புதிய கேஜெட்டுகள்

விரைவில் இந்தியா வரும் சாம்சங் ஸ்மார்ட்போன் - இணையத்தில் லீக் ஆன விலை விவரங்கள்!

Update: 2023-05-17 13:14 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் சிப்செட் கொண்டிருக்கும் என்று தகவல்.
  • இந்த மாடலில் 108MP பிரைமரி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

அதன்படி சாம்சங் நிறுவனத்தின் புதிய F54 5ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் எக்சைனோஸ் 1380 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2MP சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

இத்துடன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, டூயல் சிம் ஸ்லாட்கள், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5, 6.7 இன்ச் Full HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மெமரியை பொருத்தவரை இந்த மாடல் 128 ஜிபி, 256 ஜிபி என்று இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

விலை விவரங்கள்:

பிரபல டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி F54 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Tags:    

Similar News