புதிய கேஜெட்டுகள்

சாம்சங்கின் மலிவு விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - வெளியான புது தகவல்

Published On 2024-03-19 14:39 GMT   |   Update On 2024-03-19 14:39 GMT
  • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களிடம் போட்டியை எதிர்கொள்கிறது.
  • குறைந்த விலையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் அன்பேக்டு நிகழ்ச்சியில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவு அதிக பிரபலம் அடைந்து வருகிறது. இதில் சாம்சங் நிறுவனம் ஹூவாய், ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களிடம் போட்டியை எதிர்கொள்கிறது.

அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் புதிய சீரிசை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனம் இந்த முறை இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒதில் ஒன்று அல்ட்ரா பிரான்டிங் கொண்டிருக்கும் என்றும் மற்றொன்று குறைந்த விலையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 


கொரிய நிறுவனமான சிசா ஜர்னல் வெளியிட்டுள்ள தகவல்களில் சாம்சங் தனது குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை இந்த ஆண்டிலேயே அறிமுகம் செய்யும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கேமரா தவிர மற்ற அம்சங்கள் பட்ஜெட் விலையில் இருக்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலையை குறைவாக நிர்ணயிக்க முடியும்.

விலையை பொருத்தவரை சாம்சங்கின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 800 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 66 ஆயிரத்தில் இருந்து துவங்கும் என்று தெரிகிறது. இது தற்போது விற்பனை செய்யப்படும் கேலக்ஸி ஃபோல்டு 5 ஸ்மார்ட்போனின் விலையை விட 50 சதவீதம் குறைவு ஆகும்.

Tags:    

Similar News