புதிய கேஜெட்டுகள்

நிறம் மாறும் வசதி கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2022-09-15 11:29 GMT   |   Update On 2022-09-15 11:29 GMT
  • டெக்னோ பிராண்டின் புதிய கேமன் 19 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இது இந்தியாவின் முதல் நிறம் மாறும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் எனும் பெருமையை பெற்று இருக்கிறது.

டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் கேமன் 19 ப்ரோ மாண்ட்ரியன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இது நிறம் மாறும் தன்மை கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். நிறம் மாறும் தன்மையை செயல்படுத்த இதில் பாலிக்ரோமேடிக் போடோஐசோமர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 50MP போர்டிரெயிட் கேமரா, வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.8 இன்ச் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், 8 ஜிபி ரேம், 5 ஜிபி விர்ச்சுவல் ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.


டெக்னோ கேமன் 19 மாண்ட்ரியன் அம்சங்கள்:

6.8 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர்

மாலி G57 MC2 GPU

8 ஜிபி ரேம், LPDDR4X ரேம்

128 ஜிபி UFS 2.2

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹை ஒஎஸ் 8.6

64MP பிரைமரி கேமரா, OIS

50MP போர்டிரெயிட் கேமரா

32MP செல்பி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5 எம்எம் ஆடியோ ஜாக்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

டெக்னோ கேமன் 19 மாண்ட்ரியன் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்குகிறது. இத்துடன் அறிமுக சலுகையாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News