புதிய கேஜெட்டுகள்

இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன்

Published On 2022-06-20 12:44 IST   |   Update On 2022-06-20 12:44:00 IST
  • டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் ஃபுல் ஹெச்டி + எல்சிடி டிஸ்ப்ளே உடன் வந்துள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது.

டெக்னோ நிறுவனம் சமீபகாலமாக நல்ல தரமான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகி உள்ளது. டெக்னோ போவா 3 என பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

இந்த போனின் சிறப்பம்சமே அதன் பேட்டரி தான். இது 7,000 mAh பேட்டரியுடன் வருவதால் சார்ஜ் பற்றி பயனர்கள் கவலையே பட வேண்டாம். ஏற்கனவே பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று தான் அறிமுகமாகி உள்ளது. வருகிற ஜூன் 27-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் ஃபுல் ஹெச்டி + எல்சிடி டிஸ்ப்ளே உடன் வந்துள்ளது. இதில் மீடியாடெக் ஜி88 சிப்செட் இடம்பெற்றுள்ளது. இந்த சிப்செட் கேமிங் பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த HiOS இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. 6ஜிபி ரேம் 125ஜிபி இண்டர்னல் மெமரி உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது. அதில் ஒன்று 50 எம்பி பிரைமரி கேமரா மற்ற இரண்டும் 2 எம்பி ஆக்ஸிலரி கேமரா ஆகும். இதுதவிர முன்பக்கம் 8 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் புளூ, டெக் சில்வர், எக்கோ பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News