புதிய கேஜெட்டுகள்

12 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் அறிமுகமான புதிய விவோ ஸ்மார்ட்போன்

Published On 2023-04-24 16:21 GMT   |   Update On 2023-04-24 16:21 GMT
  • விவோ நிறுவனத்தின் புதிய Y78+ 5ஜி ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
  • புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் கொண்டிருக்கிறது.

விவோ நிறுவனம் தனது புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன்: Y78+ மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய Y78+ மாடலில் 6.78 இன்ச் Full HD+ 120Hz AMOLED வளைந்த ஸ்கிரீன், 8MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

 

விவோ Y78+ 5ஜி அம்சங்கள்:

6.78 இன்ச் 2400x1080 பிக்சல் Full HD + AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

அட்ரினோ 619L GPU

8 ஜிபி, 12 ஜிபி ரேம்

128 ஜிபி, 256 ஜிபி மெமரி

டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆரிஜின் ஒஎஸ் 3

50MP பிரைமரி கேமரா

2MP டெப்த் சென்சார்

8MP செல்ஃபி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

யுஎஸ்பி டைப் சி ஆடியோ

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6

ப்ளூடூத் 5.2

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

விவோ Y78+ 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1599 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரம் என்று துவங்குகிறது. சீன சந்தையில் இதன் விற்பனை ஏப்ரல் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Tags:    

Similar News