புதிய கேஜெட்டுகள்

கோப்புப்படம் 

லீக் ஆன சாம்சங்கின் குறைந்த விலை Foldable போன் விவரங்கள்.. ஒருவேளை இருக்குமோ?

Published On 2024-02-03 09:24 GMT   |   Update On 2024-02-03 09:24 GMT
  • மற்றொரு மாடல் விவரங்களும் இடம்பெற்றுள்ளது.
  • கேலக்ஸி Z ஃபோல்டு 6 சீரிஸ்-உடன் அறிமுகம் செய்யப்படலாம்.

சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், இந்த கேலக்ஸி Z ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனின் என்ட்ரி லெவல் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி Z ஃபோல்டு 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

இதன் மூலம் சாம்சங் நிறுவனம் ஒரே ஆண்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கேலக்ஸி ஃபோல்டபில் சாதனத்தை அறிமுகம் செய்வது முதல் முறையாக இருக்கும். சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி / ஏற்றுமதி டேட்டாபேஸ்-இல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் Z ப்ளிப் 6 மாடல்களுடன் மற்றொரு மாடல் விவரங்களும் இடம்பெற்றுள்ளது.

 

கோப்புப்படம் 


அதன்படி இரு மாடல்களின் குறியீட்டு பெயர் Q6 மற்றும் B6 என சூட்டப்பட்டுள்ளன. இவற்றுடன் Q6A என்ற குறியீட்டு பெயர் கொண்ட சாதனமும் இடம்பெற்று இருக்கிறது. இது சாம்சங்-இன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கப்பட்டு வரலாம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

மேலும் இது சாம்சங்கின் முதல் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. உண்மையில் இத்தகைய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இது பற்றிய தகவல்கள் மட்டும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன.

Tags:    

Similar News