அல்ட்ரா வெளியீட்டில் திடீர் மாற்றம்

Published On 2023-01-16 06:40 GMT   |   Update On 2023-01-16 06:40 GMT
  • சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சியோமி 13 சமீபத்தில் அறிமுகமானது.
  • இதன் டாப் எண்ட் வெர்ஷன் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாக துவங்கி விட்டன.

கடந்த மாதம் சியோமி நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் சியோமி 13 மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் சர்வதேச வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் நடைபெற இருக்கிறது. தற்போது சியோமி 13 சீரிசில் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ என இரு மாடல்கள் மட்டுமே உள்ளன. எனினும், மூன்றாவதாக சியோமி 13 அல்ட்ரா மாடல் இருப்பதாக புது தகவல்கள் இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கின்றன.

இதுதவிர சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் முக்கிய ஃபிளாக்ஷிப் மாடலாக சீனா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யும் திட்டம் இருப்பதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்தே சியோமி 13 அல்ட்ரா வெளியீடு சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரபல டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் இதற்கு முற்றிலும் முரணான தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.

சீனா புத்தாண்டை தொடர்ந்து ஒப்போ ஃபைண்ட் X6 மற்றும் ஹானர் மேஜிக் 5 சீரிஸ் மாடல்கள் வெளியிடப்படும். ஜனவரி 22 ஆம் தேதி சீனா புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடல் பிப்ரவரி மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றே தெரிகிறது. என்ற போதிலும், சியோமி 13 அல்ட்ரா இந்த காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படாது என டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாத வாக்கில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் சியோமி 13 அல்ட்ரா அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும், சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ மாடல்கள் நிச்சயம் அறிமுகமாகின்றன. இதனை சியோமி அறிவித்துவிட்டது. சீன வலைதளங்களில் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமி 13 அல்ட்ரா விற்பனை மார்ச் மாத மத்தியிலோ அல்லது ஏப்ரல் மாதத்திலோ துவங்கும் என கூறப்படுகிறது. 

Tags:    

Similar News