புதிய கேஜெட்டுகள்

120 வாட் சார்ஜிங் வசதியுடன் விவோ X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

Update: 2022-11-23 05:15 GMT
  • விவோ நிறுவனத்தின் புதிய X90 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் வழங்கப்படுகிறது.
  • மேலும் விவோ X90 ப்ரோ ஸ்மார்ட்போனில் அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. விவோ X90 மற்றும் விவோ X90 ப்ரோ மற்றும் X90 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன. விவோ X90 மற்றும் விவோ X90 ப்ரோ மாடல்களில் 6.78 இன்ச் 1.5K BOE 120Hz AMOLED ஸ்கிரீன், விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலில் சாம்சங்கின் 2K+ E6 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ X90 மற்றும் விவோ X90 ப்ரோ மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிராசஸர், விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் மற்றும் டூயல் வேப்பர் சேம்பர் கூலிங் உள்ளது. புகைப்படங்களை எடுக்க விவோ X90 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 12MP போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

விவோ X90 ப்ரோ மற்றும் விவோ X90 ப்ரோ பிளஸ் மாடல்களில் 50MP பிரைமரி கேமரா, 50MP போர்டிரெயிட் கேமரா உள்ளது. விவோ X90 ப்ரோ மாடலில் 12MP சென்சாரும், விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலில் 48MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ X90 ப்ரோ பிளஸ் 64MP ஆம்னிவிஷன் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, OIS வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ X90 மற்றும் விவோ X90 ப்ரோ அம்சங்கள்:

6.78 இன்ச் 2800x1260 பிக்சல் FHD+ BOE Q9 OLED, 120Hz ரிப்ரெஷ் ரேட்

3.05 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் டிமென்சி்ட்டி 9200 பிராசஸர்

இம்மார்டலிஸ் G715 GPU

8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒரிஜின் ஒஎஸ் 3.0

டூயல் சிம்

விவோ X90 ப்ரோ - 50MP பிரைமரி கேமரா, OIS, LED ஃபிளாஷ்

12MP அல்ட்ரா வைடு கேமரா

50MP போர்டிரெயிட் கேமரா

32MP செல்ஃபி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

யுஎஸ்பி டைப் சி 3.2 ஜென் 1

விவோ X90 - 4810 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் சார்ஜிங்

விவோ X90 ப்ரோ - 4870 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் 

விவோ X90 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:

6.78 இன்ச் 3200x1440 பிக்சல் குவாட் ஹெச்டி+ E6 AMOLED LTPO ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

அட்ரினோ 740 GPU

12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒரிஜின் ஒஎஸ் 3.0

டூயல் சிம்

50MP பிரைமரி கேமரா, OIS, LED ஃபிளாஷ்

48MP அல்ட்ரா வைடு கேமரா

50MP போர்டிரெயிட் கேமரா

32MP செல்ஃபி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

யுஎஸ்பி டைப் சி 3.2 ஜென் 1

4700 எம்ஏஹெச் பேட்டரி

80 வாட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

விவோ X90 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கிளாஸ் பேக் மற்றும் ரெட் லெதர் பேக் உள்ளது. இதன் விலை 3699 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 42 ஆயிரத்து 300 என துவங்குகிறது. விவோ X90 ப்ரோ மற்றும் விவோ X90 ப்ரோ பிளஸ் மாடல்கள் பிளாக் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் லெதர் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை 4999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 57 ஆயிரத்து 160 என துவங்குகிறது.

சீன சந்தையில் விவோ X90 மற்றும் விவோ X90 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. விற்பனை நவம்பர் 30 ஆம் தேதி துவங்குகிறது. விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 6499 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 74 ஆயிரத்து 315 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு நவம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை டிசம்பர் 6 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

Tags:    

Similar News